|| ஸ்ரீ: ||

ஸ்ரீஜகத்குரு காமகோடி ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்

சம்ஸ்கிருத மூலநூல் ஆசிரியர்

ப்ரவசன சக்ரவர்த்தி, அபிநவசுகர் ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர்

வாஜபேயஜி (வாயபேய யாகம் செய்தவர்)

முனிமொழியில் முனியவனை முனைமனதில் நிறுத்த
இனியவழி காட்டியமா மறையாளா – கனிமொழியில்
பூசைக்கு நீவைத்த பொன்மலரை யான்தொடுக்கும்
ஆசைக்கு ஆசியினைத் தா


| ஸ்ரீ: ||
ஸ்ரீஜகத்குரு காமகோடீ
ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்

ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் – லோக
பூஜ்யம் கு₃ரும் தம் ஶரண்யம் ப்ரபத்₄யே |
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம்  ||  1 ||

ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம்
விரியுலகும் பணியுமருள் நிலையம் – புகழ்
விளங்குசற் குருவான வடிவம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (1)

ஸ்ரீஶசந்த்₃ரபூர்வம் ப₄ஜே(அ)ஹம் ஶேக₂
ரேந்த்₃ரம் ஶிவம் விஶ்வ விக்₂யாத கீர்த்திம் |
ஸ்ரீ ஶங்க₃ராசார்யரூபம் – பூர்ண
போ₃த₄ஸ்வரூபம்  கு₃ரூணாம் கு₃ருந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 2||
முழுமதியம் முகநளினம் வதனம் – தவ
முனிசந்த்ர சேகரநற் புதினம்
புகழ்மிகவும் அதிகம்சிவம் மனிதம் – புவி
பூத்தமுதற் சங்கரனின் வடிவம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (2)
ஸ்ரீ த₃க்ஷிணாமூர்த்திரூபம் – மௌன
ரூபணே ப₄க்தான் ஸதா₃ பாலயந்தம் |
ஸ்ரீ லாஜ பக்ஷம் ப₄வந்தம் – ஸதா₃
நந்த₃ நேத்ரேண ஸந்தோ₂ஷதம் த்வாம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 3||
தென்முகச் சிவனுமிவ னாகும் – அருட்
தெளிய மொழிமௌன வுருவாகும்
தன்பணிவர் மகிழும் அருளாகும் – விழித்
தண்ணிலவு தயைமிகவும் ஆகும்
மென்பொரியி லுடலும்மெலி தாகும் – உயர்
மெய்ப்பொரு ளுணரும்மிளிர் வாகும்
கண்மலரும் கருணையொளி யாகும் – நற்
கனியுமுரு இனியவடி வாகும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (3)
த₄ர்ம ப்ரசாரைகதீ₃க்ஷம் – வேத₃
மார்க₃ ப்ரவ்ருத்திப்ரதிஷ்டா₂ஸுத₃க்ஷம் |
த்வாமேவ க்ருஷ்ண ஸ்வரூபம் – த₄ர்ம
ரக்ஷா து₂ரீணம் ப்ரஸன்னேந்து₃வக்த்ரம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 4||
அறமுறையும் அறிவுரையும் பறையும் – மறை
அனுபவமும் வழியருளும் நிறையும்
நிறையவரும் முரளியென நிலவும் – குறை
நீக்குமடி யார்க்குதவும் நிதமும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (4)
ப₄க்தே₂ஷ்ட ஸர்வஸ்வத₃ம் தம் – சந்த்₃ர
மௌலீஶபூஜாம் ஸதா₃ காரயந்தம் |
லோகானுவ்ருத்யா சரந்தம் – க்ஷேம
வ்ருத்₄யை நராணாம் தப:சாரயந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 5||
அடியர்மன விருப்பமவை அருளும் – மதி
அணிவனடி தொழுதுவரப் பழகும்
நடையில்நல ஒழுக்கமென மிகவும் – ஜன
நலனில்மிக விழுப்பமுடன் திகழும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (5)
ஸ்ரீஸத்₃கு₃ரும் தம் ப்ரபத்₄யே – தே₃வி
பீடா₂தி₄னாத₂ம் கு₃ரூ ஸார்வ பௌ₄மம் |
ஸ்ரீகாம கோடீ ப்ரகாஶம் – ஶுத்₄த₃
ஸத்வைகமூர்த்திம் த₃யா வாரிராஶிம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 6||
அரியகுரு தவமணி ஸ்ரீஅன்னை – நல்
அருட்கோல மேற்றதிருப் பீடம்
பெரியதலை நிதியம் நற்செம்மல் –அருட்
பேரொளிர்க் குணசீலம் வள்ளல்
துரியநிலை உருவிற்குரு பதியும் – சுகத்
துணையருட் கட லான நிதியம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (6)
தேஜோ நிதி₄ம் ஞானரூபம் –  ஞான
மார்கோ₃பதே₃ஶாய ஸஞ்சாரயந்தம் |
காருண்யஸம்பூர்ண நேத்ரம் – தி₃வ்ய
காடாக்ஷலேஶேன ஸர்வானவந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 7||
அறிவொளியே தீபமென ஆகும் – நல்
அறவழியும் காட்டும் சகாயம்
புரிநடையும் கோடிநிலம் ஓடிப் – புவி
பூத்துயர நோற்றலுன தாகும்
கருவிழிகள் அருள்மழையைப் பொழியும் – எமைக்
காத்தருளப் புகலருளுந் திருவும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (7)
காலேய காலே(அ)வதீர்ணம் – க்ருஷ்ண
ராமாதி₃ரூபம் புரா பூர்ணரூபம் |
அத்₄யைவ மன்யே ப₄வந்தம் – த₄ர்ம
ரக்ஷார்த₂ மாத்தஸ்வரூபம் கு₃ரும் த்வாம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 8||
அவதார மாய்ராமர் கிருஷ்ணர் – நல்
அருளாகிக் காலகா லங்கள்
தவமாகித் தருமநெறி மீண்டும் – புவி
தழைத்திடச் செய்ய உருவாகும்
சிவமான குருவாகும் உலகம் – இனிச்
சீர்பட வந்தபர ஞானம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (8)
மந்த₃ஸ்மிதாபூர்ண வக்த்ரம் – ரோக₃
தாபாதி₂தப்தான் ஜனான் பாலயந்தம் |
பாதா₃வ்ஜ நம்ரான் புனானம் – ப₄க்த
லோகஸ்ய பாபாநி நிவாரபயந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 9||
ஓயாத முறுவல்முக மலரும் – பிணி
ஒழியாத பேர்கள்துயர் அகலும்
நோயாவுந் தீர்த்தமுதம் தரவும் – பணி
நோற்றடியர் உள்ளுருகத் தெளிந்தும்
காவாய் எனப்புகலை வேண்டும் – திருக்
காலடியில் பணிபவரைக் காக்கும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (9)
ஜன்மாந்தரீயை: ஸுபுண்யை: – த₃ர்ஶ
நீயம் மனோஜ₂ம் மனோ வாக் ஸுதூ₃ரம்  |
ஸ்ரீ கல்பவ்ருக்ஷம் ஜனேப்ய: – ஐஹிகா
மூஶ்மி காதீ₃னி நித்யம்  த₃தா₃னம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 10||
நல்வினையால் முன்தெரியும் நயனம் – மனம்
நட்டிணையக் கட்டிவிடும் நளினம்
சொல்லரிய முடியாது மனதும் – பயன்
சொரியுந்தரு கற்பகப் பேரமுதம்
அள்ளிவரம் நல்லுயர்வு பதவி – புகழ்
அமரர்திரு வரமுந்தரும் திலகம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (10)
த்வத்பாத₃ மேவாவலம்ப₃ம் – த்வத்
அன்யாக₃தி: நாஸ்தி கு₃ரோத்மேவ
ஸமுத்₄த₄ரத்வம் த₃யாலோ – ஜயேந்த்₃ர
பூஜ்யோ(அ)பி கு₃ரோ: கு₃ருஸ்தத₃ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம்  ||11||
தாமரையுன் தாளிரண்டும் தவிரேன் – எனைத்
தாங்குமருள் வேறெதுயா னறியேன்
பூவுலகாள் போதர்ஜெயேந் திரரும் – வழி
பூஜிக்கும் நேசன்குரு வடிவம்
ஆனமஹாப் பெரியவராம் குருவே – அருள்
ஆக்கியெனைக் காத்தருளல் முறையே
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (11)
பா₃லஸ்ய யாஜ்ஞாம் க்ஷ்ருணுத்வம் – ஶுத்₃த₄
காருண்யமூர்தே ஸுதா₄ஸார வர்ஷின் |
பக்திம் பராம் தே₃ஹி மஹ்யம் – ஶுத்₃த₄
மத்₃வைத பா₄வம் விராக₃ம் ஶமாதி₃ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 12||
தெய்வத்தின் குரலமுத மாகும் – உயிர்
தேறநிதம் அன்புவழி காட்டும்
உய்யுமுயர் ஒன்றுஎனக் கூட்டும் – மறை
உள்ளொளிரும் உண்மையினைச் சாற்றும்
அன்புமிகும் ஆழ்கருணைக் கடலே- எமை
ஆளவரும் அருள்மழையைத் தரவே
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (12)
த்வம்  ஸத்₃கு₃ரு: க்ருஷ்ணரூபீ – த₄ர்ம
ரக்ஷார்த₂ மாத்த ஸ்வரூபோ ஹி ஸத்யம் |
ஸ்ரீக்ருஷ்ண கா₃தோ₂த்ஸுகஸ்த்வம் – க்ருஷ்ண
ப₄க்தி பராம் மே ஸதா₃ தே₃ஹி ஶுத்₃தா₄ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 13||
ஸ்ரீகிருஷ்ண ராயுதியும் சீமான் – புவி
சீராக்க வேயுதித்த பூமான்
ஸ்ரீகிருஷ்ண கீதைவிழைந் தோதி – செவி
சீரூட்டி வழிகாட்டும் ஞானி
ஸ்ரீகிருஷ்ண ரேயுமது பாதை – நினது
சீரமுதக் குரலேநற் கீதை
ஸ்ரீகிருஷ்ண ராயென்னுள் நேயம் – வரச்
சீக்கிரத்தில் ஆக்கிவைக்க வேண்டும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (13)
ஶம்பு₄ஸ்வரூபஸ்தவமேவ – பா₃ல
லௌல்யம் மதீ₃யம் க்ஷமஸ்வாத்ம தா₃யின் |
பாதா₃ப்₃ஜ யுக்₃மம் ப்ரபத்₄யே – நைத்ர
முஞ்சாமி முஞ்சாமி தே பாது₃கே(அ)ஹம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம்  || 14||
ஆத்மமுண ராத்மசுகம் வடிவம் – சிவம்
ஆனபர மாத்மம்அது வைதம்
நூத்தநிலை பூத்தமஹாப் பெரியன் – தவம்
நூற்றறியா யானோஓர் சிறியன்
ஏற்றருளி என்குறைகள் நீக்கும் – வழி
எனக்கருளல் நின்கடமை ஆக்கும்
உற்றதுன தருளடிகள் கற்றேன் – இனிச்
சற்றுமவை விட்டுவிடேன் நற்றேன்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (14)
கோ₃பால ப₄க்தேன ரஸிதம் – வாஜ
பேயாதி₃ஸந்துஷ்ட ஶம்பு₄ ப்ரஸாதா₃ம் |
ஸ்தோத்ரம் கு₃ரூணாம் பவித்ரம் – யஸ்து
ப₄க்த்யா படே₂த் ஸோஸ்து ரூபாதி₃ஶோபி₄
ஸ்ரீகாமகோடியதீந்த்ரம்  ||15||
வாஜபே யம்பெரிய யாகம் – நல்
வழியிலதைச் செய்துபெரு யோகம்
பூஜைசிவ னால்விரிய லாகும் – மறை
போதன்கோ பாலமுனி சூடும்
நாதமிதை மதியுணரப் பாடும் – உயர்
நலம்விளையும் துயரகலும் பாரும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (15)

நிறைவு

Related Posts

Share this Post