90 கணபதி அதர்வசீர்ஷ உபநிடதம்

(Read in ENGLISH)

பொருள் விளக்க உரைக்கு, PDF இறக்கம் செய்து கொள்ளவும்

சம்ஸ்கிருத மூலம்

|| ஶாந்தி பாட2 ||

 

ஓம் ப4த்்3ரம் கர்ணேபி4​: ஶ்ருணுயாம தே3வா​: |
ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா​: |
ஸ்தி2ரைரங்கை3ஸ் துஷ்டுவாகு3ம் ஸஸ்தநூபி4​: |
வ்யஶேம தே3வஹிதம் யதா3யூ​: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா​: |
ஸ்வஸ்தி ந​: பூஷா விஶ்வவேதா3​: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி​: |
ஸ்வஸ்தி நோ வ்ருஹஸ்பதிர்த3தா4து ||

ஓம் ஶாந்தி​: ஶாந்தி​: ஶாந்தி​: ||

ஓம் நமஸ்தே க3ணபதயே || 1 ||

த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸி |
த்வமேவ கேவலம் கர்தா(அ)ஸி |
த்வமேவ கேவலம் த4ர்தா(அ)ஸி |
த்வமேவ கேவலம் ஹர்தா(அ)ஸி |
த்வமேவ ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்மாஸி |
த்வம் ஸாக்ஷாதா3த்மா(அ)ஸி நித்யம் || 2 ||

ருதம் வச்மி | ஸத்யம் வச்மி || 3 ||

அவ த்வம் மாம் | அவ வக்தாரம் |
அவ ஶ்ரோதாரம் |
அவ தா3தாரம் | அவ தா4தாரம் |
அவாநூசாநமவ ஶிஷ்யம் |
அவ புரஸ்தாத் | அவ த3க்ஷிணாத்தாத் |
அவ பஶ்சாத்தாத் | அவோத்தராத்தாத் |
அவ சோர்த்4வாத்தாத் | அவாத4ராத்தாத் |
ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமந்தாத் || 4 ||

த்வம் வாங்மயஸ்த்வம் சிந்மய​: |
த்வமாநந்த3மயஸ்த்வம் ப்3ரஹ்மமய​: |
த்வம் ஸச்சிதா3நந்தா3(அ)த்3விதீயோ(அ)ஸி |
த்வம் ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி |
த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞாநமயோ(அ)ஸி || 5 ||

ஸர்வம் ஜக3தி3த3ம் த்வத்தோ ஜாயதே |
ஸர்வம் ஜக3தி3த3ம்் த்வத்தஸ்திஷ்ட2தி |
ஸர்வம் ஜக3தி3த3ம் த்வயி லயமேஷ்யதி |
ஸர்வம் ஜக3தி3த3ம்் த்வயி ப்ரத்யேதி |
த்வம் பூ4மிராபோ(அ)நலோ(அ)நிலோ நப4​: |
த்வம் சத்வாரி வாக் பதா3நி |
த்வம் கு3ணத்ரயாதீத​: |
த்வம் அவஸ்தா2த்ரயாதீத​: |
த்வம் தே3ஹத்ரயாதீத​: |
த்வம் காலத்ரயாதீத​: |
த்வம் மூலாதா4ரஸ்தி2தோ(அ)ஸி நித்யம் |
த்வம் ஶக்தித்ரயாத்மக​: |
த்வாம் யோகி3நோ த்4யாயந்தி நித்யம் |

த்வம் ப்3ரஹ்மா த்வம் விஷ்ணுஸ்த்வம்
ருத்3ரஸ்த்வமிந்த3ரஸ்த்வமக்3நிஸ்த்வம்
வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்3ரமாஸ்த்வம்
ப்3ரஹ்ம பூ3ர்பு4வஸ்ஸ்வரோம் || 6 ||

க3ணாதி3ம் பூர்வமுச்சார்ய
வர்ணாதீ3ம்ஸ்தத3நந்தரம் |
அநுஸ்வார​: பரதர​: |
அர்தே3ந்து3லஸிதம் |
தாரேண ருத்3த4ம் |
ஏதத்தவ மநுஸ்வரூபம் || 7 ||

க3கார​: பூர்வரூபம் |
அகாரோ மத்4யரூபம் |
அநுஸ்வாரஶ்சாந்த்யரூபம் |
பி3ந்து3ருத்தரரூபம் |
நாத3ஸ்ஸந்தா3நம் |
ஸகு3ம்ஹிதா ஸந்தி3​: || 8 ||

ஸைஷா க3ணேஶவித்3யா |
க3ணக ருஷி​: |
நிச்ருத்3 கா3யத்ரீச்ச2ந்த3​: |
க3ணபதிர்தே3வதா |
ஓம் க3ம் க3ணபதயே நம​: || 9 ||

ஏகத3ந்தாய வித்3மஹே
வக்ரதுண்டா3ய தீ4மஹி |
தந்நோ த3ந்தி​: ப்ரசோத3யாத் || 10 ||

ஏகத3ந்தம் சதுர்ஹஸ்தம்
பாஶமங்குஶதா4ரிணம் |
ரத3ம் ச வரத3ம் ஹஸ்தைர்பி3ப்4ராணம்
மூஷகத்4வஜம் ||

ரக்தம் லம்போ3த3ரம்
ஶூர்பகர்ணகம் ரக்தவாஸஸம் |
ரக்தக3ந்தா4நுலிப்தாங்க3ம்
ரக்தபுஷ்பைஸ்ஸுபூஜிதம் ||

ப4க்தாநுகம்பிநம் தே3வம்
ஜக3த்காரணமச்யுதம் |
ஆவிர்பூ3தம் ச ஸ்ருஷ்ட்யாதௌ3 ப்ரக்ருதே​:
புருஷாத்பரம் |
ஏவம் த்4யாயதி யோ நித்யம்
ஸ யோகீ3 யோகி3நாம் வர​: || 11 ||

நமோ வ்ராதபதயே | நமோ க3ணபதயே |
நம​: ப்ரமத2பதயே |
நமஸ்தே(அ)ஸ்து லம்போ3த3ராயைகத3ந்தாய
விக்4நநாஶிநே ஶிவஸுதாய
வரத3மூர்தயே நம​: || 12||

ஏதத3த2ர்வஶீர்ஷம் யோ(அ)தீ4தே
ஸ ப3ரஹ்மபூ4யாய கல்பதே |
ஸ ஸர்வவிக்4நைர்ந பா3த4யதே |
ஸ ஸர்வத்ர ஸுக2மேத4தே |
ஸ பஞ்சமஹாபாபாத்ப்ரமுச்யதே |
ஸாயமதீ4யாநோ தி3வஸக்ருதம்
பாபம் நாஶயதி |
ப்ராதரதீ4யாநோ ராத்ரிக்ருதம்
பாபம் நாஶயதி |
ஸாயம் ப்ராத​: ப்ரயுஞ்ஜாநோ
பாபோ(அ)பாபோ ப4வதி |
ஸர்வத்ராதீ4யாநோ(அ)பவிக்4நோ ப4வதி |
த4ர்மார்த2காமமோக்ஷம் ச விந்த3தி || 13 ||

இத3மத2ர்வஶீர்ஷமஶிஷ்யாய ந தே4யம் |
யோ யதி4 மோஹாத்4தா4ஸ்யதி ஸ
பாபீயாந் ப4வதி |
ஸஹஸ்ராவர்தநாத்3யம் யம் காமமதீ4தே
தம் தமநேந ஸாத4யேத் || 14 ||

அநேந க3ணபதிமபி4ஷிஞ்சதி ஸ
வாக்3மீ ப4வதி |
சதுர்த்2யாமநஶ்நந் ஜபதி ஸ
வித்3யாவாந் ப4வதி |
இத்யத2ர்வணவாக்யம் |
ப்3ரஹ்மாத்3யாவரணம் வித3யாந்ந
பி3பே4தி கதா3சநேதி || 15 ||

யோ தூ3ர்வாங்குரைர்யஜதி ஸ
வைஶ்ரவணோபமோ ப4வதி |
யோ லாஜைர்யஜதி ஸ யஶோவான் ப4வதி |
ஸ மேதா4வாந் ப4வதி |
யோ மோத3கஸஹஸ்ரேண யஜதி ஸ
வாஞ்சி2தப2லமவாப்நோதி |
யஸ்ஸாஜ்யஸமித்3பி4ர்யஜதி
ஸ ஸர்வம் லப4தே
ஸ ஸர்வம் லப4தே || 16 ||

அஷ்டௌ ப்3ராஹ்மணாந் ஸம்யக3 க3ராஹயித்வா
ஸூர்யவர்சஸ்வீ ப4வதி |
ஸூர்யக்3ரஹேமஹாநத்3யாம் ப்ரதிமாஸந்நிதௌ4
வா ஜப்த்வா ஸித்3த4மந்த்ரோ ப4வதி
மஹாவிக்4நாத் ப்ரமுச்யதே |
மஹாதோ3ஷாத் ப்ரமுச்யதே |
மஹாப்ரத்யவாயாத் ப்ரமுச்யதே |
ஸ ஸர்வவித்3 ப4வதி
ஸ ஸர்வவித்3 ப4வதி |
ய ஏவம் வேத3 | இத்யுபநிஷத் || 17 ||

ஓம் ஶாந்திஶ்ஶாந்திஶ்ஶாந்தி​: ||

தமிழில் மொழிபெயர்ப்பு

|| ஓம்! சாந்தி பாடம் ||
நல்லன செவிகள் நயந்தினிக் கேட்க!
நலமுற விழிகள் நயந்தினிப் பார்க்க!
வல்லநற் றேகம் வகையுறப் பூக்க!
வழிபுலன் பொறிமனம் வளமுறக் காக்க!

உள்ளநல் லாயுள்் உயர்வறி வதனால்
உலகினில் நற்சுகம்்் உவந்திடச் சேர்க்க!
நந்நலம் இந்திரன் நகுமறை கூட்ட
நயந்துணர் நந்நெறி நலமுற ஈட்ட

உள்ளுரம் வளமை உடல்நலம் ஊட்ட
உலகுயர்ந் தொளிரும் உயர்கதிர் காட்ட
பொல்லன காக்கைப் புள்குணம் ஓட்ட
பொலியருட் கருடன் பொறையறி வூட்ட

நல்லுல கத்தை நமக்கென அயனார்
நடைமுறைப் படுத்தி நடத்துவ ராமே!

ஓம் சாந்தி ! சாந்தி! சாந்தி!

ஓம் ஸ்ரீ கணநாதா செவ்வடி போற்றி! (1)

தத்துவ மஸியருட் தகையுரு நீயே!
தகவுல கந்தரும் தவனயன் நீயே!
நற்றுல கருளரி நாரணன் நீயே!
நயமரிந் தருளும் நமசிவன் நீயே!!

எப்புற மும்படர் எழிலணுப்் பொருளே!
எதிலும் உணர்வாய் எழுமொளித் திரளே!
நித்தில வடிவே! நிதியே! விழிமேல்
நிலைத்திடும் பரசுக நிறையுரு வடிவே! (2)

நியதியின் வழியில் நிலவும்் என்மொழி!
நித்திய சத்தியம் நிலவும் என்மொழி! (3)

அடியேன் எனையும் அய்யா காக்க!
அறிவாற் புகலும்் அன்பர்் காக்க!
படிப்போர் தெளியப் பகிர்வோர் காக்க!
பயில்வோர் குருவைப் பணிவோர் காக்க!

தென்புறம் வடக்கு திசைகீழ் மேற்கு
எண்புறம் இருந்து எமைநீ காக்க!
இன்னும் அப்புறம் இப்புறம் எல்லாம்
இன்புறச் செய்து எமைநீ காக்க! (4)

வாக்கினில்் என்னுரை வாய்மொழி நீயே!
வகுத்திடும் அறிவென வாய்த்ததும் நீயே!
பூத்திடும் நற்சுகப் போதமும் நீயே!
புலர்ந்திடும் பிரமப் பூரணம் நீயே!

ஈற்றென இல்லா இனிமையும் நீயே!
இருந்தொளிர் நற்சுக இன்பமும் நீயே!
ஆற்றறி ஞானம் ஆய்பொருள் நீயே!
அகவுணர் வாகிய ஆன்மனும் நீயே! (5)

ஞாலமும் யாதுமுன் நந்நருட் படைப்பு !
நலனுற வளர்த்தரி நடத்திடும் பொறுப்பு!
ஆதலி னாலுன தன்பினில் ஆர்த்து
அனைத்துல கங்களும் அண்டிடும் ஈர்த்து!

ஐம்பெரும் பூதம்் அருட்பயன் ஓங்கும்
அருஞ்சொற் சக்தியின் அகநிலை நான்கும்
வல்லவ நினதருள் வடிவதன்் பாங்கு!
வளர்பயன் விளைக்கும் வளமுன தாங்கு!

முக்குணம் கொடுத்து முக்குணம் கடந்து
முவ்வுடல் கொடுத்து முவ்வுடல் கடந்து
முந்நிலை அனுபவம் முடிவுறக் கடந்து
முக்கா லத்தை முற்றும் கடந்து

எப்போ தெதிலும் எழிலாய் இருக்கும்
முப்போ தமையும் முழுமைப் பொருளே!
ஒப்பே இல்லா ஒருமைப் பொலிவே
நுட்பே உயிர்க்குள் நூற்றிடும் வலிவே!

தெளிவார் நின்னைத் தெரிவார் அதனால்
தினமுன் துதியிற் திளைவார் மகிழ்வார்!
களிவார் முகனே கஹனே அரன்்மால்
கனிவார் அமரர் கதியா னவனே!

பெருவான் வெளியும் பெருந்தீ வளியும்
உருவான் மதியும் உயர்சூ ரியனும்
நிலமா கியகீழ் நெடுமேல் உலகும்
தளமா கியவுன் தகையால் விளையும்! (6)

கணநா தரின்நற் கவிநா மமதை
தினம்நா நவிலத் திரளாம் கருணை
உணர்வா யுணர ஒலியால் உகவே
புணர்வாம் விதியைப் புரிவார் மிகவே

‘க’வென எழுந்து ‘இம்’மெனத் தொடரும்
கனிமொழி எழுத்து கடைசியிற் படரும்
பூவென விளைந்து பூத்திடும் பிறையும்
பொலிவுறச் சுடர்மீன் போலது மிளிரும்

கம்மெனும் ஒலியிற் கணபதி உருவம்்!
கனிந்திடச்் சுகவரம் கனியுறு வடிவம்!
கம்மெனும் மந்திரக் கருவிதை பதியும்
கருணையில் மலரும்் கணபதி நிதியம்!

ஓம் கம் கணபதயே நம: (7)

ககாரம் தொட்டு அகாரம் இட்டு
மகார முற்று மதியினிற் பொட்டு
சந்தியின் நெறிகள் சரிவுறக் கற்று
புந்தியிற் கணபதி புகழருள் பெற்று

கருமறை வித்தாய்க்் கணேச வித்யா
தருமறை ஞானத் தவமிது யோகம்!
உருமனம் ஏற்றி உயர்நிலை தியானம்்
பெருகுவர் சீர்மிகு பேரறி வாகும்! (8)

இம்மறை மந்திரம் எத்தனை நளினம்!
அம்முறை தந்்தருள் அருமுனி கணகர்
நிலவோ ட்டமெனும் நிஸ்ருகா யத்ரி
அளவோ ட்டமிதன் அழகுறக் கூறல்

கரிமுகன் திருவளர் கணேசர் தெய்வம்
வரியுணர் உருகிட வதிவார் திருவளர்
ஆயத் தம்முளம்் அற்புதக் கணபதி
காயத் ரிஎனும் கற்பகத் தருமலர்!

ஓம் கம் கணபதயே நம: (9)

ஓம் ஸ்ரீ கணேச காயத்ரி

ஏகத3ந்தாய வித்3மஹே
வக்ரதுண்டா3ய தீ4மஹி |
தந்நோ த3ந்தி​: ப்ரசோத3யாத் (10)

தந்தம் ஒன்றும் தருங்கரம் நான்கும்
பந்தம் விலக்கும் பாசாங் குசமும்
ஒடித்த கொம்பும் உயர்தரு அபயமும்
தடித்த வயிறும் தகைசெந் நிறமும்

மூஞ்சுறுக் கொடியும் முறமெனச் செவியும்
தீஞ்சுடர் வண்ணம் திகழொளி உடையும்
சந்தனப் பூச்சும் சகத்துணைக் கனிவும்்
முந்தைய புவனம் மூத்தவ நிலையும்

பிரகிருதி புருஷன் பிரிவுக் கப்பால்
வரநிதி யாகிய வல்லக ணேசரை
எவரே தவறா தேற்றுவர் தியானம்
அவரே பெரியார்! அருந்தவ யோகி! (11)

நந்தா கணபதி நாதா போற்றி!
எந்தா யுனதாள் எழிலே போற்றி!
சிந்தா மணியுன் சிந்தனை யாலே
தந்தாள் உலகின் தலைவா போற்றி!

கூட்டக் கோவே! குழுவின் கதியே!
ஆட்டிக் கடையும் அருளே போற்றி!
எல்லாம் அடக்கி எழும்பிய உதரம்
உள்ளாய் இடரை உதிர்ப்பாய் போற்றி!

ஒற்றைக் கொம்பா லொன்றைக் காட்டி
கற்றுத் தருவாய் கழலே போற்றி!
பற்றைக் களைவாய் பரசிவ சுதனே
நற்றைத் தருமருள் நாதா போற்றி! (12)

சீரிய அதர்வ சீரிஷம் இதனை
நேரியர் எவரே நிறைவில் உணர்ந்து
சொல்லும் புலனும் சுடருடல் இணைய
அல்லும் பகலும் அனுபவித் திருப்பின்

ஆகுவர் பிரம்ம ஐக்கிய வுண்மை
ஏகுவர் இன்பம் எல்லாம் அடைந்து
நிறைவுற வாழ்வார் நெடும்ஐம் பாவத்
தடையற ஆள்வார் தகுவார் விடுதலை!

வைகறை படிக்க வருத்திடும் இரவிற்
செய்வினை போகும் சீர்மன மாகும்!
மாலையிற் படிக்க மறையும் பகல்வினை!
மறுபடிப் படிக்க முழுமையிற் கொடுவினை

இல்லா தாகும்! இறுக்கிடும் பாவம்
செல்லா தாகும்! சேர்ந்திடும் நிறைவு!
துதித்திடும் இடங்கள் தூயன வாகும்!
மதிப்புற உலகில் மாண்புற வாழும்

அறம்பொரு ளின்பம் அடைவார் வீடு!
சுகம்பெறும் ஞானச் சுதந்திரத் தோடு
முக்தியின் நலமுற மூழ்கி நிலைக்கும்
சக்தியில் வாழும் சமன் அறிவாரே! (13)

சீர்மிகு அதர்வ சீரிஷம் இதனை
காமுகர் எவர்க்கும் காட்டுதல் பாவம்!
ஓர்முறை எவரும் உரைத்தயிச் சீலம்
சீர்கெடச் செய்து செலவழிப் பதனாற்

தீயிடர் செய்தார்! திரளாய்ப் பெருவினை
நோயிடச் செய்தார்! நுண்ணியர் அதனாற்
ஆயிரம் முறைநன் கனுபவித் திதனை
வாயுர உரைப்பார் வாழ்வு நற்பேறே! (14)

மாமறை மந்திரம் மதியினில் உணர்ந்து
பூமனம் உந்திடப் பொறிபுலன் இயைந்து
இடபா முகனை இதனால் நினைத்து
சுகமாய் மனதில் சூடித் துதிப்பவர்

வாக்கில் உலகை வசீக ரிப்பார்!
வாய்மை இனிமை தோய உரைப்பார்!
சதுர்த்தி விரதம் சான்றோ ராக்கும்!
சத்தியம் அதர்வணர் சாற்றிய நியதி!

நிறைத்திடும் சுகத்தை நிர்மல சுகத்தை
நேற்றிடும் பிரம நிர்மல முகத்தை
மறைத்திடும் திரையை மாயா எனும்மதி
மாற்றிடும் கலையை மதியினிற் தெளிந்து

வீடெனும் நன்மை விளைத்திடும் பாதை
நாடுவர் உண்மை நலம்பெற உணர்ந்து
கூடுவர் இன்பம்! குறைவிலர் அச்சம்
ஏதிலர் என்றும் இசையுறும்் வாழ்வே! (15)

அதனால் எவரே அறவார் எனவாய்
இதமாய் இதனை இனிதாய்ப் பயில்வார்
கணநா தனையே கதியாய் உருவாய்
தினமா சையினால் திருவாய் மொழிவார்

அருகம் புல்லில் அர்ச்சனை செய்வார்்
அருநிதி குபேர அனுபவம் எய்வார்!
நெற்பொரி ஹோமம்் நிறைவதி கத்தை
சொற்புகழ் கீர்த்தி சுடுகொழுக் கட்டை

ஆயிரம்் செய்து ஆகுதி சேர்ப்பார்
நேரியர் ஆவார் நினைத்தன ஈர்ப்பார்!
நெய்யிற் சமித்து நேர்த்திய யாகம்
செய்பவர் நன்மை செயலுறப் பார்ப்பார்! (16)

நெறிவாழ் எண்மர்க் குரிதாய் அறிவு
சரியாய்த் தருவார் சமனாய்ப் பரிதி!
நேரியர் கதிரொளி நிழலுரு கிரஹணப்
போதினில் நதிக்கரை புகழுறு வாயில்

சேரிட நின்று செபித்தால்்் சித்திகள்
சீரியர் என்று செயிப்பார் பெருமை
உள்ளார்் இதனை உணர்ந்துயர் வாரே
எல்லாம் அறிவார்! எல்லாம் அறிவார்! (17)

இதுவே உண்மை இயம்பிடும் ஞானம்
இப்படி உபநிஷத் உட்பொருள் ஆகும்!

 

Related Posts

Share this Post