Shivanandalahari – Verse 41
41 – கரணம் கட்டுவித்துக் காக்கும் அருள் போற்றி!
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने |
जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयनश्रोत्रैरहं प्रार्थितो
मामाज्ञापय तन्निरूपय मुहुर्मामेव मा मेऽवचः ||४१ ||
ஸ்தோத்ரத்₄யானனதிப்ரத₃க்ஷிணஸபர்யாலோகனாகர்ணனே |
ஜிஹ்வாசித்தஶிரோங்க்₄ரிஹஸ்தனயனஶ்ரோத்ரைரஹம் ப்ரார்தி₂தோ
மாமாஜ்ஞாபய தன்னிரூபய முஹுர்மாமேவ மா மே(அ)வச: ||41 ||
கோல வலைஓயத் – தளைநீங்கி
ஓத சிவத்யான பாத வலம்பூஜை
காண செவித்தூயத் – துணையேகி
நாவு மனப்போதம் மேவு கரப்பாதம்
ஆகும் விழிக்காதும் – துணையாக
ஏனை நிலையிட்டு வாயில் உனையற்ற
நாவை அவித்தாள்க – நமனீசா
(4)
பாவத்துயரிலிந்து விடுபட்டு நல்விடுதலை அடைய, நான் துதி, மனமுனைவு, அடிபணிதல், வலம் வருதல், காணல், கேட்டல் என முறையே எனது நாக்கு, மனம், தலை, கால்கள், கண்கள், செவிகள் ஆகியவற்றால் உன்னை வேண்டுகின்றேன். என்னுள் அப்படியே நிகழ ஆணையிடுங்கள். என்னை, அவ்விதமான செயல்களிலேயே எப்பொழுதும் நிலைத்திடச் செய்யுங்கள். காலனை வென்றவரே! உம்மைப் பற்றிப் பேசாத வாக்கு, என்னிடமில்லாமல் போகட்டும்.
குறிப்பு:
எல்லாம் இறைவனின் பொருட்டுச் செய்வதாக அமையட்டும் என்பதே கர்ம யோகத்தின் சாரம். அதற்கு நமது உடற்கருவிகளும், அதற்கு ஆதாரமான மனம், புத்தி ஆகிய அந்தகரணங்களும், எப்போதும் இறைவயமாய் இருக்க வேண்டும். முக்கியமாக அந்தகரணங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதற்கான உறுதியை இறைவன் அருள வேண்டும் எனக் கேட்கிறது இப்பாடல்.
இறைவனைப் பற்றிப் பேசாத வாக்கு இல்லாமற் போகட்டும் எனக் கேட்பது, இறைச் சிந்தனை இல்லாத மொழியும், செயலும் பயனற்றது என்பதைக் காட்டத்தான்.
பேச்சு என்பது மனிதர்களுக்கே கொடுக்கப்பட்ட வரம். அது ஒன்றுதான், பொதுவாக, வயது முதிர்ந்தாலும், தளராமல் இருப்பது. பேச்சின் சக்தி, இறைத் தன்மையின்றிப் போய்விட்டால், நச்சான சொற்களால் நாசம் விளைவிக்கும். எனவேதான் பகவான் ஆதி சங்கரர், எல்லாப் பொறிகளும், புலன்களும் இறை வழிபாட்டிலேயே இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்ட பின்னும், இறைச்சிந்தனை அற்ற பேச்சு ஒழியட்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கின்றார். (41)