97 – சித்தம் தெளித்தருளும் சீலன் அடி போற்றி!

प्रचरत्यभितः प्रगल्भवृत्त्या
मदवानेष मनः करी गरीयान् |
परिगृह्य नयेन भक्तिरज्ज्वा
परम स्थाणुपदं दृढं नयामुम् ||९७ ||
ப்ரசரத்யபி₄த: ப்ரக₃ல்ப₄வ்ருத்த்யா
மத₃வானேஷ மன: கரீ க₃ரீயான் |
பரிக்₃ருஹ்ய நயேன ப₄க்திரஜ்ஜ்வா
பரம ஸ்தா₂ணுபத₃ம் த்₃ருட₄ம் நயாமும் || 97 ||
சுத்தும் மனமிது பித்தம் பெருகிட
அத்தும் அலைந்திடும் – மதயானை
தத்தம் நிலையினி நத்தம் கலையுற
பத்திப் பிணைபட – அதனாலே
கட்டும் இதையினி நித்தப் படவென
கெட்டிப் படவருள் – தருவாயே
சத்துப் படவுருவில் சித்தச் சுகமருவ
பத்துப் பறவருளும் – பரமேசா பெருகிட
(97)

அலைந்து திரியும் பெரிய மதம் பிடித்த யானை போன்ற என் மனதை, பக்தி எனும் கயிற்றால் திறம்படக் கட்டி வயப்படுத்தி, நிலையான பொருளில் நிறுத்தி வைக்க அழைத்துச் செல்லுங்கள், பரமேசா!

96 – மன யானை தனையாளும் மாதங்கன் அடி போற்றி!

98 – கவிதைஇளங் கன்னியெனக் கலந்தோன் அடி போற்றி!

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*