Shivanandalahari – Verse 78
78 – புதுமணையாள் என்மனதுப் போகன் அடி போற்றி!
सविनयां सुह्र्द्म् सदुपाश्रिताम् |
मम समुद्धर बुद्धिमिमां प्रभो
वरगुणेन नवोढवधूमिव ||७८ ||
ஸவினயாம் ஸுஹ்ரு2த3ம் ஸது3பாஸ்1ரிதாம் |
மம ஸமுத்3த4ர பு3த்3தி4மிமாம் ப்ரபோ4
வர-கு3ணேன நவோட4 வதூ4மிவ ||78 ||
தரந் தரப்பணிய – உபசாரம்
தரும் பணித்துயரத் தகும் பவித்திரமும்
தடம் நலமுதலும் – தவறாதே
மணந் திடுமுவதி எனும் எனதுமதி
மகிழ்ந் தவளுவகை – மடியேறி
வரன் வந்தறிவி னிடம் சொந்தமுறு
பயம் அரிந்துதவு – பரமேசா!
(78)
பெரியோரிடத்தில் சேவை செய்யும் குணமும், தரமும், பணிவும், சரியான நெறியும், தூய்மையும், நந்நோக்கம் கொண்டதுமான எனது அறிவினை, புதிதாக மணமுடித்த பெண்ணின் கவலையைத் தேற்றி, ஏற்றுக் கொள்ளும் மணமகனைப் போல, ஓ, பரமேசா, ஏற்றுக் கொள்.
குறிப்பு:
77-ம் பாடலில் பக்தனது மனதினை, கணவனை நினைத்து ஏங்கும் மனைவிக்கு ஒப்பாகக் காட்டிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில், புதிதாக மணம் சூடிய மங்கைக்கு ஒப்பிட்டு, மங்கையின் கவலைகளைத் துடைத்து ஆறுதல் அளிக்கும் மணாளனாக, சிவபெருமான் எழுந்தருளி, மனதினில் இணைய வேண்டும் என்று வேண்டுகின்றார்.
புது மணப்பெண்ணுக்கு, பெரும் சுக எதிர்பார்ப்புக்கள், ஒருவித பயத்தினோடேயே இழைத்திருப்பதைப் போல, ஶிவானந்த3லஹரீ எனும் பரசிவ சுக வெள்ளத்தை எதிர்பார்த்திருக்கும் பக்தனது மனமும், ஒரு பயம் கலந்த பக்தியினால் தூண்டப்பட்டு இருக்கிறது. எப்படி, மணமகனின் கனிவான ஆறுதல் மணமகளின் பயத்தினை நீக்கி உற்சாகத்தை அளிக்குமோ, அதுபோலவே, பரசிவத்தின் திருவருள் பக்தனின் மனமாகிய மணப்பெண்ணை மணந்து மகிழ்த்துகின்ற மணாளன் ஆகட்டும் என்பதே இப்பாடலின் கரு. (78)