||85 bhavanā ūpaniśad ||

This Upanishad describes the inner meaning of Sri Chakra.

Please see Thripuropanishad to understand the purpose and method of worshiping Sri Chakram.

Please also see Sri Adi Sankara’s Verses on Sri Chakra Bindhu Tharpana Baram.

om bhadraṁ karṇebhiḥ śṛṇuyāma devāḥ |
bhadraṁ paśyemākśabhiryajatrāḥ |
sthirairaṅgaistuṣṭuvāsastanūbhiḥ |
vyaśema devahitaṁ yadāyuḥ |
svasti na indro vṛddhaśravāḥ | svasti naḥ pūṣā viśvavedāḥ |
svasti nastārkśyo’riṣṭanemiḥ | svasti no bṛhaspatirdadhātu |
om śāntiḥ śāntiḥ śāntiḥ ||
svāvidyāpadatatkāryaṁ śrīcakropari bhāsuram |
bindurūpaśivākāraṁ rāmacandrapadaṁ bhaje ||
hariḥ om ||
ātmānamakhaṇḍamaṇḍalākāramavṛtya sakalabrahmāṇḍamaṇḍalaṁ
svaprakāśaṁ dhyāyet | śrīguruḥ sarvakāraṇabhūtā śaktiḥ || 1||
தானே ஒளிரும்
தன்னொளியால் தனைச்சுற்றும் – புவனம் எல்லாம்
தானே ஒளிரும்
தகைமையது ஆத்மஓளி – தியானம் செய்வாம்
ஞானகுரு வடிவமிதே
யாதினிக்கும் காரணமாம் – நயமுடனே தெய்வமிதே
தியானம் செய்வோம்
tena navarandhrarūpo dehaḥ || 2||
ஒன்பதெனும் துவாரமுடல் உறையும் தெய்வம்
என்பதறி இதனில்வரும் குருவின் உருவம்
navacakrarūpaṁ śrīcakram || 3||
ஒன்பது சக்கரத்தின் வடிவிலான
ஸ்ரீசக்கர உண்மையிது உணர்வதாகும்

vārāhī pitṛrūpā kurukullā balidevatā mātā || 4||
வராஹி எனும் வடிவம் தந்தையாகும்
வல்லவி குருகுல்லா அன்னை யாகும்
பெறுபலி மாதாவின் தேவையாகும்
பேரருளும் தியாகமிந்தச் சேவையாகும்
puruṣārthāḥ sāgarāḥ || 5||
அறம் பொருளின்ப வீடெனும் நான்கும்
ஆர்ப்பரித்து சூழ்கின்ற கடல்கள் ஆகும்
deho navaratnadvīpaḥ || 6||
உடலிதுவே கடல்படிந்த நவரத் தினங்கள்
உறைகின்ற நிலங்களது உண்மையாகும்

tvagādi saptadhāturomasaṁyuktāḥ || 7||
தோல் கொழுப்பு சதை எலும்பு
துடிநரம்பு மேதையுடன் மஜ்ஜைஏழு
மேல் வளரும் மயிரோடு ஓஜஸென்ற
உயிர்மூச்சு நவரத்தின உறைக ளாகும்

saṁkalpāḥ kalpataravastejaḥ kalpakodyānam || 8||
கைக்கொள்ளும் தீர்மானம் கற்பகத் தருக்கள்
கடிமனத்தின் ஒளியிடையே கற்பக வனங்கள்

rasanayā bhāvyamānā madhurāmla tikta-kaṭu-kaṣāya-lavaṇarasāḥ ṣaḍṛtavaḥ || 9||
இனிப்பு புளிப்பு கசப்போடு
கார்ப்பு துவர்ப்பு உவர்ப்பாகும்
சுவையாறு வகையாவும்
வருமாறு பருவங்களாகும்

jñānamardhyam jñeyam havirjñātā hotā
jñātṛjñānajñeyānāmabhedabhāvanam śrīcakrapūjanam || 10|| (upto 1)
யாகமாய் நடக்குமிந்த யோகத்தில்
ஞானமே அவிர்ப்பணமாகும்
அறிந்தவையே நிவேதனம்
அறிந்தளிப்பவனே தியாகி
அறிவுக்கும், அறிந்ததற்கும், அறிந்தோனுக்கும்
அடையாள வேறுபாடு இல்லைஎன்றே
தெரிந்துணரச் செய்கின்ற பூஜையாகும்
ஸ்ரீசக்கர வழிபாட்டு உண்மையாகும் (10)

niyatiḥ śrṛṅgārādayo rasā aṇimādayaḥ || 11||
விதிஎனவும் உருவாக்கும் காதல் ரசமெனவும்
அணிவரும் சித்தி அனிமா உடனே

kāmakrodhalobhamohamadamātsaryapuṇyapāpamayā brāhmyādyaṣṭaśaktayaḥ || 12||
ஆசை, சினம், ஆகும்பயம், வெறுப்பு,
வீரம், நகை, வியப்பு, கருணை யுடன்
ஒன்றிய அமைதி ஒன்பது உணர்வும்
ஒனபதும் சேரப் பத்தாயினநற் சித்திகளாகும்

ādharanavakam mudrāśaktayaḥ || 13|| (2)
மூலாதாரம் முதலாய் ஆறும்
மேலும் கீழும் மெலியுங் கழுத்தும்
உள்நாக்கெனவும் ஒன்பது இடமும்
முக்கியமான முத்திரைத் தடங்கள்

pṛthivyaptejovāyvākāśaśrotratvakcakśurjihvaghrāṇa-
vākpāṇipādapāyūpasthāni manovikārāḥ kāmākarṣiṇyādi ṣoḍaśa śaktayaḥ || 14|| (3)
நிலமும் நீரும் தீவளியும் வெளியும்
தோலும் நாக்குவிழி நாசியொடு செவியும்
கரமும் கால்குதமும் குறிமனசஞ் சலமும்
வரமிகு பதினாறு சக்திகளாய் ஆகும்
காம கர்ஷினி அதில்முதலாம் சக்தி
ஆகுமிதழ் பதினாறாய ஆனதிந்த யுக்தி

vacanādānāgamanavisargānandahānopādānopekśākhya-
buddhayo’naṅgakusumādyaṣṭau || 15|| (4)

பேசுதல், கொள்ளுதல், நடத்தல் கழிவுதனை
வீசுதல் கலவிக் களித்தல் என்றைந் தொடு
பெறுதலும், தியாகமென விடுதலும் பின்னுணர்ந்து
ஒட்டாதிருந் தொழுகலும் எனமூன்றும்
அனங்க குஸூமா ஆனமுத லான
அட்ட சித்திகள் ஆகும் அடையாளம்

alambusā kuhurviśvodarā vāraṇā hastijihvā yaśovatī payasvinī
gāndhārī pūṣā śaṅkhinī sarasvatīḍā piṅgalā suṣumnā ceti
caturdaśa nāḍyaḥ sarvasa’kśobhiṇyadi caturdaśaśaktayaḥ || 16|| (5)
ஆலம்புஷா குஹூ விச்வோதரா வாரணா
ஹஸ்தி யசோவதீ பயஸ்வினீ காந்தாரி
பூஷா சங்க்கினி சரஸ்வதி இடைகலை
பிங்கலை ஸுஷூம்னை என உடலோடு
பதிந்து ஓடும் பதினான்கு நாடிகளே
வதிந்த சக்திகளின் வடிவுபதி னான்காகும்
ஸர்வசம் க்ஷோபினி முதலான பதினான்கு
சக்திகளின் உருமானம் உள்ளோடும் உயிர்நாடி

prāṇāpānavyānodānasamānanāgakū|rmakṛkaradevadattadhanaṁjayā
daśavāyavaḥ sarvasiddhipradādibahirdaśāragā devatāḥ || 17|| (6)
பிராணன், அபானன், வியானன்,
உதானன், சமானன், நாகன்,
கூர்மன், கிருகரன், தத்தன்,
தனஞ்சயன் எனும் இப்பத்தும்
வாயுக்கள் உடலின் வைத்த
வரைமுக் கோணம் தைத்த
தேவதை சர்வசித் தான
தெய்வங்கள் ஆனசம் பத்து

etadvāyusaṁsargakopādhibhedena [ -vāyudaśakasaṁsargopādhi-]
recakaḥ pācakaḥ śoṣakodāhakaḥ plāvaka iti prāṇamukhyatvena
paṁcadhā jaṭharo’gnirbhavati || 18||
மேனியுள் மேவிய நெருப்பு
மேற்படும் பிராணனின் பொறுப்பு
ஊனுடன் வாயுவைந் தெரியும்
உயிர்த் தொழிலாவன புரியும்
ரேசகம் பாசகம் என்றும்
சோஷகம் தாஹகம் என்றும்
ப்லாவகம் ஆன இவ்வைந்தும்
பயனளிப் பனவுடல் நின்று

kśāraka uddhārakaḥ kśobhako jṛṁbhako mohaka iti nāgaprādhānyena
pañcavidhāste [ kśārako dārakaḥ kśobhako mohako jṛmbhaka
ityapālanamukhyatvena pañcavidho’sti tena ] manuṣyāṇāṁ
dehagā bhakśyabhojyaśoṣyalehyapeyātmakapañcavidhamannaṁ pācayanti ||19||
க்ஷாரகமுத் தாரகம் க்ஷோபகம்
ஜ்ரும்பஹம் மோஹகம் என்றந்தும்
மெல்லிய வாயுவாய் மெலிந்து
மேனியுள் கடமைகள் புரியும்
புசித்தவை கடித்திட, அரைத்திட
புரிபட நாக்கினில் நக்கிட
ருசிப்பட குடித்திட பிரித்திடும்
நுண்ணிய சீரணம் ஆக்கிடும்

etā daśavahnikalāḥ sarvajñatvādyantardaśāragā devatāḥ || 20|| (7)
இப்படியாய் பத்தாய் இருக்கின்ற வாயுக்கள்
ஒப்பினிலே உள்ளே உளபத்து முக்கோணச்
சாட்சியிலே வைத்த ஸர்வக்ஞா முதலான
ஆட்சிபெறும் தெய்வங்கள் ஆனதறி வாகாதோ

śītoṣṇāsukhaduḥkhecchāsattvarajastamoguṇā vaśinyādiśaktayo’ṣṭau || 21|| (8)
குளிரும் வெயிலும்
களிப்பும் துயரும்
ஆசையும் அடிப்படர்ந்த
அருங்குணங் களான
சத்துவமும் ராஜசமும்
தாமசமும் ஆகுமெட்டும்
வாஹினி எனவைத்த
வல்லிய பெரும்சக்தி

śabdādi tanmāttrāḥ paṁcapuṣpabāṇāḥ || 22||
mana ikśudhanuḥ || 23||
rāgaḥ pāśaḥ || 24||
dveṣo’ṅkuśaḥ || 25||

ஒலியும் மணமும் ஒளிஊறும் சுவைஐந்தும்
வலிய மலரம்பு வகுமனமே கரும்பில்வில்
நெளியும் ஆசைகளே நீள்கயிறு நிர்ணயமே
தெளியும் அங்குசமே தேவியருள் உபகரணம்

avyakta mahadahaṅkāra iti kāmeśvarī
vajreśvarī bhagamālinyo’ntastrikoṇāgragā devatāḥ || 26|| (9)

இயற்கை, இன்னறிவு, ‘இதுநான்’ இருமாப்பு
பயத்த முச்சக்திகளே படரும் உள்முக்கோணம்
நயத்த நாயகியர் காமேச்வரி வஜ்ரேச்வரி பகமாலினி என
வியத்தவி வேகத்தை வெளிப்படுத்தும் கோணங்கள்

nirupādhikasaṁvideva kāmeśvara || 27||
பிடிப்பேதும் இல்லாத பிரம்ம ஞானமே
பிந்துவடிவான சிவ காமேச் வரராகும்

sadānandapūrṇa svātmeva paradevatā lalitā || 28||
தனியனாய் இனியனாய் தன்னுள்ளே நிறைவனாய
முனிவனாய் சுகநிலை முற்றும் உணர்வனாய்
இருப்பவன் ஆத்மனின் இலக்கினை அடைந்தவன்
இப்பயன் இவனில் லலித லாவண்யமே

lauhityametasya sarvasya vimarśa || 29|| (10)
செந்நிறம் சந்நிதி
சிவனுமைப் பரகதி
தன்னிலை தெளிந்திடும்
முன்னிரு கண்ணாடி

ananyacittatvena ca siddhiḥ || 30||
bhāvanāyāḥ kriyā upacāraḥ || 31||
இவ்வறிவால் ஒன்றுதலே சித்தி
இவ்வறிவால் உருவமைதல் உபசாரம்

ahaṁ tvamasti nāsti kartavyamakartavyamupāsitavyamiti
vikalpānāmātmani vilāpanam homaḥ || 32||
bhavanāviṣayāṇāmabhedabhavanā tarpaṇam || 33||
நான்என்றும் நீஎன்றும் பேதங்கள் இன்றி
இருப்பனவே இல்லையெனும் மயக்கங்கள் குன்றி
செய்வனவும் செய்பொருளும் செயற்பாடும் ஒன்றி
உய்யும் உயிர் ஒன்றுபடச் செய்யும்விதம் நன்று.
அவ்விதமே செய்விதமே அறிவார்ந்த யாகம்
அதனாலே பெருஞ்சக்தி அடையாள யோகம்.

paṁcadaśatithirūpeṇa kālasya pariṇāmāvalokanam || 34||
முழும்தியும் முழுஇரவும் மாறிவருங் கோலம்
முகமதியாய் சக்திபதி னைந்துதிதிக் காலம்
வருவதனைப் பார்த்து வாழ்ந்துவரும் காட்சி
வடிவத்தை உணர்கின்ற ஜீவனுயிர் சாட்சி

evamṁ muhūrtatritayaṁ muhūrtadvitayaṁ
muhūrtamātraṁ vā bhāvanāparo jīvanmuktto bhavati |
sa eva śivayogīti gadyate || 35||
kādimatenāntaścakrabhāvanāḥ pratipāditāḥ || 36||
ya evaṁ veda so’tharvaśiro’dhīte || 37|| (11)
ஒழுக்கத்தால் மும்முறையோ இரண்டோ ஒன்று
ஒன்றியஓர் முகூர்த்தத்தில் நிலைத்து நின்று
பாவனையாய் ஸ்ரீசக்ர பாவ மான
பரநிலையைத் தருமுடலைப் பாவித்தாலே
ஜீவனவன் சிவமுக்தன் ஆவனென்றே
சிவயோகி சிவமாகிச் செயிப்பதென்றே
ஆவதருள் உண்மையிதை அறியத் தந்த
காதிமத வேதமிதை கற்கத் தந்தோம்
யாரிதனை வேரறிய அறியக் கற்றார்
அதர்வமறை அறிகின்ற சீடரா னார்
பேரரியப் பேசுநிலை அறியக் கற்றும்
பாவனா உபநிடதம் இனிதே முற்றும்
ityupaniṣat ||
om bhadraṁ karṇebhiḥ śṛṇuyāma devāḥ |
bhadraṁ paśyemākśabhiryajatrāḥ|
sthirairaṅgaistuṣṭuvāsastanūbhiḥ |
vyaśema devahitaṁ yadāyuḥ|
svasti na indro vṛddhaśravāḥ |
svasti naḥ pūṣā viśvavedāḥ|
svasti nastārkśyo’riṣṭanemiḥ |
svasti no bṛhaspatirdadhātu|
om śāntiḥ śāntiḥ śāntiḥ ||

|| iti bhāvopaniṣat ||

Related Posts

Share this Post