Sri Durga Pancaratnam by Maha Periyava
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – அவர்கள் படைத்த ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம் – மூலமும்,தமிழ்ப் பாடல், பொருளும்.
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – அவர்கள் படைத்த ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம் – மூலமும்,தமிழ்ப் பாடல், பொருளும்.
எங்கே என் குரு – குருவடி தேடல்
ஸ்ரீ அய்யப்பன் துதிப்பாடல்கள்
ஸ்ரீ அய்யப்பன் திருவெம்பாவை
அருள்மிகு லண்டன் முருகப் பெருமான் மேலும் திருவிழாக்காலங்களில் ஊஞ்சல் ஆட்டிப் பாடிப் பரவசமடைவதற்கு ஒரு பொன்னூசல் பதிகம் தேவை என்ற தாகத்திற்குத் தண்ணீராய் இந்தத் தமிழ்த்துதியை ஏற்றருளும் தமிழ்க் கடவுள்.
ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது
சுத்தாசுத்த தத்துவெனும்படி, சக்தியாகிய மாயை விளைக்கின்ற காலம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவமாகக் காட்டப்பட்டது
வந்தவினை போகும் வருவினையும் போகும் – சுந்தரமாம் மதுரைதிருக் கூடம், அங்கே அரசாட்சி செய்தருளும் அன்னை மீனாக்ஷியை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிற் காரணியாய்த் துதிக்கின்ற வழிபாட்டுப் பாக்கள்.
காவிரியும் கொள்ளிடமும் மாலையிட்டிருக்கும் திருவானைக்கா ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஸ்துதி – ஸ்ம்ஸ்கிருத மூலம் – ஸ்ரீதர வெங்கடேசுவர அய்யாவாள் அவர்கள்.
ஹாரோ சித்தி விநாயகர் துதி – சதுர்த்தி மானஸ பூஜை – மண்ணைக் குழைத்து உருவிலில் ஏற்றி மனங்குளிர இலையும், தழையும், பூவும், புல்லும் உவந்தளித்து, காயும், கனியும் கையப்பமொடு பலவும் படைத்துப் பின் நின்னை என்னுள் கரைக்கின்றேன், காண்!