Sivapuranam by Manickavasagar (03-05)

03. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க திருப்பெருந்துறை எனும் தலத்திலே (கோகழி)  ஆட்சி செய்துவரும் (ஆண்ட), ஒப்பற்ற ஆசானின் (குரு மணி தன்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க). ‘கோகழி’ எனும் சொல் குறுந்த மரத்தைக் குறிப்பது.   குறுந்த மரத்தின் அடியில், அமர்ந்திருந்த ஒரு நல்லாசிரியரைப் பரசிவனாய்க் கண்டு, மாணிக்கவாசகர் நல்லறிவு பெற்ற இடம் தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறை எனும் ஊர்.  நல்லாசிரியராக வந்து அறிவு புகட்டி, பிறகு மறைந்த அக்குரு மனிதர்,  எல்லாம் வல்ல பரம்பொருளே என்றும், திருப்பெருந்துறை ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் பரசிவனே என்றும் உறுதிபட்ட மனதால், அத்தலத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டு,

Read More

Sivapuranam by Manickavasagar (02)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சிறு நேரம் கூட (இமைப்பொழுதும்) என் உள்ளத்தைவிட்டு (என் நெஞ்சில்) அகலாமல் இருப்பவன் (நீங்காதான்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க) இமைப்பொழுது என்பது, நாம் கண் சிமிட்டும் அளவினாலன காலத்துளி.  இமைப்பொழுது என்பதையும்விட, காலம் மேலும் துல்லியமாகவும் அளக்கப்படக் கூடியதுதான்.  எனினும், மனிதர்களாகிய நமக்கு, இமைப்பொழுது என்பதே, அனுபவத்தில் காணக்கூடிய துல்லிய காலம். எனவேதான் மாணிக்கவாசகர், இமைப்பொழுது எனும் கால அளவைக் காட்டி, அந்த இடைவெளியிலும்கூட நம்மை விட்டு விலகாமல் நம்முள்ளேயே இறைவன் இருக்கின்றான் எனக் கூறுகின்றார். அந்த இறைவன் நம்முள்ளே எங்கே இருக்கிறான்? ‘அகப்படும் சிவம்’ அல்லவா, அதனாலே,

Read More

Sivapuranam by Manickavasagar (01)

01 நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க சிவாய நம எனப் பணிவோம் (நமச்சிவாய வாழ்க), தலைவனின் திருவடிகளைப் பணிவோம் (நாதன் தாள் வாழ்க) ‘வாழ்க’ என்பது வாழ்த்துவதாகக் கொள்ளப்பட்டாலும், வாழ்த்துதல் என்பது, உண்மையில் யாரை வாழ்த்துகின்றோமோ, அவருக்காக நாம் ஏற்கும் வணக்கம் என்பதும் ஆகும். ஒருவருக்கு நற்பயன் விளையட்டும் என வாழ்த்துவது, அப்பயனை இறைவன் அளிக்கட்டும் என, ஒருவரின் பொருட்டு நாம் செய்யும் இறை வணக்கம்தான். எனவே இங்கே ‘வாழ்க’ என்னும் சொல்லுக்கு, இறைவனை வழுத்துவது அல்லது வணங்குவது என்றே பொருள் கொள்ள வேண்டும்.  மேலும், ‘வாழ்க’ எனும் சொல், ‘வாழ்வதற்காக’ எனவும் பொருள் தருவதால், வாழுதல்

Read More

Sivapuranam by Manickavasagar

Sivapuranam by Manickavasagar

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் – பொருள் விளக்கம்.