10 – எப்பிறவி ஆனாலும் எந்தை சிவன் போற்றி!

नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् |
सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी
विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ||१० ||
நரத்வம் தே3வத்வம் நக3 வன ம்ரு2க3த்வம் மஶகதா
பஸு1த்வம் கீடத்வம் ப4வது விஹக3த்வாதி3 ஜனனம் |
ஸதா3 த்வத்பாதா3ப்3ஜ ஸ்மரண பரமானந்த3லஹரீ
விஹாராஸக்தம் சேத்3 ஹ்ரு2த3ய மிஹ கிம் தேன வபுஷா ||10 ||
மனிதரெனச் சுரனுமுனி மலைவனமு மலைமிருக
மற்றபிறப் புற்றதது – பலவாக
மாடுமெனக் கொசுவுமுதற் பூடுமுளைப் புள்ளுமுல
கூடுமுரு வுற்றதென – எதுவாயின்
புனிதமென வுனதுபத மினிதுமன சுகவெள்ளம்
புக்கநிலை நிற்கினதன் – பயனாலே
பூதவுடல் பூவுலகில் ஏதுவரின் என்னகுறை
என்றும் சிவாநந்த – வெள்ளம்
(10)

மனிதராயோ, தேவர்களாயோ, மலை, காடுகளில் விலங்குகளாயோ, கொசு முதலிய சிற்றுயிர்களாயோ, புழு, பறவைகள் எனவோ – எப்படிப் பிறந்தாலும் என்ன? எப்போதும், புனிதமான நினது திருவடி மலர்களின் தியானத்தில் விளைகின்ற சிவ சுகப் பெருவெள்ளத்தில், களித்து, எனது மதியும் மனமும் நிலைத்திருக்குமேயானால், இவ்வுலகில், இவ்வுடலை எடுத்திருப்பதால், என்ன குறைவு ஏற்பட்டு விடும்! (ஒரு குறையுமில்லை.)

குறிப்பு:
உருவ வழிபாடு, உலக வழிபாடு, ஆன்மத் தியானம் எனப் பல வழிகளிலும் முயன்று துதித்தாலும் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? இறந்த பிறகு, எப்பிறவி வரப்போகிறது? நான் சொர்க்கம் செல்வேனா? அல்லது பூமியில் பிறப்பேனா? மிருகமாய்ப் போனால் என்ன செய்வது? இப்படி எல்லாம் கவலைப்பட்டும் என்ன பயன்? எப்படிப் பிறந்தால்தான் என்ன? எப்போதும் இறைவனின் நினைவே மனதில் இருக்கும் என்றால், எந்தவுடல் எடுத்தால்தான் என்ன? இவ்வாறு துதிப்பதன் மூலம், பயன் கருதாத பக்தி ஒன்றே தேவை என்பதை பகவான் வலியுறுத்துகின்றார். (10)

9 – மனமலரை ஏற்றென்னை மாற்றும் அருள் போற்றி!

11 – எந்நிலையில் வாழ்ந்தாலும் ஏகன் அடி போற்றி!

Share this Post

Related Posts