ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அத₂ அஷ்டமோ(அ)த்₄யாய​: . அக்ஷரப்₃ரஹ்மயோக₃​:

பாகம் 8 – அழியாப் பிரம்ம நெறி

அர்ஜுன உவாச .

கிம் தத்₃ ப்₃ரஹ்ம கிமத்₄யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம .
அதி₄பூ₄தம் ச கிம் ப்ரோக்தமதி₄தை₃வம் கிமுச்யதே (8-1)

விசயன் வினா

1 ( தனது சந்தேகம் இன்னும் தீராததால், ஆத்மஞானம் தேடும் சீடனாக, விசயன், இறைவனாகிய கண்ணனையே ஞானகுருவாக ஏற்று, உண்மை அறிவு நெறி அறியப் பணிவான். )

ஞானவிஞ் ஞான வாக்கு நயந்துரை தை கேட்டும்
தானபி மானங் கொண்டு தனஞ்சயன் ஐயப் பட்டு
கானமு ராரே கண்ணா கலியுகத் தருவே யுருவே
ஈனன்யா னுய்யத் தானே ஈசனாயா சானாய் வந்தாய்

2 (1) (நீ முன்னே சொன்ன தத்துவங்களில் ) பிரம்மம் என்பது யாது? அத்யாத்மம், அதிபூதம், அதிதைவம் என்பன யாவை?

பிரம்மம் என்பது யாதுநீ பேசியஅதி பூதம் யார்
கிரமம் என்னதி தைவதம் கிட்டிட அதியக் ஞமும்
சிரமம் அறிவுறச் சிந்தையில் சிரத்தை உள்ளது கருணையால்
தருமம் செய்திடு தயாபர தத்துவ முத்தினை வேண்டியே
அதி₄யஜ்ஞ​: கத₂ம் கோ(அ)த்ர தே₃ஹே(அ)ஸ்மின்மது₄ஸூத₃ன .
ப்ரயாணகாலே ச கத₂ம் ஜ்ஞேயோ(அ)ஸி நியதாத்மபி₄​: (8-2)

3 (2) தன்னைக் கட்டுப்படுத்தியவன், இறக்கும் தருவாயிலேனும் உன்னை அறிவது எங்ஙனம்? தயையுடன் எனக்கு விளக்குக.

இறந்திடும் போதிலே மாதவா இருத்தினா லுன்னுரு உள்ளமே
நிரந்திடும் படியினால் உயிரெலாம் நித்திலம் அடையுந் தத்துவம்
கரந்திடும் வடிவினால் தையின் கருத்தினை விளக்கிடு சூதனா
பரந்திடம் பரவெளி ஞானமே பறைந்திடு பரமகோ பாலனே
ஶ்ரீப₄க₃வானுவாச .

அக்ஷரம் ப்₃ரஹ்ம பரமம் ஸ்வபா₄வோ(அ)த்₄யாத்மமுச்யதே .
பூ₄தபா₄வோத்₃ப₄வகரோ விஸர்க₃​: கர்மஸஞ்ஜ்ஞித​: (8-3)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

4 ( தன்னையே கதியென்று அண்டிய அர்ச்சுனனுக்கு அட்சர பிரம்ம யோகத்தைச் சொல்ல விழையும் பகவானின் கருணையே கருணை.)

அர்ச்சுனன் சொல்லக் கேட்டது அட்சரப் பிரம்ம யோகம்
சொற்சுவை தெரியச் சொல்லி சோதனை விலகச் செய்யும்
நற்பொருள் நாதப் பிரமம் நலந்தரு ஆன்ம வித்தை
பொற்புடை நெறியைக் காட்டும் பொறைதனை என்ன சொல்ல

5 (3) பிரம்மம் என்பது நாசமற்றது. பரம்பொருளானது. அதனை முற்றும் உணரக் கற்பதே ஆத்ம வித்தை.

பிரமம் எதற்கும் ஆதாரம் பிறவா இறவாப் பேராயம்
பிரமம் பிரபஞ்ச மெல்லாமே பிணைத்தே யிருக்கும் பேரின்பம்
பிரமம் அண்டம் பரவெளியே பிறழா இயற்கைக் குபகாரம்
பிரமம் மாயா தீதத்துள் பிறந்தும் இளைக்கும் ஜீவாத்மம்
அதி₄பூ₄தம் க்ஷரோ பா₄வ​: புருஷஶ்சாதி₄தை₃வதம் .
அதி₄யஜ்ஞோ(அ)ஹமேவாத்ர தே₃ஹே தே₃ஹப்₄ருதாம் வர (8-4)

6 (4) (முன்னே கூறப்பட்ட) எட்டுவகையான ழ் இயற்கையை அறிவது பூதஞானம். அதை (மேலியற்கையின் உதவியால்) அறியத் தெளிவதே அதிதைவம். அறிவாய் விளங்கும் உயிர்த்துவமே அதியக்ஞம். இதையெல்லாம் கற்கும் அறிவே ஆத்ம வித்தை.

இயற்கையில் வைத்த எட்டுநெறி இயலப் பதிவது அதிபூதம்
உயிர்களின் உண்மை யறிவதென உணரத் துடிப்பது அதிதைவம்
உயிர்களில் உயிராய்த் தத்துவமாய் உறையுந் திறனே அதியக்ஞம்
பயிற்சியில் இவற்றை அறிகின்ற பரிபக் குவமே ஆத்மவித்தை
அந்தகாலே ச மாமேவ ஸ்மரன்முக்த்வா கலேவரம் .
ய​: ப்ரயாதி ஸ மத்₃பா₄வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஶய​: (8-5)
யம் யம் வாபி ஸ்மரன்பா₄வம் த்யஜத்யந்தே கலேவரம் .
தம் தமேவைதி கௌந்தேய ஸதா₃ தத்₃பா₄வபா₄வித​: (8-6)

7 (5-6) (முக்கிய ரகஸியம் என்னவென்றால், ) உயிர்போகும் போது, ஆழ்மனதில் எதனை ஒருவன் நினைக்கிறானோ, அதாகவே அவன் மாறிவிடுகிறான்.

தீவிர மாக ஒன்றைத் தினசரி தியானம் செய்தால்
மேவிய தாக மாறி மெய்ப்பிக்கக் கூடும் அதனால்
சாவினி தான போது சடலத்தை மீளும் போது
தாவிய நினைவுப் பிம்பம் தந்திடும் பிறவிப் பேறு
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்₄ய ச .
மய்யர்பிதமனோபு₃த்₃தி₄ர்மாமேவைஷ்யஸ்யஸம்ஶய​: (8-7)

8 (7) எனவே நீ என்னையே சதா நினைத்துப் பழகு. அதனால், இறந்தாலும், என்னையே அடைந்து உயர்ச்சி அடைவாய்.

ஆதலால் விசயா என்னை அன்புடன் சரண் அடைந்து
காதலால் இதய மேற்றிக் கருமத்தைச் செய்து மாயம்
மோதலால் புலன் களோடே முனைப்படும் போர்ப் பயிற்சி
சாதலாய் ஆனால் என்ன சந்திப்பாய் பேறு என்றான்
அப்₄யாஸயோக₃யுக்தேன சேதஸா நான்யகா₃மினா .
பரமம் புருஷம் தி₃வ்யம் யாதி பார்தா₂னுசிந்தயன் (8-8)

9 (8) (அந்நிலை அடையக் குறியான நோக்கமும், சரியான அறிவும், உறுதியும் தேவை). அதனால் மனதை வேறு பொருளில் செலுத்தாமல், பயிற்சியினால் பரமாத்மனைச் சிந்திப்பவன், பரம்பொருளையே அடைவான்.

ஒன்றையே நினைத் திருந்து ஓயாது உழைத் திருந்து
சென்றது செல்லா திந்தச் செகத்திலே பிழைத் திருந்து
வென்றது யாதே என்ற வேதத்து மொழி அறிந்து
நன்றது செய்வ தாலே நடப்பது உறுதி ஆகும்
கவிம் புராணமனுஶாஸிதார-மணோரணீயம்ஸமனுஸ்மரேத்₃ய​: .
ஸர்வஸ்ய தா₄தாரமசிந்த்யரூப- மாதி₃த்யவர்ணம் தமஸ​: பரஸ்தாத் (8-9)

10 (9) ஸர்வக்ஞன் பழையோன். அணுவினும் நுண்ணியன். காலதேசத்தை ஆளும் இப்பரம்பொருளையே நினைப்பதால், அறியாமையாகிய இருள் விலக்கும் ஞானசூரியன் உனக்குள்ளே விளையும்.

அணுவினும் அரிய தாகும் அண்டமே யடக்கி யாளும்
கனவினும் அறிய தான காலதேச மனைத்து மாளும்
தினகரன் போலே ஞானத் திசைதனைக் காட்டும் சீலன்
குணவரன் தேவன் உள்ளக் கோயிலில் ஏற்ற வேண்டும்
ப்ரயாணகாலே மனஸா(அ)சலேன
ப₄க்த்யா யுக்தோ யோக₃ப₃லேன சைவ .
ப்₄ருவோர்மத்₄யே ப்ராணமாவேஶ்ய ஸம்யக்
ஸ தம் பரம் புருஷமுபைதி தி₃வ்யம் (8-10)

11 (10) இறப்பு என்பது உயிர் உடலை விடுவது அல்ல. மனதை =டிய மமதையை விடுப்பதே ஆகும். (அதனால் உயிர் உடலில் இருக்கும் போதே, இறவாப் பிறவி அடையலாம். )

ஓடிடும் உயிரின் முச்சு உடலினை விடுவது ஒன்றே
மூடிடும் மரணம் என்று முனைவது மடமை உள்ளம்
சூடிடும் ஆணவ நோயைச் சுடலையை அவித்து சித்தம்
கூடிடும் ஞானத் தாலே குறிப்பினை உணர வேண்டும்

12 (10) இறப்பு என்பதன் உண்மைப் பொருள் ஆசையைத் துறத்தல் ஆகும். அகமுகப் பார்வையால் இத்தகைய சமநிலையை அடைய வேண்டும்.

இறத்தல் என்று சொல்லும் இதற்கோர் பொருளி லாசை
துறத்தல் என்ப தாகும் துாய்மை மனதில் தியானம்
இருத்தல் பிராணன் விழிகள் இமைக்கும் இடையில் காணும்
கருத்தில் உயிர்த்து வத்தைக் கவரும் வழியைப் பேணும்
யத₃க்ஷரம் வேத₃விதோ₃ வத₃ந்தி
விஶந்தி யத்₃யதயோ வீதராகா₃​: .
யதி₃ச்ச₂ந்தோ ப்₃ரஹ்மசர்யம் சரந்தி
தத்தே பத₃ம் ஸங்க்₃ரஹேண ப்ரவக்ஷ்யே (8-11)

13 (11) அறிஞர்களாலும், நல்லோர்களாலும் நல்லது என்று கூறப்பட்ட குறிக்கோள் ஏதென்று சொல்கிறேன்.

மறைமுனி மேலோர் எல்லாம் மறையா தெனவே சொன்ன
திறைமன மடக்கு வோர்கள் தினங்குறி கொள்வ தன்ன
உறைதிரு ஞானந் தேடும் உத்தமர் நாடிச் செல்லும்
நிறைதனைத் தெளிய வைக்கும் நியமத்தைச் சொல்லு கின்றேன்
ஸர்வத்₃வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி₃ நிருத்₄ய ச .
மூர்த்₄ன்யாதா₄யாத்மன​: ப்ராணமாஸ்தி₂தோ யோக₃தா₄ரணாம் (8-12)

14 (12) புலனடக்கம் கொண்டு, =ச்சைச் சமப்படுத்தி, மனதைக் கட்டி, புத்தியில் ஒருமை கொண்டு ஆன்ம தரிசனம் பெறவேண்டும். (ஒருமுகப்பட்ட குறிக்கோளும், மாறாத நம்பிக்கையும் யோகிக்கு அவசியம்.)

எல்லாப் புலன்கள் எழுந்த எழுச்சியை அடக்க நாடி
நில்லாப் பிராண வாயு நிலைப்பட நிறுத்த ஓடிப்
பொல்லாப் பேகு மெண்ணப் பூசலைப் போக் கலைந்து
செல்லாச் சிந்தை யாலே சீவனைப் பார்க்க வேண்டும்

ஓமித்யேகாக்ஷரம் ப்₃ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன் .
ய​: ப்ரயாதி த்யஜந்தே₃ஹம் ஸ யாதி பரமாம் க₃திம் (8-13)

15 (13) ஓம் என்ற பிரணவத்தை ஓதி, மேலே சொன்னவாறு, யோகத்தில் இருப்பவன், என்னையே அடைகிறான்.( உலகெலாம் அணுவாய் நிறைவது. அணுவோ ஒலியால் விளைவது. ஒலியின் வித்தோ ஓம் என்கிற நாத்தில் பிறந்தது.)

ஓம்எனும் பிரணவ வேதம் ஓதிட உடல் மறந்து
ஓம்எனும் தத்து வத்தை உணர்ந்திடப் புலன் அடங்கி
ஓம்எனும் இசையில் மூச்சின் ஓசையைச் சீர் அமைத்து
ஓம்எனும் ஓங்கா ரத்தில் ஒடுங்கவே மனங் களிந்து
அனன்யசேதா​: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஶ​: .
தஸ்யாஹம் ஸுலப₄​: பார்த₂ நித்யயுக்தஸ்ய யோகி₃ன​: (8-14)

16 (14) அப்பேறு பெற்றோன், தனது தளரா முயற்சியினால், சுயதரிசனம் பெற்று, (அதாவது, தன்னிலே தன்னை உணர்ந்து, அதன் விளைவால் மென்னுடலில் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் மட்டுமே ஆழ்ந்து) பிறவியாகிய பாரத்தைத் தவிர்க்கிறான்.

அகமுகப் பார்வை யாலே ஆய்ந்துநல் லார்வங் கொண்டும்
தகவுடைத் தன்மை யாலே தனித்திருப் பதாலே மீண்டும்
சகமுடைப் பிறப்ப தில்லை சம்சாரத் திருப்ப தில்லை
குகனெனைச் சேர்வ தென்னுங் குறிப்பினை அறியச் சொன்னான்
மாமுபேத்ய புனர்ஜன்ம து₃​:கா₂லயமஶாஶ்வதம் .
நாப்னுவந்தி மஹாத்மான​: ஸம்ஸித்₃தி₄ம் பரமாம் க₃தா​: (8-15)
ஆப்₃ரஹ்மபு₄வனால்லோகா​: புனராவர்தினோ(அ)ர்ஜுன .
மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்₃யதே (8-16)

17 (15-16) அவனே யோகி. என்னை அடைபவன். பிறவிப் பெருங்கடல் கடந்தவன்.

இருந்திடும் யோகி என்னை இணைபவர் இன்பம் வீடு
பொருந்திடும் பேறு காணும் பொறையினர் மறைநான் கதனால்
விருத்திகன் பிரம லோகம் வெல்லுவர் வெகுளா மையினால்
திறத்தினைப் பெறுவர் பிறவி திரும்பவும் எய்த மாட்டார்
ஸஹஸ்ரயுக₃பர்யந்தமஹர்யத்₃ ப்₃ரஹ்மணோ விது₃​: .
ராத்ரிம் யுக₃ஸஹஸ்ராந்தாம் தே(அ)ஹோராத்ரவிதோ₃ ஜனா​: (8-17)

18 (17) ஆயிரமாயிரம் யுகங்கள் வாழந்தாலும் பிரமதேவனும் மீண்டும் பிறப்பெய்துகிறான். மனிதப்பிறவி ஒன்றே, மீண்டும் பிறவாப் பேற்றை அடையும் தகுதி உடையது.

ஆயிரம் யுகங்கள் இங்கே ஆகிடும் பிரமற் கொருநாள்
ஆயினும் அவரும் ஓர்நாள் அவனியில் பிறப்ப ரென்றே
நீயுணர் மனித ராக நிகழ்த்திடும் பிறவி ஒன்றே
வாயிலா யமையு மென்னை வந்தடைந் திடும்நற் பேறு
அவ்யக்தாத்₃ வ்யக்தய​: ஸர்வா​: ப்ரப₄வந்த்யஹராக₃மே .
ராத்ர்யாக₃மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸஞ்ஜ்ஞகே (8-18)
பூ₄தக்₃ராம​: ஸ ஏவாயம் பூ₄த்வா பூ₄த்வா ப்ரலீயதே .
ராத்ர்யாக₃மே(அ)வஶ​: பார்த₂ ப்ரப₄வத்யஹராக₃மே (8-19)

19 (18-19) இரவு பகலில் சுருங்கி மறைவது போல, உலகில் யாவும் பிறந்தும், இறந்தும் மாறுபாடு கொள்கின்றன. அழிவது பிறப்பதும், பிறந்தது அழிவதும் இயற்கை.

இரவிலே தோன்றும் காலை இயக்கிடும் உயிர்ப்ப தெல்லாம்
நிரவிடும் மீண்டும் மாலை நிமித்ததும் இரவாய்ச் சாயும்
உறங்கிடும் போதில் உள்ளம் உணர்ந்திடா துலகம் அழியும்
பரவிடும் புவனம் எல்லாம் படைத்ததும் அழிந்து போகும்
பரஸ்தஸ்மாத்து பா₄வோ(அ)ந்யோ(அ)வ்யக்தோ(அ)வ்யக்தாத்ஸனாதன​: .
ய​: ஸ ஸர்வேஷு பூ₄தேஷு நஶ்யத்ஸு ந வினஶ்யதி (8-20)
அவ்யக்தோ(அ)க்ஷர இத்யுக்தஸ்தமாஹு​: பரமாம் க₃திம் .
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்₃தா₄ம பரமம் மம (8-21)

20 (20-21) ஆனால் ஆக்கியும், அழித்தும் அருளும் மறைபொருளைத் தன்னுள்ளே சாட்சியாக விளங்கும் ஆன்மாவெனத் தெரிந்து கொண்டால், பிறகு பிறவித் துன்பம் ஏதும் இல்லை.

ஆக்கியும் அழித்தும் ஆளும் அவனியைப் பொருளைப் பிறவி
நீக்கியும் நிலைத்தும் வாழும் நித்திலம் நிச்சயம் கருதிப்
பாக்கியம் பரம பதமென் பாதமே சேரக் கருவி
வாக்கியம் தருவ தாலுன் வழிமுறை அறிந்து கொள்க
புருஷ​: ஸ பர​: பார்த₂ ப₄க்த்யா லப்₄யஸ்த்வனன்யயா .
யஸ்யாந்த​:ஸ்தா₂னி பூ₄தானி யேன ஸர்வமித₃ம் ததம் (8-22)
யத்ர காலே த்வனாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி₃ன​: .
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப₄ரதர்ஷப₄ (8-23)

21 (23) இந்த முயற்சியில் சிறிதும் தவறு இல்லாமல், யோகியானவன் ஆத்ம வித்தையைக் கற்று வருவதால், இறுதியில் எனது தரிசனம் கிடைத்து, என்னுளே கலந்து விடும் கைவல்யப் பதவி பெறுவான்.

இடைவிடா துனது ஆன்ம இயல்பினை ஆய்ந்து வந்தால்
தடையிலா துயர ஆன்ம தரிசனங் காணப் பெற்று
விடையிலாக் கேள்விக் கெல்லாம் விடையறிந் துனது ஆன்மா
கடையிலே என்னைச் சேர்ந்து கசடறக் கலப்ப தாகும்
அக்₃னிர்ஜ்யோதிரஹ​: ஶுக்ல​: ஷண்மாஸா உத்தராயணம் .
தத்ர ப்ரயாதா க₃ச்ச₂ந்தி ப்₃ரஹ்ம ப்₃ரஹ்மவிதோ₃ ஜனா​: (8-24)

22 (24) பெரியோர்கள், பகலில், நெருப்பில், வளர்பிறையில், தினகரனின் வடதிசைப் பயணத்தில் இறப்பவரின் சீவன் தேவயானம் என்ற வழியில் சென்று பிரம்மலோகம் அடைவதாகச் சொல்வார்கள்.

தீயொளியில் பகலில் வட தினகரனில் முந் நிலவில்
நோயழிய உடலை விட நோக்கும் நல் லுயிரே
பேயழியப் பிறவி விடப் பெருமையுட னென் னிடமே
தேறவர வரு வழியே தேவயானம் என அறிக
தூ₄மோ ராத்ரிஸ்ததா₂ க்ருஷ்ண​: ஷண்மாஸா த₃க்ஷிணாயனம் .
தத்ர சாந்த்₃ரமஸம் ஜ்யோதிர்யோகீ₃ ப்ராப்ய நிவர்ததே (8-25)

23 (25) அதற்கு மாறாக, இரவில், புகையில், தேய்பிறையில், தினகரனின் தென்திசைப் பயணத்தில் இறப்பவரின் சீவன் பிதிர்யானம் என்ற வழியில் சென்று சந்திரலோகம் சென்று மீண்டும் பிறவிதனை அடைவதாகச் சொல்வார்கள்.

புகைஇருளில் இரவில் தென் புறப்பரிதி பிந் நிலவில்
தகைவிடுத்த உயிர்த் துவமே தட்சிணத்து வழி யேகி
வகையறியா திருந்து பல வையகத்துப் பிறவி களாய்
மிகையுநெறி பிதிர் யான மென்னும் வழி என்றாகும்
ஶுக்லக்ருஷ்ணே க₃தீ ஹ்யேதே ஜக₃த​: ஶாஶ்வதே மதே .
ஏகயா யாத்யனாவ்ருத்திமன்யயாவர்ததே புன​: (8-26)

24 (26) இதன் பொருள் என்னவென்றால், ஒளிமயமான ஆத்ம ஞானத்தைத் தனது வாழ்நாளிலேயே அடைபவன் இறந்த பிறகு வரும் பிறவிகளைக் கடப்பதாகவும், இருளாகிய அறியாமையினால் வாழ்ந்து இறப்பவர்கள், மீண்டும் பிறவிப் பளுவைப் பெறுவதும் ஆகும்.

அறிவினால் ஞானப் பரிதி ஆய்ந்தறிவி வேகத் தீயால்
செறிவினால் உயரும் சீவன் சேர்ந்திடும் பிறவாப் பேறு
சரிவினால் தெளிவு இல்லாத் தன்மையால் இருளால் மருளால்
முறிவினால் முடியும் சீவன் முனைவதோ பிறவிபல் நுாறு
நைதே ஸ்ருதீ பார்த₂ ஜானன்யோகீ₃ முஹ்யதி கஶ்சன .
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக₃யுக்தோ ப₄வார்ஜுன (8-27)

25 (27) இவ்வாறு மரணத்தைப் பற்றிய இரண்டு வழிகளைச் சொன்னேன். இதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து என்னை அடைவாயாக.

இருவழி இதனைச் சொன்னேன் இலக்கினில் உள்ளம் வைத்து
ஒருபழி பாவம் ஏதும் ஒட்டுதல் இல்லா திருந்து
இருவிழிக் குறியை நெஞ்சம் இருத்திநல் யோகத் தாலென்
திருவடி தேடும் பாதை தேர்ந்தெடு விசயா என்றான்
வேதே₃ஷு யஜ்ஞேஷு தப​:ஸு சைவ
தா₃னேஷு யத்புண்யப₂லம் ப்ரதி₃ஷ்டம் .
அத்யேதி தத்ஸர்வமித₃ம் விதி₃த்வா
யோகீ₃ பரம் ஸ்தா₂னமுபைதி சாத்₃யம் (8-28)

26 (28) பரஅறிவான இந்த உண்மையை உணர்ந்து நடப்பவன் வேதங்களினால் சொன்ன பலன், தானம், தவம், வேள்வியினால் விளையும் பலன் ஆகியவற்றையும் கடந்து பரம்பொருளையே அடைகிறான்.

மறையதால் மலரும் பலனும் மறைந்திடும் பொருளை வேண்டி
நிறைவதால் தருமம் வேள்வி நித்திய பூஜா பலனும்
பறைவதால் தருமிரு பாதை பக்குவம் அறிந்தால் ஆகும்
இறைவனாய் குருவாய்க் கண்ணன் இவ்வுரை அருளிச் செய்தான்

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
அக்ஷரப்₃ரஹ்மயோகோ₃ நாமாஷ்டமோ(அ)த்₄யாய​: (8)

இவ்வாறு மெய்யறிவு நெறி எனும் எட்டாம் பாகம் நிறைவுபெறுகிறது

 7 – ஞானவிஜ்ஞானயோகோ₃

  9 – ராஜவித்₃யாராஜகு₃ஹ்யயோக₃​

Related Posts

Share this Post