ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அத₂ பஞ்சமோ(அ)த்₄யாய​: . ஸந்யாஸயோக₃​:

பாகம் 5 – துறவு நெறி

அர்ஜுன உவாச

ஸம்ன்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புனர்யோக₃ம் ச ஶம்ஸஸி .
யச்ச்₂ரேய ஏதயோரேகம் தன்மே ப்₃ரூஹி ஸுனிஶ்சிதம் (5-1)

விசயன் வினா

1 (1) கிருஷ்ணா, செய்கையைத் துறக்கச் சொல்கிறாய். பிறகு நீயே என்னை யோகத்திலிருந்து தொழில் புரியச் சொல்கிறாய். இதில் எது நன்மை தருவது என்று விளக்கிச் சொல்.

விட்டொழி செயலை என்றே விளம்பிடுங் கண்ணா நீயே
இட்டமாய் யோகம் நின்றே இடுசெயல் முடிக்கத் து|ண்டும்
திட்டமேன் புரிய வில்லை தீதற எடுத்துச் சொல்க
வட்டமாய்க் குறுகி வாழும் வாழ்வினை மாற்றச் செய்க

ஶ்ரீப₄க₃வானுவாச

ஸம்ன்யாஸ​: கர்மயோக₃ஶ்ச நி​:ஶ்ரேயஸகராவுபௌ₄ .
தயோஸ்து கர்மஸம்ன்யாஸாத்கர்மயோகோ₃ விஶிஷ்யதே (5-2)

ஜ்ஞேய​: ஸ நித்யஸம்ன்யாஸீ யோ ந த்₃வேஷ்டி ந காங்க்ஷதி .
நிர்த்₃வந்த்₃வோ ஹி மஹாபா₃ஹோ ஸுக₂ம் ப₃ந்தா₄த்ப்ரமுச்யதே (5-3)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

2 (2-3) செயலைத் துறத்தல், யோகத்திலிருந்து செயலைச் செய்தல் இரண்டும் நன்று. எனினும், யோகவழியில் செயலைச் செய்வது மிகவும் நன்று.

செய்தொழில் துறவும் நன்று சேர்ந்திடும் யோகம் நன்று
எய்திடும் பாணம் விட்டு ஏங்கிடும் விசயா கேட்க
செய்திடும் செயலை மட்டும் சேர்பலன் விட்டு விட்டும்
செய்திடும் செயலே பெரிது செய்யொழி துறவின் அரிது
ஸாங்க்₂யயோகௌ₃ ப்ருத₂க்₃பா₃லா​: ப்ரவத₃ந்தி ந பண்டி₃தா​: .
ஏகமப்யாஸ்தி₂த​: ஸம்யகு₃ப₄யோர்விந்த₃தே ப₂லம் (5-4)
யத்ஸாங்க்₂யை​: ப்ராப்யதே ஸ்தா₂னம் தத்₃யோகை₃ரபி க₃ம்யதே .
ஏகம் ஸாங்க்₂யம் ச யோக₃ம் ச ய​: பஶ்யதி ஸ பஶ்யதி (5-5)

3 (4-5) சாங்கியமாகிய துறவும், யோகமாகிய கடமையும் வெவ்வேறாகத் தெரிந்தாலும் அவை ஒன்றே. ஒன்றுக்கு ஒன்றே ஆதாரம். (துறவும், யோகமும் ஒன்றே. உண்மையான துறவிற்கு அடிப்படை தனக்கான கடமையைப் பற்றற்றுச் செய்வதும், வரும் பலனைத் தியாகம் செய்வதும் ஆகும்).

பரவு மனம் நிறுத்திப் பலன்கவரும் நினை வழித்து
நிரவு கடன் என்றே நிற்கின்ற கரும வழி
துறவு ஏற்ப தற்கே துணையாகும் அறியா யோ
இரவு கடந் தன்றோ இன்பக் கதி ரொளியாம்
ஸம்ன்யாஸஸ்து மஹாபா₃ஹோ து₃​:க₂மாப்துமயோக₃த​: .
யோக₃யுக்தோ முனிர்ப்₃ரஹ்ம நசிரேணாதி₄க₃ச்ச₂தி (5-6)
யோக₃யுக்தோ விஶுத்₃தா₄த்மா விஜிதாத்மா ஜிதேந்த்₃ரிய​: .
ஸர்வபூ₄தாத்மபூ₄தாத்மா குர்வன்னபி ந லிப்யதே (5-7)

4 (6-7) எனவே உனக்கான கடமையைச் சரிவரச் செயவதே யோகமாகும் என உணர்ந்து, நீ கடமை ஆற்று.

கர்ம வழிதான் நன்று கடமையே பாதை என்று
தர்ம மொழிதான் தந்தேன் தனஞ்சயா ஏற்றுக் கொள்க
மர்ம மழிக்கும் மாயம் மாறாத ஞானம் காட்டும்
சர்ம மடைத்த காயம் சாய்ப்பதை ஏற்றுக் கொல்க
நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மன்யேத தத்த்வவித் .
பஶ்யஞ்ஶ்ருண்வன்ஸ்ப்ருஶஞ்ஜிக்₄ரன்னஶ்னன்க₃ச்ச₂ன்ஸ்வபஞ்ஶ்வஸன் (5-8)
ப்ரலபன்விஸ்ருஜன்க்₃ருஹ்ணன்னுன்மிஷன்னிமிஷன்னபி .
இந்த்₃ரியாணீந்த்₃ரியார்தே₂ஷு வர்தந்த இதி தா₄ரயன் (5-9)

5 (8-9) அவ்வாறு கடமை ஆற்றும் பொழுது, எல்லாச் செயலுக்கும் காரணம் பரம்பொருளே என்ற நினைவுடன் செயலாற்றுவதே செயலில் துறவு என்பதாகும்

பார்ப்பதும் படுவதும் முகர்வதும் படுப்பதும் நடப்பதும் துயில்வதும்
சேர்ப்பதும் பிரிப்பதும் மறப்பதும் சிந்தனை பயப்பதும் சகிப்பதும்
வேர்ப்பதும் விடுவதும் பயன்தர விளைந்திடும் ஓரொரு வினையிலும்
ஆர்ப்பது யாரெனுந் தத்துவ மறிந்தவன் செயலினைத் துறந்தவன்
ப்₃ரஹ்மண்யாதா₄ய கர்மாணி ஸங்க₃ம் த்யக்த்வா கரோதி ய​: .
லிப்யதே ந ஸ பாபேன பத்₃மபத்ரமிவாம்ப₄ஸா (5-10)

6 (10) எவன் ஒருவன் செய்கைகளைப் பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்து பற்றற்று இருக்கிறானோ அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலையைப் போலப் பாவங்களுடன் ஒட்டுவதில்லை.

எல்லாச் செயலும் முடிவும் என்னா லிலையெனு மறிவும்
பொல்லாப் புலனும் பலனும் போதன் ஈசனருள் என்றோர்
நில்லாத் தாமரை இலைமேலே நிற்கும் நீர்த்திவலை போலே
செல்லா திருக்கும் மனத்தாலே செல்வர் பிரம்ம னருளாலே
காயேன மனஸா பு₃த்₃த்₄யா கேவலைரிந்த்₃ரியைரபி .
யோகி₃ன​: கர்ம குர்வந்தி ஸங்க₃ம் த்யக்த்வாத்மஶுத்₃த₄யே (5-11)

7 (11) யோகிகள் அவ்வாறே பற்றற்றுத் தனது கடமையைச் செய்து வருவார்கள். அதன்படியே நீயும் நட.

புத்தியால் மனத்தால் மெய்யால் பூதலம் புரி கடனைச்
சத்தியால் பிரித் தறிந்து சாட்சியாய்ப் பார்த் திருக்கும்
நித்திய பிரமம் ஒன்றே நீயெனத் தெரிந்து கொள்க
உத்திய மேதும் வேண்டாம் உயர்நிலை அடைவ துறுதி 

யுக்த​: கர்மப₂லம் த்யக்த்வா ஶாந்திமாப்னோதி நைஷ்டி₂கீம் .
அயுக்த​: காமகாரேண ப₂லே ஸக்தோ நிப₃த்₄யதே (5-12)

8 (12) ஒருமித்த மனத்தோடு இருப்பவன்அமைதி பெறுவான். இல்லையேல் அவனுக்கு எல்லாமே குழப்பந்தான். ( பதறியே செய்கின்ற காரியங்கள் சிதறிடும் அல்லவா? )

சிதறிய மனந்தான் சிக்கல் சிந்தனை குழப்பம் ஆகும்
பதறிய காரியந் தான் பகலிலே கனவாய்ப் போகும்
உதறிடு நான் நானென்ற உணர்ச்சியே மாயப் பூச்சு
கதறிடுங் கன்றை மாதா காப்பதாய்க் கண்ணன் பேச்சு
ஸர்வகர்மாணி மனஸா ஸம்ன்யஸ்யாஸ்தே ஸுக₂ம் வஶீ .
நவத்₃வாரே புரே தே₃ஹீ நைவ குர்வன்ன காரயன் (5-13)

9 (13) ஒன்பது வாயில் கோவிலாகிய எனப்பட்ட உடலினுள் சாட்சியாக இருந்து, சீவன் ஆட்சி செய்கிறான்.

ஒன்பது வாயிற் கோவில் உறைபவன் சீவன் ஆன்மா
தின்பது மாயத் தோற்றம் தினசரி புலனில் மாற்றம்
என்பது சீவர்க் கில்லை எந்நாளும் மாற்றம் இல்லை
இன்பது ன்பம் இல்லை ஏகாந்தச் சாட்சி யன்றோ
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு₄​: .
ந கர்மப₂லஸம்யோக₃ம் ஸ்வபா₄வஸ்து ப்ரவர்ததே (5-14)

10 (14) கடவுள் உன்னைச் செய்பவனாகவோ, அல்லது செய்கையின் பலனை விரும்புபவனாகவோ படைக்கவில்லை. செயல்படுவது உனக்குள் இயற்கையே.

செய்பவ னாகவோ பலன் எய்பவ னாகவோ உனை
உய்பவ னாக்க வில்லை உணருக உலகி லெல்லாம்
தெய்வமே யாதும் யாவும் திசைபல நடப்ப தாவும்
மெய்வழி யாகும் நீயோ மேலுக்குச் சாட்சி ஐயா
நாத₃த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு₄​: .
அஜ்ஞானேனாவ்ருதம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ​: (5-15)
ஜ்ஞானேன து தத₃ஜ்ஞானம் யேஷாம் நாஶிதமாத்மன​: .
தேஷாமாதி₃த்யவஜ்ஜ்ஞானம் ப்ரகாஶயதி தத்பரம் (5-16)

11 (15-16) (இதை அறியாத) அறிவின்மையே மயக்கத்தைத் தருகிறது. உண்மையைப் புரிந்து கொள்வதால், அறிவு சூரியனைப் போலப் பரம்பொருளைக் காட்டுகிறது.

அறிவின்மை உன் னுடைய ஆன்மாவைச் சூழ்ந் திருளைக்
கரியெனவே =டி யகக் கண்மலரை வாட் டியது
சரியெனவே தாவி ளக்கச் சத்தியத்தைக் கற் றுணரத்
துரிதமெனச் சூரி யனால் துார்த்த பனி யாகாதோ
தத்₃பு₃த்₃த₄யஸ்ததா₃த்மானஸ்தன்னிஷ்டா₂ஸ்தத்பராயணா​: .
க₃ச்ச₂ந்த்யபுனராவ்ருத்திம் ஜ்ஞானனிர்தூ₄தகல்மஷா​: (5-17)

12 (17) புத்தியை அப்பரம்பொருளில் நிலைநாட்டுவதால், பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.

புத்தியை நிலைப்பட வைத்து புலனறி வாண்மை வைத்துப்
பத்தியை பரம்பொரு ளருளைப் பாவித்த வைராக் கியத்தால்
சித்தியும் நலனும் சிந்தை சீலமும் அருளும் சேரும்
நித்திய ஆனந் தத்தை நிலையாய்ப் பெறுவர் உண்மை
வித்₃யாவினயஸம்பன்னே ப்₃ராஹ்மணே க₃வி ஹஸ்தினி .
ஶுனி சைவ ஶ்வபாகே ச பண்டி₃தா​: ஸமத₃ர்ஶின​: (5-18)
இஹைவ தைர்ஜித​: ஸர்கோ₃ யேஷாம் ஸாம்யே ஸ்தி₂தம் மன​: .
நிர்தோ₃ஷம் ஹி ஸமம் ப்₃ரஹ்ம தஸ்மாத்₃ ப்₃ரஹ்மணி தே ஸ்தி₂தா​: (5-19)

13 (18-19) அத்தகைய மனிதர் உலகில் அனைத்தையும் சமநோக்குடன் பார்க்கும் பக்குவத்தைப் பெறுவார். (அவருக்குப் பிறவிகளில் பேதமோ, இன்பதுன்ப விசாரமோ ஏதும் இல்லை. )

பார்ப்பனும் பசுவும் வேழம் பணிவுடை நாயும் சுடலை
சேர்ப்பனும் ஒன்றே என்ற சிந்தனை கொள்ள வேன்டும்
வார்ப்பினும் தங்கம் ஒன்றே வடிவத்தால் ஆவ தென்ன
நூற்பினும் ஆடை கோடி நுழைந்திட்ட நூலும் ஒன்றே
ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்₃விஜேத்ப்ராப்ய சாப்ரியம் .
ஸ்தி₂ரபு₃த்₃தி₄ரஸம்மூடோ₄ ப்₃ரஹ்மவித்₃ ப்₃ரஹ்மணி ஸ்தி₂த​: (5-20)
பா₃ஹ்யஸ்பர்ஶேஷ்வஸக்தாத்மா விந்த₃த்யாத்மனி யத்ஸுக₂ம் .
ஸ ப்₃ரஹ்மயோக₃யுக்தாத்மா ஸுக₂மக்ஷயமஶ்னுதே (5-21)

14 (20-21) அவர் சமநோக்கப் பண்பினால், சத்தியவானான நடத்தையையும், பற்றறு நிலையில் தவம் இயற்றும் ஒழுக்கத்தையும் கொண்டு முடிவில் ஒப்புயர்வற்ற பிரம்மஞானம் அடைவார்.

சமநிலை நோக்கம் வந்தால் சத்தியம் அறிந்து கொள்ளும்
தவநிலை போக்கு காணும் தயக்கமும் பயமும் நீங்கும்
பவநிலை யோகத் தாலே பலனையும் புகழும் வேண்டாச்
சிவநிலை நிலைப்ப தாகும் சீரிய பிரம்ம ஞானம்
யே ஹி ஸம்ஸ்பர்ஶஜா போ₄கா₃ து₃​:க₂யோனய ஏவ தே .
ஆத்₃யந்தவந்த​: கௌந்தேய ந தேஷு ரமதே பு₃த₄​: (5-22)

15 (22) புறச்சேர்க்கையால் வரும் இன்ப துன்பங்கள் முதலும் முடிவும் உடையன. இத்தகைய சலனங்கள் நடக்கும்போதே நடுநிலைமை கொண்ட ஞானி, அலைகடலில் போகும் படகின் தடம் தானே மறைவது போல, தன்னுள் சலனம் அழித்து நிலை பெறுவார்.

தொடக்கமும் இறுதியும் கொண்ட தொடரினா லின்ப துன்பம்
நடக்கையில் சாட்சி யாக நடுநிலை கொள்வர் மேலோர்
கடக்கையில் கடலில் தோணி காற்றிலே ஆடிப் போகும்
தடக்கையை மறைத்து நிற்கும் தத்துவம் அறிந்து கொள்க
ஶக்னோதீஹைவ ய​: ஸோடு₄ம் ப்ராக்ஶரீரவிமோக்ஷணாத் .
காமக்ரோதோ₄த்₃ப₄வம் வேக₃ம் ஸ யுக்த​: ஸ ஸுகீ₂ நர​: (5-23)

16 (23) இவ்வுலகில் வாழும் போதே, ஆசையினால் எழும் சினத்தைக் கட்டுப்படுத்த வல்லவனே யோகி.

உடலுயிர் இருக்கும் போதே உலகினில் வசிக்கும் போதே
விடமெனச் சினமும் ஆசை விடுவதே யோகம் ஆகும்
நடப்பிலே அமைதி காட்டி நயனத்தில் கருணை காட்டிப்
படைப்பிலே மகிழ்ச்சி காணும் பக்குவம் யோகம் ஆகும்
யோ(அ)ந்த​:ஸுகோ₂(அ)ந்தராராமஸ்ததா₂ந்தர்ஜ்யோதிரேவ ய​: .
ஸ யோகீ₃ ப்₃ரஹ்மனிர்வாணம் ப்₃ரஹ்மபூ₄தோ(அ)தி₄க₃ச்ச₂தி (5-24)
லப₄ந்தே ப்₃ரஹ்மனிர்வாணம்ருஷய​: க்ஷீணகல்மஷா​: .
சி₂ன்னத்₃வைதா₄ யதாத்மான​: ஸர்வபூ₄தஹிதே ரதா​: (5-25)

17 (24-25) தனக்குள்ளே மகிழ்ச்சி&&டயவனாய், உள்ளொளி பெற்றவனான யோகி முற்றிலும் விடுதலை பெற்று, பிரம்மமாகவே மாறி விடுகிறான்.

உள்ளத்தில் உவகை என்றும் உதட்டிலே முறுவல் எண்ணம்
கள்ளத்தை ஒழித்த பேச்சு கருணையே உயிரின் மூச்சு
வெல்லத் துணியும் நோக்கு விவேகத் துயர்ந்த போக்கு
மெல்லத் தெளியும் ஞாலம் மேவும் பிரம்ம ஞானம் 

காமக்ரோத₄வியுக்தானாம் யதீனாம் யதசேதஸாம் .
அபி₄தோ ப்₃ரஹ்மனிர்வாணம் வர்ததே விதி₃தாத்மனாம் (5-26)

18 (26) ஆசையும், சினமும் தவிர்த்தவராய் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம அறிவு பெற்றவர்களுக்கு, விடுதலை எங்கும் உள்ளது.

ஆசை சினமும் விட்டு ஆடிடும் மனதைச் சுட்டு
நேசமே நலமே என்று நியமமே கடனே என்று
சிடும் ஞானச் செம்மல் விரைவிலே பிரம்மா னந்தப்
பூசனை பெறுவார் என்னைப் புரிந்தவர் அவரே ஆவார்
ஸ்பர்ஶான்க்ருத்வா ப₃ஹிர்பா₃ஹ்யாம்ஶ்சக்ஷுஶ்சைவாந்தரே ப்₄ருவோ​: .
ப்ராணாபானௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்₄யந்தரசாரிணௌ (5-27)
யதேந்த்₃ரியமனோபு₃த்₃தி₄ர்முனிர்மோக்ஷபராயண​: .
விக₃தேச்சா₂ப₄யக்ரோதோ₄ ய​: ஸதா₃ முக்த ஏவ ஸ​: (5-28)

19 (27-28) புறத் தொடர்புகளை விட்டுப் புருவத்து மத்தியில் விழிநிறுத்தி (அதாவது, அகமுகப் பார்வை பெற்று), புலனடக்கம் செய்து, பயமின்றி, விடுதலையே குறியாக உள்ள யோகிக்கு, நான் விடுதலை அளிப்பேன்.

புருவத் திடையே பார்வை புதையச் சுவாச நிலையை
நிறுவத் தெரிந்து புலனை நிலைக்கச் செய்து எண்ணம்
அருவத் தழித்து ஆசை அச்சம் ஒழித்தோ ருள்ளம்
உருவத் திருப்பேன் நானே உணரத் தெரிவேன் நானே
போ₄க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் .
ஸுஹ்ருத₃ம் ஸர்வபூ₄தானாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம்ருச்ச₂தி (5-29)

20 (29) என்னைத் தியாகம், தவம் இவற்றின் கர்த்தாவாக ஏற்று உணருபவன் அமைதி பெறுகிறான். அதற்கான பரஞானத்தை நான் உனக்கு உரைத்தேன்.

தவப் பயனாய் என்னைத் தாரகனாய் தியாக பலன்
பவப் பொருளாய் ஏற்றிப் பணிந் திடுவார் நெஞ்சம்
உவப் பெய்தும் ஞானம் உற்ற துணை யாகும்
சிவப் பெருமை அடையும் சீலம் உரைத் தேனே

 

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
ஸம்ன்யாஸயோகோ₃ நாம பஞ்சமோ(அ)த்₄யாய​: (5)

இவ்வாறு துறவு நெறி எனும் ஐந்தாம் பாகம் நிறைவுபெறுகிறது

 

 4 – ஞானகர்ம ஸந்யாஸ யோகம்

  6 – ஆத்ம ஸம்யம யோகம்

 

Related Posts

Share this Post