Shivanandalahari – Verse 13
13 – ஏழை எமக்கிரங்கும் எழிலான் அடி போற்றி!
भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् |
मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण
स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ||१३ ||
ப்4ரமந்தம் மாமந்த4ம் பரமக்ரு2பயா பாது முசிதம் |
மத3ன்ய: கோ தீ3னஸ் தவ க்ரு2பண ரக்ஷாதிநிபுண:
த்வத3ன்ய: கோ வா மே த்ரிஜக3தி ஶரண்ய: பஸு1பதே ||13 ||
பழியும் பிணியுமுற்று – மடமாகி
துவளும் விழியுமற்ற துயரன் அருளிலிட்டுத்
துணைநந் நிலையிட்ட – துணையேரே
எளியன் எனையும்விட்டு கருணை பெறுகமற்று
எவரே ஆவர்பசு – பதியோனே
ஏழைக் கருளிவிட்டு மூவற் றுடலைவிட்டு
ஏகத் தருளும்நிதி – வேறாரே
(13)
முடிவில் எப்பயனும் தராமல், தன்னை அறிந்து தெளிகின்ற அறிவிற்கும் எந்த வழியும் காட்டாது, துன்பமாகிய பிறவிப் பிணியில் மட்டுமே திணிக்கின்ற ஆசையாகிய மூடமதியினால் அறிவுப் பார்வை இழந்து தவிக்கும் எனக்கு நின் கருணையே துணை! ஏழைப் பங்காளன் நீயல்லவா? நீ கருணை காட்டுவதற்கு, என்னைவிடப் பரம ஏழை வேறு யார் இருக்க முடியும்? எளியவர்களுக்கு அருள் அபயம் தரும் பெரு நிதியும், கதியும் பசுபதியே, உம்மை விட்டால் வேறு யாரே?
குறிப்பு:
மனதால் நினையே நினைத்து ஒழுகும் உயர்நிலையை அடைய விடாமல் ஆசைகள் தடுத்து அதனால் பிறவிப்பிணி தொடர்கிறது. இந்த நிலையே வறுமையிலும் வறுமையாகும். ஏனெனில், அத்தகைய ஆசைத் தொடர், நமக்கு அமைதியெனும் பெரும் செல்வம் இல்லாமல் ஆக்குகிறது. இறைவன்தான் ஏழைப் பங்காளன். நானோ மிகவும் ஏழை! அதனால் ஏழையான என்னிடம் பரிவு காட்டுவது பரம்பொருளின் கடமை. அவரை விட்டால் வேறு யாரே பொறுப்பு!
‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்றார் மணிவாசகர். இறைச் சிந்தனை வருவதற்கும் இறையருள் தேவை. அப்படி இறைச் சிந்தனை துளியேனும் ஏற்பட்டு விட்டால், அதனை இறுகப் பற்றி, பெருக வளர்க்க வேண்டியது நமது கடமை. எனவே முதற்கடமை இறைவனுக்கு உள்ளது.
அவர் நமக்கு, பக்தி எனும் செல்வத்தைத் தரவேண்டும். இதனை ஆழமாக உணர்த்தி, இறைவனிடம் பொறுப்பை விடுவதற்காக, ஏழைகளில் ஏழை தானே என்றும், ஏழைக்கு உதவுபவன் இறைவன் என்பதால், தானே இறைவனின் அருட்பிச்சைக்கு உகந்து நிற்கும் வறியன் என்றும் பகவான் ஆதி சங்கரர் இப்பாடலில் காட்டுகின்றார். (13)