Pages: 1 2
Pages: 1 2
वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां
  तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम्‌।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां
  आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्‌॥१॥
vedo nitya¬mad¬hīy¬atāṁ tadu¬ditaṁ karma svanuṣṭhīyatāṁ
 teneśasya vid¬hīy¬atāma¬pac¬itiḥ kāmye matistya¬jy¬atām |
pāpaughaḥ parid¬hūy¬atāṁ bhava¬sukhe dośo’nusandhīyatāṁ
 ātmec¬chā vyavasīy¬atāṁ nijagṛhāttūrṇaṁ vinirgamy¬atām ||1||
மறைமுறை தினமும் பயில்க!  மதியதால் செயல்கள் புரிக!
இறையருள் பணியாய் முயல்க! இகசுகச் செயல்கள் களைக!
பழிபாவத் தளைகள் உடைக!   பவசுகக்  குறையை உணர்க!
சரியான்ம முறைகள் ஒழுக!  சட்டென்று உடல்வீ டறுக!  (1)

01. Learn the scriptures and their import daily
02. (By such learning) Reflect dharma in all your karma (thoughts, words and deeds)
03. (This will enable you to) Perform all your duties as the service to God
04. (Therefore) Give up activities that are driven by worldly desires
05. (This will help you to) Uproot all sinful vices
06. (and to ) Realize the folly or impermanence of worldly pleasures
07. (Therefore) Seek the most profound – the knowledge of Self
08. (When Self-awareness is achieved) Renounce the house at once to stay at such exalted state of realization

01. தினமும் மறை நெறிமுறைகளைப் பயில்க
02. (அப்படிப் பயில்வதால்) மனம், வாக்கு, செயல் எல்லாவற்றிலும் அத்தகைய தர்ம நெறிகளை வெளிப்படுத்துக.
03. (அப்படி நடப்பதால்) எல்லாச் செயலையும் இறைப்பணியாகக் கருதிச் செய்க.
04. (அதன் காரணமாக) உலக ஆசைகளை விட்ட செயலாளியாக இரு.
05. (இதன் பலனாக) எல்லாப் பழிபாவங்களையும் வேரொடு களை.
06. (மேலும்) உலக இன்பம் நிரந்தரமற்றது என உணர்.
07. (அப்படி உணர்வதால்) மிகவும் உயர்வான ‘ஆன்ம அறிவானுபவத்தை’ நாடு.
08. (அத்தகைய ஆன்ம அறிவானுபவம் நிலையாக) உடனே, உடலாகிய வீட்டின் பற்றினை விடு.

सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां
शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्‌।
सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं तत्पादुका सेव्यतां
  ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम्‌॥२॥
saṅgaḥ satsu vid¬hīy¬atāṁ bha¬ga¬vato bhaktirdṛḍhā”dhīyatāṁ
 śāntyādiḥ par¬icīy¬atāṁ dṛḍhataraṁ kar¬māśu santya¬jy¬atām |
sadvidvānupasṛpyatāṁ pra¬tid¬inaṁ tat¬pā¬dukā sevy¬atāṁ
 brahmaikākṣaramarthyatāṁ śrutiśirovākyaṁ samākarṇyatām ||2||
புனிதநல் லுறவுகள் செழிக்க!   புகலிறை மனதினில் முகிழ்க்க!
இனிதறு குணங்கள் நிலைக்க!  இச்சையீச் செயல்கள் விடுக்க!
நயந்தரு குருவை மதிக்க!  நாளுநல் லடிகள் துதிக்க!
உயர்பரம் பொருள்ஓம் விழைக! உணர்மறை மொழியை ஏற்க!  (2)

09. (For such virtuous life) Seek the company of good always
10. (Which will) Reinforce the undiluted devotion to God
11. (This will enable to) Cultivate essential qualities (control of mind, control of senses, abidance of mind, equanimity, endurance and commitment)
12. (Such qualities will help to) Shun worldly-desire-driven activities
13. (With such maturity) Approach the Learned for the true knowledge.
14. (To understand) Surrender and serve at the feet of such teachers
15. (For the ultimate goal), Seek only the knowledge of the Brahmam, indicated by the primordial sound ‘AUM’
16. (At the tutalege) Focus on the ‘most significant’ sentences (‘maha vakya’) of Upanishads which reveal the knowledge

09. (அப்புனித வாழ்க்கைக்கு) நல்லோர்ஃநல்லன நாடு.
10. (அதனால்) மாறாத இறையுணர்வு கொள்.
11. (அதனால்) மனவடக்கம்,உணர்வடக்கம், மனவொழுக்கம், சமநிலை, ஏற்புடமை, உறுதி ஆகிய அடிப்படை குணங்களை வளர்.
12. (அக்குணங்களால்) உலக ஆசை உந்திடும் செயல்களைத் தவிர்.
13. (அம்முதிர்ச்சியால்) சான்றோரிடம் பேருண்மை அறியத் துணி.
14. (அதற்கு) ஆசானின் அடி பணி.
15. (தலையான பலனுக்கு) ஓம் எனும் மந்திரம் உணர்த்தும் பிரம்மத்தை அறியக் கேள்
16. (ஆசான் விளக்கையில்) மறையின் அரிய வார்த்தைகளை ஆழமாய்க் கேள்.

वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरः पक्षः समाश्रीयतां
  दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसन्धीयताम्‌।
ब्रह्मास्मीति विभाव्यतामहरहर्गर्वः परित्यज्यतां
  देहेऽहंमतिरुझ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम्‌॥३॥
vākyārthaśca vicāry¬atāṁ śrutiśiraḥ pakṣaḥ samāśrīy¬atāṁ
  dus¬tarkāt¬su¬vi¬ramy¬atāṁ śrutimatastarko’nusandhīyatām |
brah¬mās¬mīti vib¬hāvy¬atāma¬hara¬har¬garvaḥ par¬itya¬jy¬atāṁ
  dehe’haṁmatirujhyatāṁ bud¬ha¬janairvādaḥ par¬itya¬jy¬atām ||3||
மாமறை வாக்கியம் நோற்க!  மறைவழிப் போக்கினில் நூற்க!
வாதவி வாதம் நீக்க!    வழிமறை ஆய்ந்தறி வேற்க!
நான்பரம் எனத்தினம் ஏற்க!  நயமறு ஆணவம் போக்க!
பூணுடல் யானிலை பூக்க!  புரிந்தெதிர்ப் பேச்சரி தாக்க! (3)

17. (Continue to) Contemplate on the ‘ maha-vakyas’ or great truth
18. (To clarify and comprehend, always) Analyse on the basis of Vedas
19. (Although there may be differing views) Do not argue against distorted views.
20. (For the conviction) Perform reasoning only based on the scriptures .
21. (By such conviction) Endure daily on the thought ‘ I am Brhamam’.
22. (For the complete understanding) Shed the ego, the vain ‘I’.
23. (In this progress) Give-up the identification of ‘Self’ with the bodies.
24. (Even if there are criticisms) Refrain from all arguments especially aginst the wise.

17. (தொடர்ந்து) மறையின் முக்கிய வாக்கியங்களை ஆய்ந்துணர்.
18. (அதில் வரும் ஐயம் அகல) மறையின் வழிகளிலேயே ஆராய்க.
19. (மாறான கருத்துக்களைக் கேட்டாலும்) வாதம் செய்யாதே.
20. (உறுதிப்படுத்த) மறைவழி ஆதாரங்களையே ஏற்க
21. (அவ்வுறுதியால்) தினமும் யானே பிரம்மம் எனும் உணர்விலிரு.
22. (முழுவுணர்வுக்கு) நான் எனும் அகந்தையை விடு.
23. (இப்பயிற்சியில்), உடலே நான் எனும் பொய்மை விடு.
24. (பிறர் விமரிசித்தாலும்), குறிப்பாக சான்றோரிடம் வாதாடாதே.

क्षुद्व्याधिश्च चिकित्स्यतां प्रतिदिनं भिक्षौषधं भुज्यतां
  स्वाद्वन्नं न तु याच्यतां विधिवशात्प्राप्तेन सन्तुष्यताम्‌।
शीतोष्णादि विषह्यतां न तु वृथा वाक्यं समुच्चार्यतां
  औदासीन्यमभीप्स्यतां जनकृपानैष्ठुर्यमुत्सृज्यताम्‌॥४॥
kṣudvyādhiśca cik¬it¬sy¬atāṁ pra¬tid¬inaṁ bhikṣauṣadhaṁ bhu¬jy¬atāṁ
  svād¬vannaṁ na tu yācy¬atāṁ vid¬hivaśāt¬prāptena santuṣyatām |
śītoṣṇādi viṣahyatāṁ na tu vṛthā vākyaṁ samuc¬cāry¬atāṁ
  audāsīnyam¬ab¬hīp¬sy¬atāṁ janakṛpānaiṣṭhuryamutsṛjyatām ||4||
பசியொரு நோயெனக் கொள்க! பயத்ததை மருந்தெனக் கொள்க!
ருசிக்கென நுகருதல் தள்க!  விதிப்படி விளைவதில் மகிழ்க!
குளிர்ச்சுடல் சமனெனப் படுக! கூறுவீண் பேச்சினை விடுக!
சுகம்பிற ராலெனல் விலக! சுற்றெவர்க் கிடரிடா தொழுக! (4)

25. (Thereafter, for living on the earth) Treat hunger (and such basic needs of existence) as a disease to cope with.
26. (Without indulging) Quell hunger with whatever is available (i.e. minimize needs)
27. (To remain focus) Refrain from consuming tasty food (or such sensuous pleasures)
28. (Come what may) Accept as the result of past actions (‘prārabdha karma’ – the effect of past actions that are already bearing)
29. (To cope with life) Endure equally both cold and hot (or good and bad) experiences
30. (To focus on the goal) Give-up vain talk
31. (To be independent) Expect nothing from others to give you happiness
32. (At the same time) Abandon all hatred towards others and the environment

17. (தொடர்ந்து) மறையின் முக்கிய வாக்கியங்களை ஆய்ந்துணர்.
18. (அதில் வரும் ஐயம் அகல) மறையின் வழிகளிலேயே ஆராய்க.
19. (மாறான கருத்துக்களைக் கேட்டாலும்) வாதம் செய்யாதே.
20. (உறுதிப்படுத்த) மறைவழி ஆதாரங்களையே ஏற்க
21. (அவ்வுறுதியால்) தினமும் யானே பிரம்மம் எனும் உணர்விலிரு.
22. (முழுவுணர்வுக்கு) நான் எனும் அகந்தையை விடு.
23. (இப்பயிற்சியில்), உடலே நான் எனும் பொய்மை விடு.
24. (பிறர் விமரிசித்தாலும்), குறிப்பாக சான்றோரிடம் வாதாடாதே.
25. (அதன்பின் உலக வாழ்வில்) பசியை நோயாய்க் கருது.
26. (சுவை அனுபவம் தேடாமல்) கிடைத்ததால் பசி ஆற்று.
27. (குறிக்கோளுக்காக) சுவை உணவைத் (உலக சுகத்தைத்) தவிர்.
28. (எது வரினும்) அதை முன்வினைப் பயனாய் மகிழ்வுடன் ஏற்க.
29. (உலகில் வாழ) குளிர் சூடு என எல்லா எதிரினையும் சமனாய்க் கொள்.
30. (குறிக்கோளுக்காக) வீண் பேச்சினை விடு.
31. (தந்நிலை அடைய) பிறரால் சுகம் பெற விழையாதே
32. (அதே சமயம்) பிறருக்கும், சுற்றத்துக்கும் இடர் தராதே.

एकान्ते सुखमास्यतां परतरे चेतः समाधीयतां
  पूर्णात्मा सुसमीक्ष्यतां जगदिदं तद्बाधितं दृश्यताम्‌।
प्राक्कर्म प्रविलाप्यतां चितिबलान्नाप्युत्तरैः श्लिष्यतां
  प्रारब्धं त्विह भुज्यतामथ परब्रह्मात्मना स्थीयताम्‌॥५॥
ekānte sukhamāsy¬atāṁ paratare cetaḥ samād¬hīy¬atāṁ
  pūrṇātmā susamīkṣyatāṁ jaga¬didaṁ tad¬vād¬hitaṁ dṛśyatām |
prākkarma prav¬ilāpy¬atāṁ citibalān¬nāpyut¬taraiḥ śliṣyatāṁ
  prārab¬dhaṁ tviha bhu¬jy¬atā¬matha parabrah¬māt¬manā sthīy¬atām ||5||
ஓய்மனம் தனியிடம் அமர்க!உள்மனம் பரமொடு மலர்க!
யான்முழு தாமுணர் அறிக! அதனாலுல கேதென நிறைக!
மூள்வினை மூதறிந் தோய்க! முயல்வினை சுமையிலா தாக!
ஊழ்வினை சுடுமுடல் நின்றோய்! உயர்பரம் பொருளென வென்றோய்! (5)

 

33. (As a true aspirant) Remain in such posture with steadfast devotion
34. (By perseverance) Absolve the Self in the Brahmam
35. (which will lead to) See the Self in fullness within you
36. (As a result) Cut asunder the delusion of impermanent worlds
37. (Let the flame of knowledge) Burn all effects due of past actions (‘sanchita karma’)
38. (With desire-less action) Be Free from the actions in the present life
39. (Earnestly) Accept what life throws at you as the result of past actions (which already started the bearing – ‘prārabdha karma’)
40. (Now as the liberated Soul) Enjoy the Oneness with God, even in this life.

33. (உண்மை மாணவனாய்) அகலாத பக்தியால் திளைத்திரு.
34. (அம்முயற்சியால்) யான் என்பதை பிரம்மத்தில் கலந்துணர்.
35. (அது கனிந்து) தன்னுள்ளே ஆன்மனை முழுமையாய்க் காட்டுதலை அனுபவி.
36. (அதன் பலனாய்) வெளியுலகெலாம் மாறாத உண்மையில்லை என்றுணர்.
37. (அவ்வறிவால்) இன்னும் அனுபவிக்காத வரவிருக்கும் முன்வினைப் பயனை எரி.
38. (ஆசையற்ற செயலினால்) இனிமேல் வினைப்பயன் இல்லை என்றாக்கு.
39.(முழுமனதுடன்) தற்போது வரும் விளைவுகளை முன்வினை என்று ஏற்றுக்கொள்.
40. (அத்தகைய விடுதலை பெற்ற ஆன்மாவாக) ஒன்றாகிய இறைவனுடன் ஒன்றி வாழ்ந்திரு

Pages: 1 2

Related Posts

Share this Post