Sivapuranam by Manickavasagar (91-95)
91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 92. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 94. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 95. பல்லோரும் ஏத்தப் பணிந்து. ‘ஓ, துன்பங்களை அறுப்பவனே’ என்றெல்லாம் சொற்களால் சொல்லி விளக்க முடியாதவனை (சொல்லற்கு அரியானை), சொல்லினால் சுட்டிக் காட்டி (சொல்லி), இறைவனின் திருவடிகளில் பணிந்து (திருவடிக் கீழ்), இங்கே சொல்லிய சிவபுராணம் எனும் திருவாசகப் பாடலின் பொருளை (சொல்லிய பாட்டின் பொருளை), ஏற்ற வகையில் சரியாக உணர்ந்து (உணர்ந்து) சொல்லுகின்ற மெய்யடியார்கள் (சொல்லுவார்), உண்மையின் (சிவபுரத்தின்) மையத்தில் எப்பொழுதும் உள்ளவரான (உள்ளார்)