Sivapuranam by Manickavasagar (41-43)

41. ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் பிறப்பு (ஆக்கம்), எல்லை (அளவு), அழிவு (இறுதி) இல்லாத நிலையான உண்மையே (இல்லாய்)!    அறியவும், அறியவும் முடியாத எல்லா உலகங்களையும் (அனைத்து உலகும்), முதலும், முடிவும் இல்லாதது பரம்பொருள். காரண-காரியம் எனும் செயல்-விளைவு வாதத்தால், உலகில் எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணத்தைத் தேடுதல் அறிவியல். எனினும் அவ்வாதம், முற்றுப் பெறாதாது என்பது அறிவியலிலும் உறுதிப்படுத்தப்பட்டது. காரண-காரிய வாதங்களுக்கும் உட்படாத முதற்காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்பதும் அறிவியல் கண்ட பாடம். தோற்றத்தைத் துருவி ஆராய்ந்து, முதலில்லா ஒன்று இருப்பது அனுமானிக்கப்படுவது போலவே, விளைவுகளைத் தொடர்ந்து ஆய்ந்தாலும், முடியாத ஒன்று

Read More

Sivapuranam by Manickavasagar (39-40)

39. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே எந்த அறிவும் (எஞ்ஞானம்)  இல்லாத எனக்கும் (இல்லாதேன்) மாறாத இன்பத்தைத் தருகின்ற பெரியோனே (இன்பப் பெருமானே). 40. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே அறியாமை (அஞ்ஞானம்) என ‘நான் யார்’ எனத் தவறாகத் தருகின்ற இருளை (தன்னை) அகற்றும் (அகல்விக்கும்) ஒளியாகிய உயர்வான அறிவே (நல் அறிவே). அறிவின் நிலை ஒருவருக்கு எப்படி மாற வேண்டும் எனும் உண்மை இவ்வரிகளில் அடங்கியிருக்கிறது. எந்த அறிவும் இல்லை என்றால் என்ன பொருள்? வேதங்கள் அறிவினை, ‘அபரஞானம்’, ‘பரஞானம்’ என இரண்டாகப் பிரிக்கின்றன. பரஞானம் அல்லது மேலான அறிவு என்பது, பரம்பொருளை ஆத்மாவாக

Read More

Sivapuranam by Manickavasagar (33-38)

33. உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற விடுதலை அடைய (உய்ய) என்னுள்ளே (என்னுள்ளத்துள்) பரவியிருக்கும் உயிர்விசையாய் (ஓங்காரமாய் நின்ற) 34.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் உண்மையானவனே (மெய்யா), களங்கமற்றவனே (விமலா), காளைமேல் அமர்பவனே (விடைப்பாகா), திருமறைகள் எல்லாம் (வேதங்கள்) ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே தலைவா என முழு ஈடுபாட்டுடன் அழைக்க (ஐயா என ஓங்கி) ஆழ்ந்தும், விரிந்தும் (ஆழ்ந்து அகன்ற), அருகான பொருளே (நுண்ணியனே) தந்நிலை அறிந்து வீடுற்ற காரணத்தினால், ‘உய்ய’ – அதாவது சம்சாரம் எனும் துன்பத்திலிருந்து, விடுபட்டு மேல் எழும்ப, இறைவன் என் உள்ளத்துக்குள், இப்போது,  ‘ஓம்’ எனும் ‘மூலப் பொருளாக’,

Read More

Sivapuranam by Manickavasagar (32)

32. மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் இறைவன் எனும் உண்மையே (மெய்யே), உனது பொன்னான திருவடிகளைக் கண்டதால் (உன் பொன்னடிகள் கண்டு), அக்கணமே (இன்று), தந்நிலை அடைந்தேன் (வீடு உற்றேன்). உண்மை அறிவினை அடைந்த பயனாக, இறைவனை ‘மெய்யே’ என அழைக்கின்ற பக்குவத்தைக் காட்டுகின்றார் ஆசிரியர்.  எத்தனையோ பெயர்களும், உருவங்களும் கொடுத்து வணங்கப்பட்ட இறைவனை, இறுதியாக, ‘உண்மை என்பதே இறைவன்’ என்று உணர்ந்து, அதனால் ‘மெய்யே’ என அழைக்கிறார்.  உண்மையை எவராலும் மறுக்க முடியாது அல்லவா? எனவே, உண்மையே இறைவன் என்றால், அச்சக்தியை மறுப்பது ஏது!   இறையுணர்வினால் கிடைத்த அனுபூதியின் விளைவே, இறைவனது ‘பொன்னடிகள்

Read More

Sivapuranam by Manickavasagar (25-31)

25. பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் தீவினைகளை உடைய நான் (பொல்லா வினையேன்), உனது புகழ் எதனையும் (புகழுமாறு ஒன்று) அறியாதவனாக இருக்கிறேன் (அறியேன்). ஏன் மாணிக்கவாசகரால், எல்லையற்ற இறைவனின் புகழைப் பாட முடியவில்லையாம்?  தாம் தீய வினைகளினால் அறியாமையில் கிடப்பதால், இறைவனது பெருமைகளில் எதனையும் அறியாதவனாக இருக்கின்றேன் என அவர் கூறுகின்றார். பரஞானியான மாணிக்கவாசகர், இப்படித் தம்மைத் தாழ்த்திக் கொள்வது, முற்றிய கதிர் வளைவது போல, முதிர்ந்த அறிவால் கொண்ட பணிவுதான் என உணர்வோம். தம்முள்ளேயே இறைச் சக்தி இருந்தும், அவ்வுண்மையை உணராமல் நாம் வாழ்நாளை வீணே கழிக்கிறோம். இதன் காரணம்,  ஆத்ம ஒளியைத்  தீய

Read More

Sivapuranam by Manickavasagar (21-24)

21. கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி நெற்றிக் கண்ணை உடைய பெருமான் (கண் நுதலான்), தன்னுடைய திருவருளை, எமது விழிகளில் காட்டுவதற்காக (தன் கருணைக் கண் காட்ட) எமை வந்து அடைந்தான் (வந்து எய்தி) நுதல் என்பதற்கு நெற்றி என்பது ஒரு பொருள்.  சிவபெருமான், நெற்றிக் கண்ணுடன் ‘முக்கண்ணன்’ என விளங்குகிறார்.  நெற்றிக் கண்ணைத் திறந்தால், எல்லா உலகங்களும் அழிந்து விடும், அக்கண், ஊழிக் காலத்தில் திறப்பது, அக்கண்ணின் தீயிலேதான் காமன் அழிந்தான் என்றெல்லாம் புராணங்கள் காட்டுகின்றன. அழிக்கின்ற கண்களோ, சிவபெருமானின் கருணைக் கண்கள்! அல்ல! நுதற்கண்ணே முதற்கண்.  அதுவே முடிவுக்கண்.  அக்கண்,  ஈரற்றதான ‘அத்வைத’

Read More

Sivapuranam by Manickavasagar (15-20)

15.சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி திருப்பெருந்துறையில் இருக்கும் (பெருந்துறை) மன ஒழுக்கத்தை விளைக்கும் (சீரார்), நமது தலைவனின் (நம் தேவன்) திருவடிகளைப் பணிவோம் (அடி போற்றி). மாயப் பிறவியை அறுக்கும் வாள், இறைவனின் தாள் என்று பணிந்தவுடனே, நமது தலைவனாகிய இறைவனது திருவடிகளே,  மனச் சீர்மையைத் தருகின்ற பெரிய இடமாக, நமக்குத் தெளிகின்றது. எனவே, எங்கே மனம் சீர்மை அடைகின்றதோ, அங்கேதான் ‘திருப்பெருந்துறை’ இருக்கின்றது.  அங்கேதான் தேவனின் திருவடிகள் மிளிர்கின்றது.  திருவாகிய மிகப் பெரும் செல்வம், பெருகி இருக்கின்ற இடமே திருப்பெருந்துறை. அதுவே ஆன்மா சுடர்விடுகின்ற ஆழ்மனக் கோவில். 16. ஆராத இன்பம் அருளும் மலை

Read More

Sivapuranam by Manickavasagar (11-14)

11. ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி! இவ்வரிகளில் மாணிக்கவாசகர், இறைவனது திருவடிகளைக் கூவித் தொழுகின்ற பெரும் மகிழ்ச்சி தெரிகின்றது. 12. தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி! இறைவனின் திருடிகளைப் பணிவோம் (ஈசன் அடி போற்றி), என் தந்தையின் திருவடிகளைப் பணிவோம் (எந்தை அடி போற்றி) ‘தேசன்’ என்பதற்கு இரு பொருள் உள்ளன. ‘தேஜ்’ எனும் வடமொழிச் சொல்லின் திரிபாக, ‘ஒளியாகிய இறைவன்’ என்பது ஒரு பொருள். எனவே, ‘தேவதேவம்’ அல்லது ‘ஒளிக்கு ஒளியான சக்தி’ என வேதங்கள் அழைக்கின்ற சிவபிரானை, ‘ஒளியே’ என்று மாணிக்க வாசகர் அழைக்கின்றார். மற்றொரு வகையில் ‘தேச’ எனும் சொல்லை ‘வெளி அல்லது

Read More

Sivapuranam by Manickavasagar (08-10)

08. புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க அகப்படும் சிவத்தை உணராமல், இறைச் சிந்தனையை மனதில் கொள்ளாதவர்களுக்கு (புறத்தார்க்கு), எட்டாத் தொலைவில் இருப்பவனான (சேயோன்) இறைவனின் மலர்ப்பாதங்களைப் (தன் பூங்கழல்கள்) பணிவோம். ‘சேயோன்’  எனும் சொல்லுக்கு, சிவன், சிறந்தவன், சிவந்தவன், எட்ட முடியாத் தொலைவில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் உண்டு. இறைச் சிந்தனை ஊறிய உள்ளத்தில் மட்டுமே,  கடவுளாக ஒளிரும் சிவம்,  அவர்தம் அகம் விளங்கும். அதனாலேயே, எண்ணுவோரின் எண்ணத்துள், மிக மிக அருகில் இறைவன் தன்னைக் காட்டுகின்றான்.  இறைச்சிந்தனை இல்லாதோருக்கு, அவருள் இறையுணர்வு ஒளிர்ந்தாலும், அது ஒளிந்தே இருக்கும். அதனால் இறைவன், ஒரு எட்ட முடியாத பொருளாகவே

Read More

Sivapuranam by Manickavasagar (06-07)

06. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க அலை பாய்கின்ற எண்ணங்களின் சிக்கலை (வேகம்) முடித்து (கெடுத்து) நம்மை ஆட்கொள்கின்ற தலைவனுடைய (ஆண்ட வேந்தன்) திருவடிகளைப் பணிவோம் (அடி வெல்க). ‘வேகம்’ எனும் சம்ஸ்கிருத மூலச் சொல்லுக்குத் தமிழில்  ‘விரைவு’, ‘குழப்பம்’, ‘விளைவு’, ‘சிக்கல்’ என்றெல்லாம் பொருள் உண்டு. நம்முடைய மனமே,   ஒன்று விட்டு ஒன்றில் ஓடிக் கொண்டிருப்பதும், குழப்புவதும்,  வினைப் பயனை விளைப்பதும், பிறவிச் சிக்கலில் பிணைப்பதும் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது.  எனவே மனதின் வேகத்தைக் கெடுப்பதனால், அதாவது, மனதின் அலைக்கழிப்பை நிறுத்தி, எண்ணங்களைச் சீரமைப்பதினால், நமக்கு விடுதலை கிடைக்கிறது. ‘சித்த சுத்தி, த்ருட புத்தி’  அதாவது

Read More