ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் துதி
குருவே துணை
உருகிடு மனமே!
உணர்ந்தனு தினமே!
குருவடி துணையெனக்
கொள்! – அக்கணமே
நலமே கிடுமே
மனமே எனவே
உருகிடு – உருகிடு ( உருகிடு)
எதற்கினித் துயரம்!
எதிரினில் அபயம்!
நமக்கினி அருளும்
நமசிவ வடிவம்!
வரமே கிடுமே
மனமே யினிமேல்
உருகிடு – உருகிடு (உருகிடு)
திடுமென இறப்பு!
மறுபடி பிறப்பு!
திருவருட் குருவின்
திருவடி சிறப்பு!
நமபயம் எதற்கு!
நமக்கெது இழப்பு!
பரசிவம் அருளும்
பரிவொளி விளக்கு!
சுகம் ஏவிடுமே!
சுடரே கிடவே
உருகிடு …. உருகிடு (உருகிடு)
மீ. ரா
(24.3.2002)