Kanakadhara Stotram


ஸ்ரீ விநாயகப் பெருமான் துணை
சத்குருவே சரணம்

நல்வினை இல்லை என்றால் தெய்வ அருளும் கிட்டுவது கடினம் என்பதையும், ஆயினும் சத்குருவின் அருள் இருந்தால், தெய்வமே நம் வீடு தேடி வந்து நல்லன எல்லாம் செய்யும் என்பதையும் காட்டுவதுதான், பகவான் சங்கரர், கனகதாரா ஸ்தோத்திரம் வழியாக நடத்திக் காட்டிய நற்பாடம்.

சீடராக பிக்ஷை பெற வந்த சங்கரருக்கு ஏதும் கொடுக்க இயலாமல் வருந்திய ஓர் மூதாட்டி, உலர்ந்த நெல்லிக்கனியை மனம் நொந்து அளித்தார். தீவினையால் வறுமையில் வாடும் அவருக்கு நல்வழி காட்டக் கருணையுடன், பரசிவ அவதாரமாகிய பகவான், அன்னை மஹாலெக்ஷ்மியிடம் தானொரு பிக்ஷை கேட்டுப் பெரும்பயனை அளித்தார்.

எல்லாம் வல்ல பரசிவமாயினும், மாணவனாக இருக்கும் சங்கரர், அப்பருவத்தில் பிக்ஷை பெறவே அதிகாரம் உண்டு என்பதால், அச்செயலையும் பிறர் நலத்துக்காகவே செய்து வழிகாட்டிய ஆசான்.

பொன்னருள் மழைத் துதியாகிய ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பொருளுணர்ந்து பயின்று நாமும் சத்குருவின் அருளையும், சகல செல்வங்களையும் பெறுவோம்.

ஓம் குருப்யோ நம:

अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती
भृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम् ।
अङ्गीकृताखिलविभूतिरपाङ्गलीला
माङ्गल्यदास्तु मम मङ्गलदेवतायाः ॥१॥
அங்க₃ம் ஹரே: புலகபூ₄ஷணமாஶ்ரயந்தீ
ப்₄ருங்கா₃ங்க₃நேவ முகுலாப₄ரணம் தமாலம் |
அங்கீ₃க்ரு தாகி₂லவிபூ₄திரபாங்க₃லீலா
மாங்க₃ல்யதா₃ஸ்து மம மங்க₃லதே₃வதாயா: || 1||
மாலுடல் மேலணி மாமணி யாக
மயிர்க்கால் சிலிர்க்க மகிழுற வாக
பூமலர்த் தமலம் புகுவண் டாக
புவனம் சுமந்தருள் பொழிபவ ளாக
ஆனதுன் கடைக்கண் அருளமு தாக
அடியவன் என்பால் வடிவிட லாக
ஸ்ரீநிதி உந்தன் திருவடி வேண்டிச்
சிந்தை யுவந்துனை வந்தனை செய்வேன்!
(1)

(1.1) ஹரியின் உடலில், மயிர்க்காலும் சிலிர்க்கும் சுகமாக நிறையும் அணிகலனாக இருப்பவளும்; (1.2) ‘தமலம்’ எனும் மரத்தில் மலரும் மொட்டுக்களை அலங்கரிக்கும் வண்டுகளாக; (1.3) தன் உடலுக்குள்ளேயே அகில புவனங்களையும் வைத்துக் கருணையால் அவற்றைக் காக்கும் கடைக்கண் கொண்டவளை; (1.4) அக்கடைக் கண்ணின் கருணையால் என்வாழ்விலும் இன்பத்தை அருளட்டும் என அப்பெரு நிதியை வணங்கினேன்.

मुग्धा मुहुर्विदधती वदने मुरारेः
प्रेमत्रपाप्रणिहितानि गतागतानि ।
माला दृशोर्मधुकरीव महोत्पले या
सा मे श्रियं दिशतु सागरसम्भवायाः ॥२॥
முக்₃தா₄ முஹுர்வித₃த₄தீ வத₃நே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி க₃தாக₃தாநி |
மாலா த்₃ருஶோர்மது₄கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஶ்ரியம் தி₃ஶது ஸாக₃ரஸம்ப₄வாயா: || 2||
முற்றுங் கவர்ந்த முரஹரி நோக்கும்
பற்றும் வெட்கம் பரவிடப் பார்க்கும்
சற்றிடை இல்லாச் சலனக் கருவிழி
நற்றிதழ் சுற்றும் நறுமலர் வண்டு!
அற்புதக் கடைக்கண் அருளினை எனக்குக்
கற்பகத் தருவே கதியுறத் திருப்பு!
பெற்றவள் நீயே! பெருங்கடல் உதித்த
நற்றவ மேயுனை நாடுகின் றேனே!
(2)

(2.1) (ஹரியினால்) கவரப்பட்டதால், முரனை அழித்த ஹரியின் திருமுகத்திலேயே தன் கருணைப் பார்வையை திருப்பி வைத்து; (2.2) காதலும், வெட்கமும் நிரம்பிய அப்பார்வையை அவர்மீது கொடுத்தும் எடுத்தும் கண்களைச் சுழட்டி இரசிக்கின்றவளை; (2.3) அச்செயலால், பெரிய அல்லி மலரைச் சுற்றி வரும் கரு வண்டுகளைப் போல வட்டமிடும் விழிகளைக் கொண்டவளை; (2.4) அக்கருணைக் கண்களை என்பால் திருப்ப வேண்டி, கடலில் உதித்த அக்கற்பகத்தை வேண்டுகிறேன்!

विश्वामरेन्द्रपदविभ्रमदानदक्षम्_
आनन्दहेतुरधिकं मुरविद्विषोऽपि ।
ईषन्निषीदतु मयि क्षणमीक्षणार्धम्_
इन्दीवरोदरसहोदरमिन्दिरायाः ॥३॥
விஶ்வாமரேந்த்₃ரபத₃விப்₄ரமதா₃னத₃க்ஷம்
ஆனந்த₃ஹேதுரதி₄கம் முரவித்₃விஷோ(அ)பி |
ஈஷன்னிஷீத₃து மயி க்ஷணமீக்ஷணார்த₄ம்
இந்தீ₃வரோத₃ரஸஹோத₃ரமிந்தி₃ராயா: || 3||
மூவுல கருளும் முடியர சமையும்
தேவுல கரசும் தெளிவிப் பவளே!
முரனழித் தவரும் சுகமினித் தமதுள்
அகமினித் தவருள் ஆள்விப் பவளே!
நீலத் தாமரை நீள்விழிக் கருணை
யாலெக் காலமும் வாழ்விப் பவளே!
ஏழைச் சேயெனை எண்ணிக் கண்ணிமை
பாதி திறந்தருள் பாலித் தருளே!
(3)

(3.1) முவ்வுலகத்திற்கும் தலைவனான தேவேந்திரப் பதவியையும் அளிக்க வல்லவளை; (3.2) ‘முரன்’ எனும் அரக்கனை அழித்தருளிய ஹரியையும் நல்லின்பத்தில் மூழ்கி ஆழ்த்துபவளை; (3.4) நீலத்தாமரையைப் போன்ற அழகிய தன்னுடைய நீண்ட விழிகளின்; (3.3) கருணையை ஒரு கணமேனும், அரைக் கண்ணை மூடியேனும், ஏழையான என்னிடம் காட்ட (யான் பணிகிறேன்)!

आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दम्_
आनन्दकन्दमनिमेषमनङ्गतन्त्रम् ।
आकेकरस्थितकनीनिकपक्ष्मनेत्रं
भूत्यै भवेन्मम भुजङ्गशयाङ्गनायाः ॥४॥
ஆமீலிதாக்ஷமதி₄க₃ம்ய முதா₃ முகுந்த₃ம்
ஆனந்த₃கந்த₃மனிமேஷமனங்க₃தந்த்ரம் |
ஆகேகரஸ்தி₂தகனீனிகபக்ஷ்மனேத்ரம்
பூ₄த்யை ப₄வேன்மம பு₄ஜங்க₃ஶயாங்க₃னாயா: || 4||
முழுவிழி யாலே முகுந்தனின் அழகைத்
தழுவிய மாயே! தன்னிமை யாமே
வழுவிமை மூடா வகையினில் இன்பங்
கொலுவிட மாலன் கூடிய தேனே!
விழியிரங் காயோ! விரிமுனி ஓரத்
துளியிற காகி ஒளிதர வாதோ!
அரிதுயி லரவத் தரிலொயி லாளே!
அன்பே! அமுதே! அருள்தரு வாயே!
(4)

(4.1) முழுதும் திறந்த அழகிய கண்களால், முகுந்தனின் அழகை முற்றிலும் கொண்டவளின்; (4.2) இமைக்காமல் தனது இரு விழிகளால் (ஹரியினைப் பார்த்து, அதனால் அவருக்கும்) இன்பத் தந்திரங்களை எல்லாம் தருபவளின்; (4.3) அந்தக் கருணை விழிகளின் ஒரு கடை ஓரத்திலிருந்தேனும், ஒரு கதிர் தனது சிறகுகளை அடித்து; (4.4) என்னிடம் பறந்து வந்து, அரவப் படுக்கையில் துயிலும் அண்ணலின் அன்புத் துணைவியின் அருளைத் தரட்டும்!

बाह्वन्तरे मधुजितः श्रितकौस्तुभे या
हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतोऽपि कटाक्षमाला
कल्याणमावहतु मे कमलालयायाः ॥५॥
பா₃ஹ்வந்தரே மது₄ஜித: ஶ்ரிதகௌஸ்துபே₄ யா
ஹாராவலீவ ஹரினீலமயீ விபா₄தி |
காமப்ரதா₃ ப₄க₃வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா: || 5||
மதுவர னரியின் இருகர மிடையில்
மாகௌஸ் துபமணி மாதே! நீயே
புதுவித ஒளியில் பொன்நீ லத்தில்
பூமுத் தணிந்தருட் போதே! நீயே
முறுவலி லிருவிழி முடிவினி லருசுகம்
மூழ்கியி தந்தரும் தாயே! நீயே
அருமலர் விழியை அடியனின் வழியில்
ஆர்த்தரு ளுந்திட வாயேன் நீயே!
(5)

(5.1) ‘மது’ எனும் அரக்கனை அழித்த ஹரியின் இரு கரங்களுக்கிடையே ஒளிதரும் ‘கௌஸ்துப-மணி’ என வசிப்பவளும்; (5.2) பொன்னும் நீலமும் போன்று ஒளிதரும் முத்துமாலையாகப் பிரகாசிப்பவளும்; (5.3) கடைக் கண்ணின் நோக்கினால், இறைவனுக்கும் காதலை ஊட்டுபவளுமாகிய அன்னை; (5.4) தாமரை பதித்த தன் கருணைக் கண்களை என்பால் செலுத்தி நன்மை அளிக்கட்டும்!

कालाम्बुदालिललितोरसि कैटभारेर्_
धाराधरे स्फुरति या तडिदङ्गनेव ।
मातुः समस्तजगतां महनीयमूर्तिर्_
भद्राणि मे दिशतु भार्गवनन्दनायाः ॥६॥
காலாம்பு₃தா₃லிலலிதோரஸி கைடபா₄ரேர்
தா₄ராத₄ரே ஸ்பு₂ரதி யா தடி₃த₃ங்க₃னேவ |
மாது: ஸமஸ்தஜக₃தாம் மஹனீயமூர்திர்
ப₄த்₃ராணி மே தி₃ஶது பா₄ர்க₃வனந்த₃னாயா: || 6||
கைடபன் அழித்தவன் மையிருள் மார்பகக்
கலையினில் ஒளிவிட நிலவிடும் வண்டு !
மைமுகிற் திரைபொதி மெய்ச்சுடர் மின்னல்!
பொய்யழித் திடவரும் பொற்கதிர்த் துண்டு!
மெய்யருட் தெய்வமுன் மேன்மையைக் கண்டு
வையமும் தாயென வரித்திடல் உண்டு!
பையனாய்ப் பார்கவப் பாலனாய் நின்னருள்
செய்யெனத் தாயுனைச் சேயன் வேண்டினேன்!
(6)

(6.1) ‘கைடபன்’ எனும் அரக்கனை அழித்த ஹரியின் கார்மேகம் போன்ற மார்பகத்தில் விளையாடும் ஓளி மிக்க வண்டு போன்றவளும்; (6.2) அப்படி விளையாடுவதால், கருமேகத்தில் பளிச்சிடும் மின்னலின் கீற்றாக ஓங்கிப் பிரகாசிப்பவளும் ஆகிய; (6.3) ஓ அம்மா! நின் வடிவே உலகமெல்லாம் போற்றிப் புகழப்படுவது; (6.4) அப்புனித வடிவம், ‘பார்கவ’ குலக் குழந்தையான என் மேலும் படிந்து நலம் அருளட்டும்!

प्राप्तं पदं प्रथमतः किल यत्प्रभावान्
माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथेन ।
मय्यापतेत्तदिह मन्थरमीक्षणार्धं
मन्दालसं च मकरालयकन्यकायाः ॥७॥
ப்ராப்தம் பத₃ம் ப்ரத₂மத: கில யத்ப்ரபா₄வான்
மாங்க₃ல்யபா₄ஜி மது₄மாதி₂னி மன்மதே₂ன |
மய்யாபதேத்ததி₃ஹ மந்த₂ரமீக்ஷணார்த₄ம்
மந்தா₃லஸம் ச மகராலயகன்யகாயா: || 7||
வரையறை கடந்து வாழ்விடம் இழந்த
கணைமலர் இடுவன் கதிபெற இரந்து
மதுவரன் இதயம் மலரிடம் திகழ்ந்து
வருமருள் சுரந்து வரஹரி மகிழ்ந்து
திருவருள் கரந்த திருமகள் கருணை
பெறுவது சிறந்த பேறெனப் பணிந்தேன்!
அரையிமை மூடிய அருள்விழி என்மேல்
நிறைவுறப் பதிவாய்! நீள்கடல் மகளே!
(7)

(7.1) யாருடைய கருணையினால் மன்மதனுக்கு முதலில் ஓர் இடத்தை; ( 7.2) ‘மது’ எனும் அரக்கனை அழித்த ஹரியின் இதயத்தில் கிடைக்கும்படி அருள் செய்து, அதனால் ஹரியும் ஸ்ரீ மஹாலெக்ஷ்மியினால் சுகம் பெற்றாரோ; ( 7.3) அவளின் சக்தி, பாதி மூடிய கடைக்கண் பார்வையாகவே என் மேல் இக்கணமே; (7.4) இதமாகவும், அன்பாகவும் பதியட்டும், ஓ கடல் மகளே!

दद्याद् दयानुपवनो द्रविणाम्बुधाराम्_
अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे ।
दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं
नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥८॥
த₃த்₃யாத்₃ த₃யானுபவனோ த்₃ரவிணாம்பு₃தா₄ராம்
அஸ்மின்னகிஞ்சனவிஹங்க₃ஶிஶௌ விஷண்ணே |
து₃ஷ்கர்மக₄ர்மமபனீய சிராய தூ₃ரம்
நாராயணப்ரணயினீனயனாம்பு₃வாஹ: || 8||
கருணைத் தென்றல் கலந்திதம் வழிய
மருவற் றருளும் மழையினிப் பொழிய
கதியற் றழுதும் கலங்கும் சிறுபுள்
எனயிற் றுழலும் ஏழையர் மகிழ
உழலுற் றமிழும் ஊழிடர் அகல
உனதருள் மழையில் உலகினி நனைய
நலமுற் றருளும் நயனம் மலர்க!
நாரணர் ஆர்த்த நலமே வருக!
(8)

(8.1) ‘கருணை’ எனும் தென்றலையும், ‘நந்நிதியம்’ எனும் மழையையும் அவள் அளிக்கட்டும்; (8.2) ஆதரவற்ற அநாதையாக, குஞ்சுக் குருவியாக, மிகவும் அல்லலுற்று, உதவிக்கு வழியின்றி, வறுமையில் தள்ளப்பட்டவருக்கு; (8.3) அவரது (வாழ்க்கையில்) தாக்கம் கொடுக்கும் பாவச் செயல்கள் எல்லாம் போகும்படி; (8.4) ஸ்ரீ நாராயணரின் அன்பாகிய அன்னையின் கருணை விழிகள் நல்லருள் மழையைப் பொழியட்டும்!

इष्टा विशिष्टमतयोऽपि यया दयार्द्र_
दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्ते ।
दृष्टिः प्रहृष्टकमलोदरदीप्तिरिष्टां
पुष्टिं कृषीष्ट मम पुष्करविष्टरायाः ॥९॥
இஷ்டா விஶிஷ்டமதயோ(அ)பி யயா த₃யார்த்₃ர
த்₃ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபத₃ம் ஸுலப₄ம் லப₄ந்தே |
த்₃ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோத₃ரதீ₃ப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா: || 9||
அடைந்திட முடியா ஆசையும் அருளும்
கடைவிழி போதும் கைவரக் கூடும்!
தடையறக் கோரும் அமரரின் வீடும்
தண்விழி ஈரம் தந்தருள் கூடும்!
விடையுறும் விழியுந் தாமரை மணமும்
இடையற இருக்கும்! எங்கெனும் இனிக்கும்!
மடியிதழ்ப் பங்கய மாதவி ஸ்ரீநிதி!
அடியனின் ஆசைகள் ஆக்கிடும் சந்நிதி!
(9)

(9.1) அவளின் கருணைக் கடைவிழிப் பார்வையிலேயே எப்படிப்பட்ட அரிதான ஆசைகளும்; (9.2) உதாரணமாக சொர்க்க வாழ்வையும், சுலபமாக அடைய முடியும். அத்தகைய அன்னையின் கருணை ஈரம் போர்த்த வளமையான கண்கள்; (9.3) தாமரையின் உள்ளே தழைத்த நல்மணமான அக்கருணைப் பார்வை, மகிழ்ச்சித் தாமரையாக மலர்ந்து; (9.4) தாமரையில் அமர்ந்தாளும் தயாபரியின் பார்வை, அடியேனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யட்டும்!

गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति
शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।
सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै
तस्मै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥१०॥
கீ₃ர்தே₃வதேதி க₃ருட₃த்₄வஜஸுந்த₃ரீதி
ஶாகம்ப₄ரீதி ஶஶிஶேக₂ரவல்லபே₄தி |
ஸ்ருஷ்டிஸ்தி₂திப்ரலயகேலிஷு ஸம்ஸ்தி₂தாயை
தஸ்மை நமஸ்த்ரிபு₄வனைககு₃ரோஸ்தருண்யை || 10||
வாயுரையும் நல்லொலியின் வடிவழகி நீயே!
வனப்புடைய கருடனமர் வாகனரின் நேரே!
வாழ்வுவள மாய்வயலும் வளருநவ நிதியே!
வளர்மதிய னார்மிகவும் உளமகிழும் பதியே!
கோள்புவன மாயகிலங் கொண்டுவிளை யாடிக்
கூடிவளர்ந் தூடியழிந் தாடும்பர அறிவே!!
யாவுலகும் ஆனகுரு ஏகுமருட் துணையே!
மூவுலகு நாடிமனம் முனியுமிளங் கலையே!
(10)

(10.1) ‘வாக்கின் தெய்வம்’ (கலைமகள்) என்றும், கருட வாகனரின் அழகுத் துணைவி; (10.2) வயலும் வளமும் வளர்க்கும் செல்வி (திருமகள்) என்றும், பிறை அணிந்த பெருமானின் பிரியத்துக்கு உகந்தவள் (மலைமகள்) என்றும்; (10.3) படைப்பு, காப்பு, அழிப்பு எனும் திருவிளையாடல்களைச் சாட்சியாக, கண்டிருப்பவள் (ஸ்ரீலலிதாம்பாள்) என்றும்; (10.4) எல்லா உலகங்களுக்கும் ஆதி குருவாக இருப்பவரின் அருமைத் துணையாக, இளமையுடன் இருப்பவளை முவ்வுலகங்களும் பணிகின்றன!

श्रुत्यै नमोऽस्तु शुभकर्मफलप्रसूत्यै
रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै ।
शक्त्यै नमोऽस्तु शतपत्रनिकेतनायै
पुष्ट्यै नमोऽस्तु पुरुषोत्तमवल्लभायै ॥११॥
ஶ்ருத்யை நமோ(அ)ஸ்து ஶுப₄கர்மப₂லப்ரஸூத்யை
ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீயகு₃ணார்ணவாயை |
ஶக்த்யை நமோ(அ)ஸ்து ஶதபத்ரனிகேதனாயை
புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தமவல்லபா₄யை || 11||
அருமறைப் பொருளே அழகே வாழ்க!
அறவோர் கரவும் பயனே வாழ்க!
அழகிய இரதியே அருளே வாழ்க!
அருங்குணக் கடலே அமுதே வாழ்க!
சக்திப் பொருளே சாதகி வாழ்க!
யுக்தியில் ஆயிரம் உதித்தனள் வாழ்க!
புலர்ந்திடும் நலமே புகழே வாழ்க!
புருஷோத் தமரின் புகலே வாழ்க!
(11)

(11.1) வேதங்களாக, வேதப் பொருளாக விளங்கும் நின்னைப் பணிகிறேன். வேத வழி வாழ்வோர்க்கு விளையும் பயனான நின்னைப் பணிகிறேன்; (11.2) ‘ரதி’ எனும் பேரழகே, நற்குணக் கடலே நின்னைப் பணிகிறேன்; (11.3) சக்தியின் வடிவே, ஆயிரம் இதழ்த் தாமரையில் குண்டலினி சக்தியான தேவியே நின்னைப் பணிகிறேன்; (11.4) நலந்தரும் செழுமையே, புருஷோத்தமரின் இன்பப்புகலே, நின்னைப் பணிகிறேன்!

नमोऽस्तु नालीकनिभाननायै
नमोऽस्तु दुग्धोदधिजन्मभूत्यै ।
नमोऽस्तु सोमामृतसोदरायै
नमोऽस्तु नारायणवल्लभायै ॥१२॥
நமோ(அ)ஸ்து நாலீகனிபா₄னனாயை
நமோ(அ)ஸ்து து₃க்₃தோ₄த₃தி₄ஜன்மபூ₄த்யை |
நமோ(அ)ஸ்து ஸோமாம்ருதஸோத₃ராயை
நமோ(அ)ஸ்து நாராயணவல்லபா₄யை || 12||
தாமரை முகத்துத் தளிரே வாழ்க!
தாயெனக் கனியும் தயவே வாழ்க!
பாற்கடல் உதித்த பரிவே வாழ்க!
பைங்கொடி தொடுத்த பயனே வாழ்க!
நிலவொளி அமுதச் சுகமே வாழ்க!
நித்திலம் அமர்ந்த நிலையே வாழ்க!
நாரணன் ஸ்ரீமதி நலமே வாழ்க!
நந்நலந் தருமரி நாயகி வாழ்க!
(12)

(12.1) தாமரை போன்ற முகத்தினை உடையவளே, என் தாயே நின்னைப் பணிகிறேன்; (12.2) பாற்கடலில் பிறந்தவளே, பைங்கொடி ஆனவளே, நின்னைப் பணிகிறேன்; (12.3) நிலவின் அமுதில் வசிக்கும் இனிமையே, நிலையான சுகமே நின்னைப் பணிகிறேன்; (12.4) ஸ்ரீ நாரயணரின் அன்புக்குரியவளே, எல்லா நலமும் தருபவளே, நின்னைப் பணிகிறேன்!

सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि
साम्राज्यदानविभवानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरिताहरणोद्यतानि
मामेव मातरनिशं कलयन्तु मान्ये ॥१३॥
ஸம்பத்கராணி ஸகலேந்த்₃ரியனந்த₃னானி
ஸாம்ராஜ்யதா₃னவிப₄வானி ஸரோருஹாக்ஷி |
த்வத்₃வந்த₃னானி து₃ரிதாஹரணோத்₃யதானி
மாமேவ மாதரனிஶம் கலயந்து மான்யே || 13||
புறநலம் மிகவும் அகமகிழ் வுறவும்
தகவரும் மலரிரு முகவிழி தரவும்
உகவிடும் அரசும் பரிசென உரசும்
கமலமும் வளரிரு கருவிழி அருளும்
புகழுனைப் பணியும் புகலெனுக் கினியும்
அகலவும் சுடுவினை அவளவும் அழியும்!
இதுவரம் தருவாய்! இனியுன தடிமை!
தினமுனைத் தொழுகிற வெகுமதி தாயே!
(13)

(13.1) தாமரைக் கண்களால் புறவளமும், அகநலமும் பூரிக்கத் தருபவளை; (13.2) மலர் விழிகளால் மன்னரென ஆளுமை தரும் மாலெக்ஷ்மிக்கு; (13.3) நினது புகழைப் பாடுவதால், பாவக் குணங்கள் விலகி, அதன் பயனாக எல்லாத் துயரங்களும் ஒழிகின்றன; (13.4) (எனவே), ஓ அம்மா, யான் எப்போதும் நின் புகழைப் பாடிக்கொண்டு, நினது அடிமையாகவே இருக்கட்டும்!

यत्कटाक्षसमुपासनाविधिः
सेवकस्य सकलार्थसम्पदः ।
संतनोति वचनाङ्गमानसैस्_
त्वां मुरारिहृदयेश्वरीं भजे ॥१४॥
யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி₄:
ஸேவகஸ்ய ஸகலார்த₂ஸம்பத₃: |
ஸந்தனோதி வசனாங்க₃மானஸைஸ்
த்வாம் முராரிஹ்ருத₃யேஶ்வரீம் ப₄ஜே || 14||
மன்னுயிர் தழைக்கும் மருந்தெனத் தண்மதி!
நின்னருள் செழிக்கும் நீள்கடைக் கண்விழி!
நண்ணிடும் அடியரும் நயந்திடும் நந்நிதி!
எண்ணிடும் அன்பிலே இருந்திடும் சந்நிதி!
என்னுயிர் உடல்மொழி எனுமிகக் கருவியும்
நின்புகழ் துதித்தினி நிலையுற இருத்தும்
அன்பருள் கொடுப்பாய்! அரிமலர் முரஹரிப்
பெண்துணைப் பேறெனப் பெருநற் தாயே!
(14)

(14.1) யாருடைய கருணைக் கடைக்கண் விழியைத் துதிப்பதே; (14.2) அடியார்கள் அனைவரின் பக்தியாகவும் சொத்தாகவும் இருக்கிறதோ; (14.3) அவரையே என்னுடைய மொழி, உடல், மனம் எல்லாம் சூழ்ந்து; (14.4) நின்னுடைய துதியினாலேயே நிறைக்கப்படட்டும், ‘முரன்’ எனும் அரக்கனை அழித்த முராரியின் இதயத்தில் அன்புருவாக வீற்றிருப்பவள் நீயே!

सरसिजनिलये सरोजहस्ते
धवलतमांशुकगन्धमाल्यशोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे
त्रिभुवनभूतिकरि प्रसीद मह्यम् ॥१५॥
ஸரஸிஜனிலயே ஸரோஜஹஸ்தே
த₄வலதமாம்ஶுகக₃ந்த₄மால்யஶோபே₄ |
ப₄க₃வதி ஹரிவல்லபே₄ மனோஜ்ஞே
த்ரிபு₄வனபூ₄திகரி ப்ரஸீத₃ மஹ்யம் || 15||
செந்தா மரையிலிடம்! செங்கமலம் கையில்!
வெந்தா மரையாடை! விளங்குமண மாலைகள்!
சிந்தா மணிச்சீர்கள்! சேர்த்தழகுச் சீமாட்டி!
நந்தா விளக்கு! நாரணனின் ஆள்விப்பு!
எந்தாய்! இறையவளே! எவ்வுலகும் நின்னருளில்
வந்தாடும் உண்மை! வாழ்விக்கும் நற்பேறு!
அம்மா! மாலெக்ஷ்மி! அத்தனையும் தந்தாளும்
பெம்மான் துணையே! பிச்சையிடு நின்னருளே!
(15)

(15.1) தாமரையில் அமர்ந்து, தாமரை மலரைக் கையிலும் வைத்திருப்பவளை; (15.2) ஒளிரும் அழகிய வெண்-பட்டாடையில் மிளிர்ந்து, நறுமணம் கொண்ட மலைகளால் அலங்கரிக்கப்பட்டு; (15.3) ஓ தெய்வமே! நீதான் ஹரியின் அன்புக்கு அன்பாகி, அவரையும் உன் அன்பினால் முழுமையாகக் கைக்கொண்டவள்! (15.4) நீயே நன்மைகளுக்கு ஆதாரம். முவ்வுலக நலனும் உன்னால்தான்! ஓ அம்மா, என்னிடம் கருணை கொள்!

दिग्घस्तिभिः कनककुम्भमुखावसृष्ट_
स्वर्वाहिनीविमलचारुजलप्लुताङ्गीम् ।
प्रातर्नमामि जगतां जननीमशेष_
लोकाधिनाथगृहिणीममृताब्धिपुत्रीम् ॥१६॥
தி₃க்₃க₄ஸ்திபி₄: கனககும்ப₄முகா₂வஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீவிமலசாருஜலப்லுதாங்கீ₃ம் |
ப்ராதர்னமாமி ஜக₃தாம் ஜனனீமஶேஷ
லோகாதி₄னாத₂க்₃ருஹிணீமம்ருதாப்₃தி₄புத்ரீம் || 16||
திசையானை எல்லாமுன் திருமேனி தரிசிக்கும்!
இசைவாகப் பொற்பானை இடுமேவி பரிசிக்கும்!
வானலையின் பால்வெளியை வளநீராய் அர்ச்சிக்கும்!
காணவரும் வானுலகும் கதிரொளியாய் கர்ச்சிக்கும்!
அண்டங்கள் யாவுமுன் அருளாகத் தெரிந்தேனே!
அதிகாலை யானுன்னை அறிவாகத் தெளிந்தேனே!
ஒண்டமுதக் கடல்மகளே! ஓங்காரத் தடமருளே!
தண்டமிது நின்னடிமை! தாயே நின்சரணம்!
(16)

(16.1) ‘திசைகள்’ எனும் யானைகள், பொன்னால் செய்த பானைகளினால் கொண்டு வந்த; (16.2) வானுலகின் பால்வெளியாகிய நந்நீரால் உன்னைக் குளிப்பாட்டுகின்றன; அதனால், அண்டங்கள் உன் உடலின் ஒளியினைப் பெற்றுப் பிரகாசிக்கின்றன; (16.3) அதனை யான் அதிகாலையில் தரிசித்து, அண்டங்களின் தாயான நின்னையே தினமும் ஆராதிப்பது; (16.4) அமுதக் கடல் மகளும், பரம்பொருட் துணையுமான நின்னையே!

कमले कमलाक्षवल्लभे
त्वं करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलोकय मामकिञ्चनानां
प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥१७॥
கமலே கமலாக்ஷவல்லபே₄
த்வம் கருணாபூரதரங்கி₃தைரபாங்கை₃: |
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரத₂மம் பாத்ரமக்ருத்ரிமம் த₃யாயா: || 17||
மடையிலா அன்பருள் மாலருட் தேவியே!
மாதவி! கமலினி! மகிழ்ந்தெனக் கருளிடு!
நடையிலாப் பேடையான்! நளினமாய் நின்மலர்
கடையிலாக் கண்ணினால் களித்தெனைப் பார்த்திடு!
கடையனாய் ஏழையாய்க் கதியிலாச் சேயனாய்
இடையறா துனைமனம் ஏற்றிடும் நேயனாய்
அடிமையான் தெரிந்திடு! அன்பினால் நின்னருள்
பெறுகயான் தகுதியிற் பெரியனென் றெண்ணிடு!
(17)

(17.1) ஓ அன்னை கமலாம்பிகே! ஸ்ரீ ஹரியின் அன்புக்குரிய மலர் விழியாளே; (17.2) கருணை அலை பொழியும் அக்கண்களினால் என்னைத் தயவு செய்து பார்ப்பாயாக! (17.3) கடையிலும் கடையனான ஏழை என்னைப் பார்; (17.4) ஏனெனில் உனது கருணைக்கு தகுதியான முதல் ஏழை நானே!

स्तुवन्ति ये स्तुतिभिरमूभिरन्वहं
त्रयीमयीं त्रिभुवनमातरं रमाम् ।
गुणाधिका गुरुतरभाग्यभागिनो
भवन्ति ते भुवि बुधभाविताशयाः ॥१८॥
ஸ்துவந்தி யே ஸ்துதிபி₄ரமூபி₄ரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபு₄வனமாதரம் ரமாம் |
கு₃ணாதி₄கா கு₃ருதரபா₄க்₃யபா₄கி₃னோ
ப₄வந்தி தே பு₄வி பு₃த₄பா₄விதாஶயா: || 18||
இம்மையில் இத்துதி இருத்திடத் தினமும்
மும்மறைச் சக்தியில் முனிப்பவ ரெவரும்
முவ்வுல கன்னை மூவனு பவத்துச்
செவ்விய ஆன்மா ஸ்ரீமஹா லெக்ஷ்மி
நன்னருள் தரவும் நற்குணம் மிகவும்
புண்ணியர் வரவும் புகழ்நலம் உகவும்
மன்னுயிர் மதிக்கும் மாண்புற வாழ்ந்து
தன்னுணர் விருந்து தகையடை வாரே!
(18)

(18.1) இத்துதியை எவர் தினமும் பக்தியுடன் (பொருள் ஊணர்ந்து)படிக்கிறார்களோ; (18.2) அவர்களை, மும்மறைச் சக்தியாகவும். முவ்வுலகங்களுக்கும் அன்னையாயும், ‘ரமா’ எனும் மஹாலெக்ஷ்மியாயும் விளங்கும்; (18.3) அன்னையின் அருள், எண்ணிலா நற்குணத்தால் நிரம்பி, புண்ணியர்கள் அடையும் எல்லா நற்பயனை எல்லாம் அடையும்படிச் செய்யும்; (18.4) அவர்களும் நின்னுடைய கருணையினால், ஆத்ம ஞானத்தை உணர்ந்தவர்களாக இவ்வுலகில் உயர்ந்து வாழ்வார்கள்.


Sri Vigneshvarya Nama:< br/>
Sadguru Saranam

Without accumulating the benefits of virtuous deeds, even the benign grace of God is hard to come by! Yet, when we have the devotion and the directions of Sadguru, God comes to us to give us all that we need. Such is the power of surrendering to Sadguru. Bhagavan Ai Sankara, through His enchanting verses Kanakadhara-Stotram has demonstrated the truth of such benevolence.

As per the prescribed duty, Sankara as a student once went for alms. On that occasion, the house-holder was a devoted old lady, but down-trodden in utmost poverty. Pleased to see Sankara but dismayed by her inability to give suitable alms, she offered a dry gooseberry with humility. Merciful Bhagavan at once recited the Kanakadhara-Stotram on Sri Mahalakshmi. Although the old-day has no deserving Punya, Sir Mahalakshmi showered in gold for the love of Sadguru.

Bhagavan, being the incarnation of Lord Siva, could have directly showered the opulence but fit for the role, and that too as a student, who has the right and duty to plea only, Bhagavan pleaded for the welfare of others.
By learning and reciting the golden-grace showering prayer, let us seek the benign grace of Sadguru and all auspiciousness through the gift of God.

Aum Gurubhyo Nama:

अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती
भृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम् ।
अङ्गीकृताखिलविभूतिरपाङ्गलीला
माङ्गल्यदास्तु मम मङ्गलदेवतायाः ॥१॥
aṅgaṁ harēḥ pulakabhūṣaṇamāśrayantī
bhr̥ṅgāṅganēva mukulābharaṇaṁ tamālam |
aṅgīkr̥tākhilavibhūtirapāṅgalīlā
māṅgalyadāstu mama maṅgaladēvatāyāḥ ||1||
māluṭal mēlaṇi māmaṇi yāka
mayirkkāl silirkka makiḻuṟa vāka
pūmalart tamalam pukuvaṇ ṭāka
bhuvaṉam sumantaruḷ poḻipava ḷāka
āṉatuṉ kaṭaikkaṇ aruḷamu tāka
aṭiyavaṉ eṉpāl vaṭiviṭa lāka
śrīnidhi untaṉ tiruvaṭi vēṇṭic
cintai yuvantuṉai vantaṉai ceyvēṉ!
(1)

(1.1) (Obeisance to Mother Mahalakshmi) Who adores in the body of Hari, as the ecstatic delight giving goose bumps; (1.2) like the humming Bees that dwell over the blossoming buds of the ‘Tamala’ tree; (1.3) in the Womb of Who the entire opulence of the universe rests and get nourished by Her Divine-glance; (1.4) May That Divine-glance fall upon me to bring auspiciousness in my life as I plea to the Divine-Opulence!

मुग्धा मुहुर्विदधती वदने मुरारेः
प्रेमत्रपाप्रणिहितानि गतागतानि ।
माला दृशोर्मधुकरीव महोत्पले या
सा मे श्रियं दिशतु सागरसम्भवायाः ॥२॥
mugdhā muhurvidadhatī vadanē murārēḥ
prēmatrapāpraṇihitāni gatāgatāni |
mālā dr̥śōrmadhukarīva mahōtpalē yā
sā mē śriyaṁ diśatu sāgarasambhavāyāḥ ||2||
muṟṟuṅ kavarnta murahari nōkkum
paṟṟum veṭkam paraviṭap pārkkum
caṟṟiṭai illāc calaṉak karuviḻi
naṟṟitaḻ suṟṟum naṟumalar vaṇṭu!
aṟputak kaṭaikkaṇ aruḷiṉai eṉakkuk
kaṟpakat taruvē katiyuṟat tiruppu!
peṟṟavaḷ nīyē! peruṅkaṭal utitta
naṟṟava mēyuṉai nāṭukiṉ ṟēṉē!
(2)

(2.1) (Obeisance to Mother Mahalakshmi) Who, having been deeply charmed (by Hari), incessantly steers Her Divine-glances on the Face of Murari, the destroyer of the demon ‘Muran’; (2.2) The Divine-glances, brimming with both Love and Bashfulness, flutter towards Hari, on and off, in succession; (2.3) as if Her dark beautiful eyes are the female bees flying around the large Lilly flower; (2.4) May the Divine Mother, One Who has arisen out of the Ocean of Nectar, bestow upon me (with Her Divine-glances) filled with Auspiciousness!

विश्वामरेन्द्रपदविभ्रमदानदक्षम्_
आनन्दहेतुरधिकं मुरविद्विषोऽपि ।
ईषन्निषीदतु मयि क्षणमीक्षणार्धम्_
इन्दीवरोदरसहोदरमिन्दिरायाः ॥३॥
viśvāmarēndrapadavibhramadānadakṣam̮
ānandahēturadhikaṁ muravidviṣō’pi |
īṣanniṣīdatu mayi kṣaṇamīkṣaṇārdham̮
indīvarōdarasahōdaramindirāyāḥ ||3||
mūvula karuḷum muṭiyara samaiyum
tēvula karacum teḷivip pavaḷē!
muraṉaḻit tavarum sukhamiṉit tamatuḷ
akamiṉit tavaruḷ āḷvip pavaḷē!
nīlat tāmarai nīḷviḻik karuṇai
yālek kālamum vāḻvip pavaḷē!
ēḻaic cēyeṉai eṇṇik kaṇṇimai
pāti tiṟantaruḷ pālit taruḷē!
(3)

(3.1) (Obeisance to Mother Mahalakshmi) Who grants the role of Indra for Lordship over three worlds; (3.2) Who overwhelms even Sri Hari, the destroyer of ‘Muran’, to be enthralled in great joy; (3.3) May, even a part of Her Divine-glance that are half-closed be upon me; (3.4) Which are filled with the Splendour of long Blue lotus flowers.

आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दम्_
आनन्दकन्दमनिमेषमनङ्गतन्त्रम् ।
आकेकरस्थितकनीनिकपक्ष्मनेत्रं
भूत्यै भवेन्मम भुजङ्गशयाङ्गनायाः ॥४॥
āmīlitākṣamadhigamya mudā mukundam̮
ānandakandamanimēṣamanaṅgatantram |
ākēkarasthitakanīnikapakṣmanētraṁ
bhūtyai bhavēnmama bhujaṅgaśayāṅganāyāḥ ||4||
muḻuviḻi yālē mukuntaṉiṉ aḻakait
taḻuviya māyē! taṉṉimai yāmē
vaḻuvimai mūṭā vakaiyiṉil iṉbaṅ
koluviṭa mālaṉ kūṭiya tēṉē!
viḻiyiraṅ kāyō! virimuṉi ōrat
tuḷiyiṟa kāki oḷitara vātō!
arituyi laravat tariloyi lāḷē!
aṉbē! amutē! aruḷtaru vāyē!
(4)

(4.1) (Obeisance to Mother Mahalakshmi) Who with Her wide-opened eyes, has completely taken-in the glorious Form of Mukunda; (4.2) With the unwinking stare, Who grants the means for extreme Joy; (4.3) Let a ray of Divine-glance from the corner of Her eyes take Wing; (4.4) and fly to me, to grant the Divine-grace of Her, Who is the Virtuous Consort of the Lord resting on the Serpent;

बाह्वन्तरे मधुजितः श्रितकौस्तुभे या
हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतोऽपि कटाक्षमाला
कल्याणमावहतु मे कमलालयायाः ॥५॥
bāhvantarē madhujitaḥ śritakaustubhē yā
hārāvalīva harinīlamayī vibhāti |
kāmapradā bhagavatō’pi kaṭākṣamālā
kalyāṇamāvahatu mē kamalālayāyāḥ ||5||
matuvara ṉariyiṉ irukara miṭaiyil
mākaus tupamaṇi mātē! nīyē
putuvita oḷiyil poṉnī lattil
pūmut taṇintaruṭ pōtē! nīyē
muṟuvali liruviḻi muṭiviṉi larusukham
mūḻkiyi tantarum tāyē! nīyē
arumalar viḻiyai aṭiyaṉiṉ vaḻiyil
ārttaru ḷuntiṭa vāyēṉ nīyē!
(5)

(5.1) (Obeisance to Mother Mahalakshmi) Who rests between the Arms of Sri Hari, the destroyer of ‘Madhu’, like the wondrous necklace, ‘Kaustubha Mani’; (5.2) and glittering like a string of Pearls, glowing in the hue of Golden Blue; (5.3) Whose Divine-glances excite the Lord Hari to be in Love; (5.4) May those Divine-glances of the Lotus Eyes fall upon me to bestow the benign grace!

कालाम्बुदालिललितोरसि कैटभारेर्_
धाराधरे स्फुरति या तडिदङ्गनेव ।
मातुः समस्तजगतां महनीयमूर्तिर्_
भद्राणि मे दिशतु भार्गवनन्दनायाः ॥६॥
kālāmbudālilalitōrasi kaiṭabhārēr̮
dhārādharē sphurati yā taḍidaṅganēva |
mātuḥ samastajagatāṁ mahanīyamūrtir̮
bhadrāṇi mē diśatu bhārgavanandanāyāḥ ||6||
kaiṭapaṉ aḻittavaṉ maiyiruḷ mārpakak
kalaiyiṉil oḷiviṭa nilaviṭum vaṇdu !
maimukiṟ tiraipoti meyccuṭar miṉṉal!
poyyaḻit tiṭavarum poṟkatirt tuṇṭu!
meyyaruṭ teyvamuṉ mēṉmaiyaik kaṇṭu
vaiyamum tāyeṉa varittiṭal uṇṭu!
paiyaṉāyp pārkavap pālaṉāy niṉṉaruḷ
ceyyeṉat tāyuṉaic cēyaṉ vēṇṭiṉēṉ!
(6)

(6.1) (Obeisance to Mother Mahalakshmi) Who plays as a glittering Bee on the dark-water-bearing-cloud like Bosom of Sri Hari, the destroyer of Kaitabha; (6.2) thereby causing lustrous lightning flashing over the dark sky; (6.3) O Mother, Yours is the most adorable form of divinity in all the Universe; (6.4) May (Your glorious form) bestow Prosperity to me, the descendant of Bhargava!

प्राप्तं पदं प्रथमतः किल यत्प्रभावान्
माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथेन ।
मय्यापतेत्तदिह मन्थरमीक्षणार्धं
मन्दालसं च मकरालयकन्यकायाः ॥७॥
prāptaṁ padaṁ prathamataḥ kila yatprabhāvān
māṅgalyabhāji madhumāthini manmathēna |
mayyāpatēttadiha mantharamīkṣaṇārdhaṁ
mandālasaṁ ca makarālayakanyakāyāḥ ||7||
varaiyaṟai kaṭantu vāḻviṭam iḻanta
kaṇaimalar iṭuvaṉ katipeṟa irantu
matuvaraṉ itayam malariṭam tikaḻntu
varumaruḷ curantu varahari makiḻntu
tiruvaruḷ karanta tirumakaḷ karuṇai
peṟuvatu ciṟanta pēṟeṉap paṇintēṉ!
araiyimai mūṭiya aruḷviḻi eṉmēl
niṟaivuṟap pativāy! nīḷkaṭal makaḷē!
(7)

(7.1) (Obeisance to Mother Mahalakshmi) By Whose Grace, Manmatha, the Lord of Love regained a place; (7.2) on the slayer of Madhu, so that Sri Hari is forever in Joy with Mahalakshmi, the conferrer of Happiness; (7.3) May that Power of Her Divine-glance, even with Her half-closed eye, fall on me at once; (7.4) softly and gently with love, O the Daughter of the Nectar-ocean!

दद्याद् दयानुपवनो द्रविणाम्बुधाराम्_
अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे ।
दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं
नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥८॥
dadyād dayānupavanō draviṇāmbudhārām̮
asminnakiñcanavihaṅgaśiśau viṣaṇṇē |
duṣkarmagharmamapanīya cirāya dūraṁ
nārāyaṇapraṇayinīnayanāmbuvāhaḥ ||8||
karuṇait teṉṟal kalantitam vaḻiya
maruvaṟ ṟaruḷum maḻaiyiṉip poḻiya
katiyaṟ ṟaḻutum kalaṅkum ciṟupuḷ
eṉayiṟ ṟuḻalum ēḻaiyar makiḻa
uḻaluṟ ṟamiḻum ūḻiṭar akala
uṉataruḷ maḻaiyil ulakiṉi naṉaiya
nalamuṟ ṟaruḷum nayaṉam malarka!
nāraṇar ārtta nalamē varuka!
(8)

(8.1) (Obeisance to Mother Mahalakshmi) May She bestow the Breeze of Her Compassion and the Shower of Her Prosperity; (8.2) to this down-trodden, who is desperate, in despair like a helpless chic, deep in utter poverty; (8.3) and rid of all sinful activities (the cause of all miseries in life); (8.4) Let there be the Shower of Compassion from the Eyes of the Darling of Sri Narayana!

इष्टा विशिष्टमतयोऽपि यया दयार्द्र_
दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्ते ।
दृष्टिः प्रहृष्टकमलोदरदीप्तिरिष्टां
पुष्टिं कृषीष्ट मम पुष्करविष्टरायाः ॥९॥
iṣṭā viśiṣṭamatayō’pi yayā dayārdra̮
dr̥ṣṭyā triviṣṭapapadaṁ sulabhaṁ labhantē |
dr̥ṣṭiḥ prahr̥ṣṭakamalōdaradīptiriṣṭāṁ
puṣṭiṁ kr̥ṣīṣṭa mama puṣkaraviṣṭarāyāḥ ||9||
aṭaintiṭa muṭiyā ācaiyum aruḷum
kaṭaiviḻi pōtum kaivarak kūṭum!
taṭaiyaṟak kōrum amarariṉ vīṭum
taṇviḻi īram tantaruḷ kūṭum!
viṭaiyuṟum viḻiyun tāmarai maṇamum
iṭaiyaṟa irukkum! eṅkeṉum iṉikkum!
maṭiyitaḻp paṅkaya mātavi śrīniti!
aṭiyaṉiṉ ācaikaḷ ākkiṭum sannidhi!
(9)

(9.1) (Obeisance to Mother Mahalakshmi) Whose Compassionate Glance can fulfil even the rarest of the desires; (9.2) like attaining the heavenly abode without difficulty; Moist with compassion, Her Divine-glance; (9.3) Is like the lustrous splendour in the heart of a Lotus; Let that Compassionate glance blossom like a Lotus; (9.4) May It nourish all my desires! That Compassionate Glance of Mother, seated on the Lotus!

गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति
शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।
सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै
तस्मै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥१०॥
gīrdēvatēti garuḍadhvajasundarīti
śākambharīti śaśiśēkharavallabhēti |
sr̥ṣṭisthitipralayakēliṣu saṁsthitāyai
tasmai namastribhuvanaikagurōstaruṇyai ||10||
vāyuraiyum nalloliyiṉ vaṭivaḻaki nīyē!
vaṉappuṭaiya karuṭaṉamar vākaṉariṉ nērē!
vāḻvuvaḷa māyvayalum vaḷarunava nitiyē!
vaḷarmatiya ṉārmikavum uḷamakiḻum patiyē!
kōḷpuvaṉa māyakilaṅ koṇṭuviḷai yāṭik
kūṭivaḷarn tūṭiyaḻin tāṭumpara aṟivē!!
yāvulakum āṉakuru ēkumaruṭ tuṇaiyē!
mūvulaku nāṭimaṉam muṉiyumiḷaṅ kalaiyē!
(10)

(10.1) (Obeisance to Mother Mahalakshmi) Who is the Goddess of Speech (Sarasvati), Who is the beautiful Consort of the Lord who rides on Garuda; (10.2) and the Provider of all food and nourishments (Lakshmi) and Who is loved by the Lord wearing the Moon (Parvati); (10.3) Who forever remains as the Witness to the Divine Play of Creation, Sustenance and Dissolution (Sri Lalithambal); (10.4) Who is forever young as the eternal Consort of the Universal Guru, To that Maha Shakti, all Three Worlds reverentially abide.

श्रुत्यै नमोऽस्तु शुभकर्मफलप्रसूत्यै
रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै ।
शक्त्यै नमोऽस्तु शतपत्रनिकेतनायै
पुष्ट्यै नमोऽस्तु पुरुषोत्तमवल्लभायै ॥११॥
śrutyai namō’stu śubhakarmaphalaprasūtyai
ratyai namō’stu ramaṇīyaguṇārṇavāyai |
śaktyai namō’stu śatapatranikētanāyai
puṣṭyai namō’stu puruṣōttamavallabhāyai ||11||
arumaṟaip poruḷē aḻakē vāḻka!
aṟavōr karavum payaṉē vāḻka!
aḻakiya iratiyē aruḷē vāḻka!
aruṅkuṇak kaṭalē amutē vāḻka!
shaktip poruḷē sādhaki vāḻka!
yuktiyil āyiram utittaṉaḷ vāḻka!
pularntiṭum nalamē pugaḻē vāḻka!
puruṣōt tamariṉ pukalē vāḻka!
(11)

(11.1) (Obeisance to Mother Mahalakshmi) Obeisance to You, the Form and Essence of Vedas; And the auspicious benediction from the virtuous Vedic lives; (11.2) Obeisance to You, the enchanting Rati, the ocean of all virtues; (11.3) Obeisance to You, the Maha Shakti, residing as the Power of Kundalini, in the abode of thousand petals; (11.4) Obeisance to You, the Nourishing Power, Who is he beloved of Lord Hari!

नमोऽस्तु नालीकनिभाननायै
नमोऽस्तु दुग्धोदधिजन्मभूत्यै ।
नमोऽस्तु सोमामृतसोदरायै
नमोऽस्तु नारायणवल्लभायै ॥१२॥
namō’stu nālīkanibhānanāyai
namō’stu dugdhōdadhijanmabhūtyai |
namō’stu sōmāmr̥tasōdarāyai
namō’stu nārāyaṇavallabhāyai ||12||
tāmarai mukattut taḷirē vāḻka!
tāyeṉak kaṉiyum tayavē vāḻka!
pāṟkaṭal utitta parivē vāḻka!
paiṅkoṭi toṭutta payaṉē vāḻka!
nilavoḷi amutac sukhamē vāḻka!
nittilam amarnta nilaiyē vāḻka!
nāraṇaṉ śrīmati nalamē vāḻka!
nannalan tarumari nāyaki vāḻka!
(12)

(12.1) (Obeisance to Mother Mahalakshmi) Obeisance to You, the Lotus-faced Mother; (12.2) Obeisance to You, Who came out of the Milky-Ocean and is enchanting; (12.3) Obeisance to You, Who resides in the beauty of the sweet Moon; (12.4) Obeisance to You, Who is the most beloved of Sri Narayana!

सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि
साम्राज्यदानविभवानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरिताहरणोद्यतानि
मामेव मातरनिशं कलयन्तु मान्ये ॥१३॥
sampatkarāṇi sakalēndriyanandanāni
sāmrājyadānavibhavāni sarōruhākṣi |
tvadvandanāni duritāharaṇōdyatāni
māmēva mātaraniśaṁ kalayantu mānyē ||13||
puṟanalam mikavum akamakiḻ vuṟavum
takavarum malariru mukaviḻi taravum
ukaviṭum aracum pariceṉa uracum
kamalamum vaḷariru karuviḻi aruḷum
pukaḻuṉaip paṇiyum pukaleṉuk kiṉiyum
akalavum cuṭuviṉai avaḷavum aḻiyum!
ituvaram taruvāy! iṉiyuṉa taṭimai!
diṉamuṉait toḻukiṟa vekumati tāyē!
(13)

(13.1) (Obeisance to Mother Mahalakshmi) Whose Lotus-Eyes gives the joy through both external prosperities and internal bliss; (13.2) Whose Lotus-Eyes grants the Power to bestow Lordship; (13.3) By adoring Your Glory, all our difficulties and sinful-tendencies disappear; (13.4) (So), O Mother, May I be blessed to be a steadfast devotee, forever serving You and singing Your Glories?

यत्कटाक्षसमुपासनाविधिः
सेवकस्य सकलार्थसम्पदः ।
संतनोति वचनाङ्गमानसैस्_
त्वां मुरारिहृदयेश्वरीं भजे ॥१४॥
yatkaṭākṣasamupāsanāvidhiḥ
sēvakasya sakalārthasampadaḥ |
saṁtanōti vacanāṅgamānasais̮
tvāṁ murārihr̥dayēśvarīṁ bhajē ||14||
maṉṉuyir taḻaikkum marunteṉat taṇmati!
niṉṉaruḷ sheḻikkum nīḷkaṭaik kaṇviḻi!
naṇṇiṭum aṭiyarum nayantiṭum nanniti!
eṇṇiṭum aṉbilē iruntiṭum sannidhi!
eṉṉuyir uṭalmoḻi eṉumikak karuviyum
niṉpukaḻ tutittiṉi nilaiyuṟa iruttum
aṉbaruḷ koṭuppāy! arimalar muraharip
peṇtuṇaip pēṟeṉap perunaṟ tāyē!
(14)

(14.1) (Obeisance to Mother Mahalakshmi) By adoring Whose Merciful Glance is the; (14.2) revered Devotion and the complete Wealth of Her devotees; (14.3) (So), Let my faculties of Speech, Body and Mind be completely soaked by; (14.4) Your Worship; You are the beloved Goddess reigning in the Heart of Murari.

सरसिजनिलये सरोजहस्ते
धवलतमांशुकगन्धमाल्यशोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे
त्रिभुवनभूतिकरि प्रसीद मह्यम् ॥१५॥
sarasijanilayē sarōjahastē
dhavalatamāṁśukagandhamālyaśōbhē |
bhagavati harivallabhē manōjñē
tribhuvanabhūtikari prasīda mahyam ||15||
centā maraiyiliṭam! ceṅkamalam kaiyil!
ventā maraiyāṭai! viḷaṅkumaṇa mālaikaḷ!
cintā maṇiccīrkaḷ! cērttaḻakuc cīmāṭṭi!
nantā viḷakku! nāraṇaṉiṉ āḷvippu!
entāy! iṟaiyavaḷē! evvulakum niṉṉaruḷil
vantāṭum uṇmai! vāḻvikkum naṟpēṟu!
ammā! mālekṣmi! attaṉaiyum tantāḷum
pemmāṉ tuṇaiyē! piccaiyiṭu niṉṉaruḷē!
(15)

(15.1) (Obeisance to Mother Mahalakshmi) Who abides in the Lotus and holds Lotus in Her Hands; (15.2) Who is radiating in a lustrous white dress and wearing the most fragrant garlands; (15.3) O Goddess, You are Dearer than the Dearest of Hari and the most enchanting; (15.4) You are the Source and the substratum for the Prosperity of all the Three Worlds; O Mother, Please show Mercy on me!

दिग्घस्तिभिः कनककुम्भमुखावसृष्ट_
स्वर्वाहिनीविमलचारुजलप्लुताङ्गीम् ।
प्रातर्नमामि जगतां जननीमशेष_
लोकाधिनाथगृहिणीममृताब्धिपुत्रीम् ॥१६॥
digghastibhiḥ kanakakumbhamukhāvasr̥ṣṭa̮
svarvāhinīvimalacārujalaplutāṅgīm |
prātarnamāmi jagatāṁ jananīmaśēṣa̮
lōkādhināthagr̥hiṇīmamr̥tābdhiputrīm ||16||
ticaiyāṉai ellāmuṉ tirumēṉi taricikkum!
icaivākap poṟpāṉai iṭumēvi paricikkum!
vāṉalaiyiṉ pālveḷiyai vaḷanīrāy arccikkum!
kāṇavarum vāṉulakum katiroḷiyāy karccikkum!
aṇṭaṅkaḷ yāvumuṉ aruḷākat terintēṉē!
atikālai yāṉuṉṉai aṟivākat teḷintēṉē!
oṇṭamutak kaṭalmakaḷē! ōṅkārat taṭamaruḷē!
taṇṭamitu niṉṉaṭimai! tāyē niṉcaraṇam!
(16)

(16.1) (Obeisance to Mother Mahalakshmi) Who (is reverentially bathed) by all Directions that are like Elephants, carrying Golden Pitchers; (16.2) containing the purest flow of celestial water from the milky-way and Whose Body thus bathed, beautifully shines, the lustre of Which is reflected by the Universe; (16.3) which I see at every dawn, thereby adoring You as the Universal Mother; (16.4) You are the Consort of the Supreme Lord and the Daughter of the Nectar Ocean.

कमले कमलाक्षवल्लभे
त्वं करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलोकय मामकिञ्चनानां
प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥१७॥
kamalē kamalākṣavallabhē
tvaṁ karuṇāpūrataraṅgitairapāṅgaiḥ |
avalōkaya māmakiñcanānāṁ
prathamaṁ pātramakr̥trimaṁ dayāyāḥ ||17||
maṭaiyilā aṉbaruḷ mālaruṭ tēviyē!
mātavi! kamaliṉi! makiḻnteṉak karuḷiṭu!
naṭaiyilāp pēṭaiyāṉ! naḷiṉamāy niṉmalar
kaṭaiyilāk kaṇṇiṉāl kaḷitteṉaip pārttiṭu!
kaṭaiyaṉāy ēḻaiyāyk katiyilāc cēyaṉāy
iṭaiyaṟā tuṉaimaṉam ēṟṟiṭum nēyaṉāy
aṭimaiyāṉ terintiṭu! aṉpiṉāl niṉṉaruḷ
peṟukayāṉ takutiyiṟ periyaṉeṉ ṟeṇṇiṭu!
(17)

(17.1) (Obeisance to Mother Mahalakshmi) O Mother Kamala, the Beloved Darling of Sri Hari, the Lotus-Eyed; (17.2) Please bestow upon me with Your Divine-glance that is full of waves of Compassion; (17.3) I am down-trodden, utterly Destitute; (17.4) (so), the foremost person deserving Your unreserved Compassion!

स्तुवन्ति ये स्तुतिभिरमूभिरन्वहं
त्रयीमयीं त्रिभुवनमातरं रमाम् ।
गुणाधिका गुरुतरभाग्यभागिनो
भवन्ति ते भुवि बुधभाविताशयाः ॥१८॥
stuvanti yē stutibhiramūbhiranvahaṁ
trayīmayīṁ tribhuvanamātaraṁ ramām |
guṇādhikā gurutarabhāgyabhāginō
bhavanti tē bhuvi budhabhāvitāśayāḥ ||18||
immaiyil ittuti iruttiṭat tiṉamum
mummaṟaic caktiyil muṉippava revarum
muvvula kaṉṉai mūvaṉu pavattuc
cevviya āṉmā śrīmahā lekṣmi
naṉṉaruḷ taravum naṟkuṇam mikavum
puṇṇiyar varavum pukaḻnalam ukavum
maṉṉuyir matikkum māṇpuṟa vāḻntu
taṉṉuṇar viruntu takaiyaṭai vārē!
entāy! iṟaiyavaḷē! evvulakum niṉṉaruḷil
(18)

(18.1) (Obeisance to Mother Mahalakshmi) Those who recite this Hymn, everyday (with good understanding); (18.2) (by the grace of) Mahalakshmi, the embodiment of the Three Vedas and the Mother of the Three Worlds; (18.3) will be filled with abundant Virtues, and be blessed with the all benefits of virtuous deeds; (18.4) (Such devotees) will live gloriously and become the Self-realized, by Your Divine Grace, giving the Enlightenment!

 

Share this Post