Sabarimalai Yatra 2017 Tamil

Sabarimalai Yatra 2017 Tamil

பரம்பொருள் ஸ்வாமி ஐயப்பனாக அருள்பாலிக்கும் சபரிமலைக்கு யான் முதன்முறையாக இந்த ஆண்டு சென்ற அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரை. இது யாத்திரைக்கான வழிகாட்டியாகவோ, வரைமுறை விளக்கமாகவோ எழுதப்படவில்லை. அதற்கான தகுதியும் எனக்கில்லை. வேதாந்தப் பார்வையில், சபரிமலை யாத்திரைக்கான தவமும், நியமங்களும் ஆன்மீக உயர்வுக்கான ஒப்பரிய வழியே என்பதே இக்கட்டுரையின் அடித்தளம். அத்துடன் விளக்கமுடியாத என் மகிழ்ச்சியையும், அளக்கமுடியாத அய்யன் திருவருளையும் பகிர்ந்து கொள்வதும் இக்கட்டுரையின் நோக்கம்.

Amarnath Yatra (in Tamil)

Amarnath Yatra (in Tamil)

தனிச்சிவமே முனித்தவமே தத்துவமே இமயகிரிப் -பனித்துகளாய் இனித்தருளும் ஸ்படிகமணி அமர்நாதா
பார்என்னைப் பார்என்னுள் பார்உன்னைப் பார்என்ற -பேர்கருணைத் தேறமுதே பெருமானே அருள்வாயே!

Mount Kailash Parikrama (in Tamil)

Mount Kailash Parikrama (in Tamil)

நந்நீர் நதிமுடிந்த நாதன் பனிலிங்கம் – விண்மீன் மதிவடியும் விரிகயிலை – கண்முன்னே!
கண்ணீர் கரவக் காலடியால் பரிக்கிரமம் – நண்ணும் நமக்கே நலம்

Hrishikesh – travelogue

Hrishikesh – travelogue

ஹ்ரிஷிகேஷ் – ஒரு வாரம், ஒரு வரம்   பசுமையும் உயரமும் கொண்ட மரங்கள் எல்லாம் விருட் விருட்டென காரின் கண்ணாடியில் விழுந்து மறைந்து கொண்டிருந்தன. பின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, இருபுறமும் ஓடிக்கொண்டிருக்கும் மரங்களையும் தூரத்தில் தெரியும் சிவாலிக் மலைகளையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி.     வாடகைக் கார் என்னை, ஜாலி கிராண்ட் எனும் டேராடூன் விமான நிலையத்திலிருந்து ஹ்ரிஷிகேஷை நோக்கிச் சுமந்து கொண்டிருந்தது. அக்டோபர் மாதத்தில் டேராடூனில் 33 டிகிரி வெயிலை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், பளிச்சிடும் சூரியக் கதிர்களை எல்லாம், பச்சை மரங்கள் மறைத்தும், சித்திரமாய்ச்

Read More