भोगीन्द्रभोगमणिरञ्जितपुण्यमूर्ते ।
योगीश शाश्वत शरण्य भवाब्धिपोत
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१॥
போ₄கீ₃ந்த்₃ரபோ₄க₃மணிரஞ்ஜிதபுண்யமூர்தே ।
யோகீ₃ஶ ஶாஶ்வத ஶரண்ய ப₄வாப்₃தி₄போத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥1॥
bhogīndrabhogamaṇirañjitapuṇyamūrte .
yogīśa śāśvata śaraṇya bhavābdhipota
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥1॥
1) திருப்பாற் கடலில் திருமகளுடன் அறிதுயிலில் இருப்பவரே, திருச்சுழலைத் திருக்கரம் கொண்டவரே! ஆதிசேடரின் மாணிக்கம் ஒளி வீசும் மகுடமாகப் பிரகாசிக்க, தெளிவான சுடர் முகத்தை உடையவரே; நிலையான யோகேஷ்வரரே, ‘ஸம்ஸாரம்’ எனும் பிறவித் துயர்க்கடலைக் கடக்க உதவும் நல்ல படகானவரே; இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
सङ्घट्टिताङ्घ्रिकमलामलकान्तिकान्त ।
लक्ष्मीलसत्कुचसरोरुहराजहंस
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥२॥
ஸங்க₄ட்டிதாங்க்₄ரிகமலாமலகாந்திகாந்த ।
லக்ஷ்மீலஸத்குசஸரோருஹராஜஹம்ஸ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥2॥
saṅghaṭṭitāṅghrikamalāmalakāntikānta .
lakṣmīlasatkucasaroruharājahaṃsa
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥2॥
2) நான்முகன், உருத்திரன், வாயு, அக்னி முதலான பல தெய்வ வடிவங்களும், உயர்வான நன்மையை விழைந்து, நற்கூட்டமாகக் கூடித் தொழுகின்ற புனிதமான திருவடிகளை உடையவரே! இலக்குமி தேவியின் இதயமாகிய தெளிந்த ஏரியில், மென்மையாகப் பயிலும் ராஜ அன்னமே! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
मारोग्रभीकरमृगप्रवरार्दितस्य ।
आर्तस्य मत्सरनिदाघनिपीडितस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥३॥
மாரோக்₃ரபீ₄கரம்ருக₃ப்ரவரார்தி₃தஸ்ய ।
ஆர்தஸ்ய மத்ஸரநிதா₃க₄னிபீடி₃தஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥3॥
mārograbhīkaramṛgapravarārditasya .
ārtasya matsaranidāghanipīḍitasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥3॥
3) ‘ஸம்ஸாரம்’ எனும் அடர்ந்த துயர்க்காட்டில் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன், ஓ முராரி! இங்கே கொடுமையும் பயங்கரத்தன்மையும் கொண்ட ‘ஆசாபாசம்’ எனும் விலங்குகள் என்னை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்துகின்றன! பிறவித் துயரின் கொடிய வெப்பத்தில், சுயநலப் பிணிகொண்டவனாக அவதியுறுகிறேன். இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
सम्प्राप्य दुःखशतसर्पसमाकुलस्य ।
दीनस्य देव कृपणापदमागतस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥४॥
ஸம்ப்ராப்ய து₃꞉க₂ஶதஸர்பஸமாகுலஸ்ய ।
தீ₃னஸ்ய தே₃வ க்ருபணாபத₃மாக₃தஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥4॥
samprāpya duḥkhaśatasarpasamākulasya .
dīnasya deva kṛpaṇāpadamāgatasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥4॥
4) ‘ஸம்ஸாரம்’ எனும் பாழ் கிணற்றின், மிகப் பயங்கரமான ஆழத்தில் யான் விழுந்து சிக்குண்டு கிடக்கிறேன். அங்கே நூற்றுக்கணக்கான ‘துயரம்’ ஆகிய அரவங்கள் சூழ்ந்துள்ளன. இப்படிக் கட்டுண்டு, பலவித இன்னல்களால் முடங்கிக் கிடக்கும் பாவிக்கு அருளுங்கள்! ஓ தேவரே! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
नक्रग्रहग्रसननिग्रहविग्रहस्य।
व्यग्रस्य रागरसनोर्मिनिपीडितस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम्॥ ५॥
நக்ரக்₃ரஹக்₃ரஸனநிக்₃ரஹவிக்₃ரஹஸ்ய।
வ்யக்₃ரஸ்ய ராக₃ரஸனோர்மினிபீடி₃தஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம்॥ 5॥
nakragrahagrasananigrahavigrahasya.
vyagrasya rāgarasanorminipīḍitasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam॥ 5॥
5) ‘ஸம்ஸாரம்’ எனும் பரந்த கடலில், எல்லாவற்றையும் வெட்டிச் சாய்க்கும் ‘காலம்’ எனும்; (கரவு) முதலையிடத்தே, சிக்கிய என் வாழ்க்கை, ‘இராகு’ எனும் நிழற் கிரணத்தால் எப்படிப் ‘பூரண சந்திரன்’ படிப்படியாக விழுங்கப்பட்டுவிடுமோ, அப்படி மறைந்து கொண்டு இருக்கிறது. எனது புலன்களும், ஆசை அலைகளின் நுரைகளாகிய விருப்பு, வெறுப்பு எனும் இரு நிலைகளில் சிக்கி, வாழ்க்கையை சிக்கலாக்கி அழிக்கின்றன. இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
शाखाशतं करणपत्रमनङ्गपुष्पम् ।
आरुह्य दुःखफलितं पततो दयालो
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥६॥
ஶாகா₂ஶதம் கரணபத்ரமனங்க₃புஷ்பம் ।
ஆருஹ்ய து₃꞉க₂ப₂லிதம் பததோ த₃யாலோ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥6॥
śākhāśataṃ karaṇapatramanaṅgapuṣpam .
āruhya duḥkhaphalitaṃ patato dayālo
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥6॥
6) ‘ஸம்ஸாரம்’ எனும் இப்பெருமரத்தில் பாவங்களே விதையாகவும், (புறப்பொருளில் உள்ள ஆசையால் தூண்டப்பட்டுச் செய்த) எண்ணற்ற செயல்களே அம்மரத்தின் நூற்றுக்கணக்கான கிளைகளாகவும், புலன்களே இலைகளாகவும், மலர்களே ‘காமன்’ எனும் ஆசையாகவும் உள்ளன. அம்மரத்திலே ஏறித் துயரமாகிய கனிகளை உண்ட நான், அத்துயரால் கீழே விழுகின்றேன். ஓ கருணையுடையோனே! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
दंष्ट्राकरालविषदग्धविनष्टमूर्तेः ।
नागारिवाहन सुधाब्धिनिवास शौरे
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥७॥
த₃ம்ஷ்ட்ராகராலவிஷத₃க்₃த₄விநஷ்டமூர்தே꞉ ।
நாகா₃ரிவாஹன ஸுதா₄ப்₃தி₄நிவாஸ ஶௌரே
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥7॥
daṃṣṭrākarālaviṣadagdhavinaṣṭamūrteḥ .
nāgārivāhana sudhābdhinivāsa śaure
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥7॥
7) ‘ஸம்ஸாரம்’ எனும் எல்லாவற்றையும் அழிக்கின்ற நச்சுப் பாம்பு, தன்னுடைய கொடுமையான முகத்தையும்; கூர்மையான நாக்கினையும் கொண்டு, பெருவிடமாகிய வெம்மையை வீசி, என்னைக் கருக்கி அழிக்கின்றது. ஓ! அரவங்களின் எதிரியான கருடனை வாகனமாக்கியவரே, எமது காயங்களுக்குக் குளிர்ந்த மருந்தான மெஞ்ஞான அமுதக் கடலில் திளையும் திருமாலே! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
ज्वालावलीभिरतिदग्धतनूरुहस्य ।
त्वत्पादपद्मसरसीशरणागतस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥८॥
ஜ்வாலாவலீபி₄ரதித₃க்₃த₄தனூருஹஸ்ய ।
த்வத்பாத₃பத்₃மஸரஸீஶரணாக₃தஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥8॥
jvālāvalībhiratidagdhatanūruhasya .
tvatpādapadmasarasīśaraṇāgatasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥8॥
8) ‘ஸம்ஸாரம்’ எனும் சுட்டெரிக்கும் பெருந்தீ, எமக்குப் பெரும் பேதலை (அச்சத்தை), துயரத்தைக் கொடுக்கிறது! அதன் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் சூட்டினால் என் உடலின் ஒவ்வொரு பாகமும் கருகுகிப் போகின்றன! நினது முளரி (தாமரை) மலர்த் திருவடிகளாகிய குளிர்ந்த ஏரியில், எமக்கு அடைக்கலம்் அருள்க! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
सर्वेन्द्रियार्तवडिशार्थझषोपमस्य ।
प्रोत्खण्डितप्रचुरतालुकमस्तकस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥९॥
ஸர்வேந்த்₃ரியார்தவடி₃ஶார்த₂ஜ₂ஷோபமஸ்ய ।
ப்ரோத்க₂ண்டி₃தப்ரசுரதாலுகமஸ்தகஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥9॥
sarvendriyārtavaḍiśārthajhaṣopamasya .
protkhaṇḍitapracuratālukamastakasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥9॥
9) ‘ஸம்ஸாரம்’ எனும் பெருங்கடலில், ஆசைகளால் சிக்கிய என் வாழ்க்கை மூழ்கிவிட்டது! புலன்கள் எல்லாம், (ஆசையினால்) தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போல; தலையும், வாயும் கிழிந்து அழிவதாக, ஆசைகளில் சிக்கிய என் நிலைப்பாடும் அழிகின்றது! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
निष्पिष्टमर्मवपुषः सकलार्तिनाश ।
प्राणप्रयाणभवभीतिसमाकुलस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१०॥
நிஷ்பிஷ்டமர்மவபுஷ꞉ ஸகலார்திநாஶ ।
ப்ராணப்ரயாணப₄வபீ₄திஸமாகுலஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥10॥
niṣpiṣṭamarmavapuṣaḥ sakalārtināśa .
prāṇaprayāṇabhavabhītisamākulasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥10॥
10) ‘ஸம்ஸாரம்’ எனும் வலிய, பயங்கரமான மதயானை தன்னுடைய பலமிக்க துதிக்கையால் என்னைத் தாக்கியது; அதனுடைய பருத்த கால்கள் என் உயிர் உறுப்புக்களை மிதித்து நசுக்குகின்றன. இடரெல்லாம் களைகின்ற இனியோனே, மரணம் எனும் அச்சத்தால் துயருற்றவனாகிய எனக்கு; இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
चोरैः प्रभो बलिभिरिन्द्रियनामधेयैः ।
मोहान्धकूपकुहरे विनिपातितस्य
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥११॥
சோரை꞉ ப்ரபோ₄ ப₃லிபி₄ரிந்த்₃ரியநாமதே₄யை꞉ ।
மோஹாந்த₄கூபகுஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம் ॥11॥
coraiḥ prabho balibhirindriyanāmadheyaiḥ .
mohāndhakūpakuhare vinipātitasya
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam ॥11॥
11) அறியாமையாகிய குருட்டுத் தன்மையால், பகுத்தறிதல் எனும் பெரும் நிதியைக் களவு கொடுத்தவனாக, புலன்களின் தொடர்ச்சியான பசியினை ஆற்றுவதற்காக; புறப்பொருள் ஆசையில் ஆழ்ந்து மதிமயக்கம் எனும் பாழ்கிணற்றுக்குள் என் வாழ்க்கை விழுந்து விட்டது. இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
कर्षन्ति यत्र भवपाशशतैर्युतं माम्।
एकाकिनं परवशं चकितं दयाळो
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम्॥ १२ ॥
கர்ஷந்தி யத்ர ப₄வபாஶஶதைர்யுதம் மாம்।
ஏகாகினம் பரவஶம் சகிதம் த₃யாளோ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம்॥ 12 ॥
karṣanti yatra bhavapāśaśatairyutaṃ mām.
ekākinaṃ paravaśaṃ cakitaṃ dayāl̤o
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam॥ 12 ॥
12) யமதூதர்கள், ஏற்கனவே ஆயிரக்கான ஆசைக் கயிற்றினால் கட்டுண்ட என்னை (மீண்டும்) கட்ட நெருங்கி, பலத்த ஒலியினை எழுப்பி; அவர்களின் பாசக் கயிற்றால் என் கழுத்தை இறுக்குகிறார்கள்! நான் தனியனாக இருக்கிறேன். இப்படியான தாக்கத்தில் அச்சம் கொண்டு அடுத்து என்னவருமோ எனத் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறேன், ஓ தயாளனே! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
मन्येन सिन्धुतनयामवलम्ब्य तिष्ठन्।
वामेतरेण वरदाभयपद्मचिह्नं
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम्॥ १३ ॥
மன்யேன ஸிந்து₄தனயாமவலம்ப்₃ய திஷ்ட₂ன்।
வாமேதரேண வரதா₃ப₄யபத்₃மசிஹ்னம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம்॥ 13 ॥
manyena sindhutanayāmavalambya tiṣṭhan.
vāmetareṇa varadābhayapadmacihnaṃ
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam॥ 13 ॥
13) ஒரு திருக்கரம் ‘சுதர்ஸனச் சக்கரம்’ எனும் திருச்சுழலையும், மறு திருக்கரம்் உயர்வான மெய்யறிவைக் காட்டும் ‘சங்கு’ கொண்டும் உள்ளது. (மூன்றாவதான) மற்றொரு திருக்கரம், பெருங்கடல் மகளான ‘மஹாலக்ஷ்மி’ ஆகிய திருமகளை அணைத்துக் கொண்டிருக்கிறது; (எனவே தங்களின் நான்காவதான) வலக்கரத்தை மேலே உயர்த்தி, ‘அபயம்’ எனும் பாதுகாப்பு அளிக்கும் தாமரையைக் காட்டுவீராக! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
व्यासादिभागवतपुङ्गवहृन्निवास।
भक्तानुरक्तपरिपालनपारिजात
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम्॥ १४ ॥
வ்யாஸாதி₃பா₄க₃வதபுங்க₃வஹ்ருந்நிவாஸ।
ப₄க்தானுரக்தபரிபாலனபாரிஜாத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தே₃ஹி கராவலம்ப₃ம்॥ 14 ॥
vyāsādibhāgavatapuṅgavahṛnnivāsa.
bhaktānuraktaparipālanapārijāta
lakṣmīnṛsiṃha mama dehi karāvalambam॥ 14 ॥
14) (கருவிலேயே அடியாராகிய) பிரஹலாதர், நாரதர், பராஸரர், புண்டரீகர், வியாசர் முதலான பாகவத உத்தமர்களின் இதயத்தில் வசிப்பவரே! பக்தர்களுக்கு அருள்பாலித்து, அவர்களுக்கு (‘ஆத்ம ஞானம்’ எனும்) மெய்யான உண்மையில் நிலையளிக்கும் கருணையில், கற்பகத் தருவானவரே! இலக்ஷ்மி நரசிம்மரே, தங்கள் திருக்கரங்கள் எனைத் தாங்கும் புகலாகட்டும்!
मग्नार्थमत्र निवहोरुकरावलम्बम् ।
लक्ष्मीनृसिंहचरणाब्जमधुव्रतेन
स्तोत्रं कृतं सुखकरं भुवि शङ्करेण ॥१५॥
மக்₃னார்த₂மத்ர நிவஹோருகராவலம்ப₃ம் ।
லக்ஷ்மீந்ருஸிம்ஹசரணாப்₃ஜமது₄வ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுக₂கரம் பு₄வி ஶங்கரேண ॥15॥
magnārthamatra nivahorukarāvalambam .
lakṣmīnṛsiṃhacaraṇābjamadhuvratena
stotraṃ kṛtaṃ sukhakaraṃ bhuvi śaṅkareṇa ॥15॥
(15) (‘பிரம்மம்’ ஆகிய) எச்சக்தியால்், ‘மாயை’ வலிமை பெற்றதாகி அழகான உருப்பெற்றுப் பெரும் புனித ஒட்டமாக, எல்லாமுமாக விளங்குகிறதோ; அந்த (பிரம்ம) சக்தியே, உலகில் மாயையினால் மதிமயக்கத்தில் சிக்கியோரை மீட்டி அருளும் பொருட்டு, எல்லா நலனும் அளிக்கும் தமது அருட்கரங்களைப் பெரும் புகலாக விரித்து; அமுதூட்டும் அழகிய தாமரைத் திருவடிகளுடன்் இலக்ஷ்மி நரசிம்மமராக விளங்குகிறது! அப்பரப்பிரம்மத்தைத் தியானிப்பதற்காக ஒப்பற்ற நலத்தை விழையும் அடியாரிகளுக்கு இத்துதி (அருள்மிகு பகவான்) சங்கரரால் அருளப்பட்டது.