Nirvana Shatakam (Tamil)

(Read in ENGLISH)

மனீஷா பஞ்சகம் – முடிவுரை

எட்டு வயதான பாலகனாக இருந்த ஆதி சங்கரர், ‘நீ யார்’ எனக் கேட்ட குரு கோவிந்த பாதருக்குப் பதிலாக அளித்த ‘முகவுரையே’, இந்த மனீஷா பஞ்சகம் எனும் உரை நூலுக்குத் தக்க ‘முடிவுரை’ என்பது என் பணிவு.

‘நிர்வாண ஷடகம்’ எனும் பெயர் கொண்ட, ஆறு பாடல்களில், தான், ‘நான்’ எனும் ஆணவமிழந்து, தூல, சூக்ஷ்ம, காரண உடல்களைக் கடந்து, புலனால் அறியப்படாமல், பாவம், புண்ணியம் எனும் வேறுபாடுகள் இல்லாமல், தர்மம், முக்தி எனும் குறிக்கோளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி மதப் பாகுபாடுங்கள் இல்லாமல், ஆசை, வெறுப்பு இல்லாமல், இன்ப துன்பங்களை அறியாமல், பிறப்போ இறப்போ எதுவுமற்று, பெற்றவரோ,உற்றவரோ எனவேறு யாருமின்றி, செயலோ, செயல்படு பொருளோ, செயற்பயனோ, செயற்பயனின் அனுபவமோ எதுவுமில்லாது, நிலையான அறிவாகிய ஆனந்தமான சிவமாக இருப்பவன் என்று எட்டு வயதான பாலகனாக இருந்த ஆதி சங்கரர், தமது நிச்சயித்த அறிவினால், ‘நீ யார்’ எனக் கேட்ட குரு கோவிந்த பாதருக்குப் பதிலாக அறிமுகம் செய்து கொண்ட பாடல்களே நிர்வாண ஷடகம் ஆகும்.

உண்மையை உணர்ந்தும், குருவருளே திருவருள் உய்வதற்கு அவசியம் என்பதை வலியுறுத்தவே, ஆதி சங்கரர், பிரம்ம ஞானியான கோவிந்தபாதரிடம் பணிந்து கற்றதும், பின்பு கல்விச்செருக்கு இல்லாமல், அத்வைத ஞானத்தால் திகழ்ந்த புலையனும் தமது குருவே என்று நிச்சயித்த அறிவை இந்த மனீஷா பஞ்சகத்தில் தந்த கருணையும், நமது கண்களைத் திறக்கின்ற அறிவொளியே ஆகும்.

அப்பயனே மனீஷா பஞ்சகம் எனும் அரிய நூல் நம்மை அழைத்துச் செல்லும் ஞான பூமி!

அதனால் நிர்வாண ஷடகம் எனும் ஆதிசங்கரரின் முகவுரையே இதன் முடிவுரையாகத் தரப்பட்டுள்ளது.

॥ निर्वाण षटकम् ॥

(நிர்வாண ஷடகம்)

मनो बुद्ध्यहंकारचित्तानि नाहम्
न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे
न च व्योम भूमिर् न तेजॊ न वायु:
चिदानन्द रूप: शिवोऽहम् शिवॊऽहम् ॥1॥
மனோ பு₃த்₃த்₄யஹங்காரசித்தானி நாஹம்
ந ச ஶ்ரோத்ர ஜிஹ்வே ந ச க்₄ராண நேத்ரே
ந ச வ்யோம பூ₄மிர் ந தேஜொ ந வாயு:
சிதா₃னந்த₃ ரூப: ஶிவோ(அ)ஹம் ஶிவொ(அ)ஹம் || 1||
இல்லைமனம்! மதியில்லை! இறுமாப்போ நினைவுமிலை!
இல்லைசெவி நாமணமும் ஈர்த்தவிழிப் புலனுமிலை!
இல்லைவெளித் தீவளியோ இருநிலமோ நீருமிலை!
நல்லறிவு இன்பஉரு! நான்சிவமே! நான்சிவமே! (1)
न च प्राण संज्ञो न वै पञ्चवायु:
न वा सप्तधातुर् न वा पञ्चकोश:
न वाक्पाणिपादौ न चोपस्थपायू
चिदानन्द रूप: शिवोऽहम् शिवॊऽहम् ॥2॥
ந ச ப்ராண ஸஞ்ஜ்ஞோ ந வை பஞ்சவாயு:
ந வா ஸப்ததா₄துர் ந வா பஞ்சகோஶ:
ந வாக்பாணிபாதௌ₃ ந சோபஸ்த₂பாயூ
சிதா₃னந்த₃ ரூப: ஶிவோ(அ)ஹம் ஶிவொ(அ)ஹம் || 2||
இல்லையிப் பிராணன்! இயக்குமைந்து காற்றுமிலை!
இல்லைஎழு மெல்லுடல்! இருத்துமைந்து காயமிலை!
இல்லைகை கால்வாய் இனம்கழிவுக் கலனிலிலை!
நல்லறிவு இன்பஉரு! நான்சிவமே! நான்சிவமே! (2)
न मे द्वेष रागौ न मे लोभ मोहौ
मदो नैव मे नैव मात्सर्य भाव:
न धर्मो न चार्थो न कामो ना मोक्ष:
चिदानन्द रूप: शिवोऽहम् शिवॊऽहम् ॥3॥
ந மே த்₃வேஷ ராகௌ₃ ந மே லோப₄ மோஹௌ
மதோ₃ நைவ மே நைவ மாத்ஸர்ய பா₄வ:
ந த₄ர்மோ ந சார்தோ₂ ந காமோ நா மோக்ஷ:
சிதா₃னந்த₃ ரூப: ஶிவோ(அ)ஹம் ஶிவொ(அ)ஹம் || 3||
இல்லைஅவா! வெறுப்பில்லை! ஈர்த்தாசைக் கலக்கமிலை!
இல்லைநான் உணர்வு!அறம் ஏதுமுக்தி வழக்கமிலை!
இல்லைமனத் தீர்விலிலை! ஈர்த்தபொருள் எதிலுமிலை!
நல்லறிவு இன்பஉரு! நான்சிவமே! நான்சிவமே! (3)
न पुण्यं न पापं न सौख्यं न दु:खम्
न मन्त्रो न तीर्थं न वेदा: न यज्ञा:
अहं भोजनं नैव भोज्यं न भोक्ता
चिदानन्द रूप: शिवोऽहम् शिवॊऽहम् ॥4॥
ந புண்யம் ந பாபம் ந ஸௌக்₂யம் ந து₃:க₂ம்
ந மந்த்ரோ ந தீர்த₂ம் ந வேதா₃: ந யஜ்ஞா:
அஹம்ʼ போ₄ஜனம் நைவ போ₄ஜ்யம் ந போ₄க்தா
சிதா₃னந்த₃ ரூப: ஶிவோ(அ)ஹம் ஶிவொ(அ)ஹம் || 4||

இல்லையிரு வினைகளிலை! இன்பமிலை! இடரிலிலை!
இல்லைமறை மொழியிலிலை! இருந்தவமோ துறவிலிலை!
இல்லையனு பவமுமிலை! இயக்கத்தில், பொருளிலிலை!
நல்லறிவு இன்பஉரு! நான்சிவமே! நான்சிவமே! (4)
न मृत्युर् न शंका न मे जातिभेद:
पिता नैव मे नैव माता न जन्म
न बन्धुर् न मित्रं गुरुर्नैव शिष्य:
चिदानन्द रूप: शिवोऽहम् शिवॊऽहम् ॥5॥
ந ம்ருʼத்யுர் ந ஶங்கா ந மே ஜாதிபே₄த₃:
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம
ந ப₃ந்து₄ர் ந மித்ரம் கு₃ருர்னைவ ஶிஷ்ய:
சிதா₃னந்த₃ ரூப: ஶிவோ(அ)ஹம் ஶிவொ(அ)ஹம் || 5||
மரணபய மேதுமிலை! மதஜாதி பேதமிலை!
பிறந்தநிலை ஏதுமிலை! பெற்றவனாய் ஆனதிலை!
உறவுஎது! தோழமையோ உயர்குருவோ சீடரிலை!
நல்லறிவு இன்பஉரு! நான்சிவமே! நான்சிவமே! (5)
अहं निर्विकल्पॊ निराकार रूपॊ
विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणाम्
न चासंगतं नैव मुक्तिर् न मेय:
चिदानन्द रूप: शिवोऽहम् शिवॊऽहम् ॥6॥
அஹம்ʼ நிர்விகல்பொ நிராகார ரூபொ
விபு₄த்வாச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்₃ரியாணாம்
ந சாஸங்க₃தம் நைவ முக்திர் ந மேய:
சிதா₃னந்த₃ ரூப: ஶிவோ(அ)ஹம் ஶிவொ(அ)ஹம் || 6||
இல்லையுரு! குணமுமிலை! எங்கேயும் பரந்தநிலை!
எல்லையிலை! புலனறிவில் எட்டாது விரிந்தகலை!
வல்லவடி வானநிறை! வகுத்தசிறை, விடுதலையுமிலை!
நல்லறிவு இன்பஉரு! நான்சிவமே! நான்சிவமே! (6)

மணீஷாபஞ்சகம் பாடல் (5)

மணீஷாபஞ்சகம் முகவுரை

Share this Post

Leave a Comment