ஆதி குரு தக்ஷிணாமுர்த்தி வழிபாடு

காஞ்சி ஸ்ரீமடம்

ஸ்ரீ குரு ஆசியுரை

நாள் – 26 – 03 – 98

ஜனன, மரண, துக்கச் சேததக்ஷம் குரும் நமாம:

ஞானதாதாவான குருவிற்கு மேம்பட்டவரில்லை என்றே பெரியோர் கூறுவர். எல்லா குருவரர்களுக்கும் குருவான ஸ்ரீபரமேஸ்வரன் தானே விரும்பி எடுத்துக் கொண்ட திருக்கோலம் ஸ்ரீதக்ஷிணமூர்த்தி. முதியவர்களுக்கும் முதியவராக, முன்னவருக்கும் முன்னவராக இருப்பவர் பரமயுவாவாகக் காட்சி தருகிறார்.

மரங்களில் மூத்ததும், அரசுமான வனஸ்பதியான ஆலமரத்தின் அடியில் ப்ரும்ம ஸ்ருஷ்டியில் முதலில் படைக்கப் பெற்றிருந்தும் வயதால் எல்லோருக்கும் மூத்தவராயினும், பாலவடிவிலே, ஞான உபதேசம் பெரும் ஆர்வத்தால் எப்போதும் ஸநாகாதி யோகியர் சிஷயர்களாகத் தன்னைப் புடைசூழ்ந்தமர்ந்திருக்க, மெளனமே மொழியாக, தனது ஆனந்தத்தால், அமைதியின் எல்லையைக் காட்டுகின்ற திருமண்டலுமும், சின்முத்திரையுமே உரைவிளக்கமாகக் காட்டுகின்ற ஆசார்ய திருக்கோலத்தின் அழகு, இதனைச் சிற்பிகள் தன் மனக்கண் முன் நிறுத்தி வடித்த திருவடிவங்கள் பரமேஸ்வரரின் ஆலயங்களில் தெற்குவட சுற்றில் தென்முகமாக அமைந்துள்ளன.

"ஏகம் ஸத்விப்ரா: பகுதா வதந்தி" என்றபடி ஒரே மூர்த்தி பல திருக்கோலங்களைக் கொள்வதைச் சிற்பிகள் வடித்துள்ளார்கள்.

இக்கோலங்களை ஜயா சந்திரசேகர் ஓவியமாக வரைய அதன் தத்துவ விளக்கங்களை மீ. ராஜகோபாலன் சொல்லோவியமாக வரைந்துள்ளார்கள். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியை எட்டு சரீரங்கள் கொண்டவராக "பூரம்பாம்ஸி அநிலோ நில :" என்ற ஸ்ரீசங்கர பகவத்பாதரது தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் நினைவூட்டுகிறது. ஐந்து பூதங்கள், சூரிய சந்திரர்கள், ஜீவன் ஆகிய எட்டுமே வேறு நோக்கில், ஐந்து பூதங்கள், அவற்றின் கூட்டால் உருப் பெற்ற கர்மேந்திய, ஞானேந்திரிய 10 இந்திரியங்கள், ஐந்து ப்ராண வாயுக்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்கள் என்ற 24 தத்துவங்களாக விரிவுபெறுகின்றன. இவற்றை நினைவுபடுத்தி அதனை விளக்குகின்ற ஆச்சார்ய தத்துவத்தின் முழுவடிவமான ஸ்ரீமஹாஸ்வாமிகளின் திருஉருவத்தை 25வது தத்துவமாகக் காட்டப்பட்டிருப்பதும், திருக்கோயில்களில் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி கொண்டுள்ள 24 திருக்கோலங்களையும் காட்டியுள்ள இந்தச் சிறந்த நூலைப் பார்த்து மிகவும் ஸந்தோஷிக்கிறோம்.

மேலும் இந்நூலின் மூலம் கிடைக்கும் தொகையை வேதபரிபாலனம், தர்ம ஸதாபனங்களின் ரக்ஷணம் முதலிய நற்பணிகளுக்கு அர்ப்பணம் செய்ய உத்தேசித்துள்ள உதார கொடைத்தன்மையை அறிந்து மேலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உயர்ந்த நூலாசிரியர்கள் மேலும் இம்மாதிரியான நூல்களைப் படைத்து மக்களுக்குப் பயன்படும்படி செய்துகொண்டு இருக்கும்படியும், இந்த நூலின் முலம் மக்கள் உண்மை ஞானத்தை அடைந்து மோக்ஷ ஸாம்ராஜயத்தை அடைய ஆசீர்வதிக்கிறோம்.

நாராயணஸ்ம்ருதி

இரண்டாம் பதிப்பின் அறிமுகம்

ஒன்றாகிய பிரம்மமே அதனுள் அடங்கி வெளிப்படும் சுத்தமாயையின் காரணமாக, தன்னை ஐந்து சிவ தத்துவங்களாகவும், ஏழு வித்யா தத்துவங்களாகவும், இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது.

இந்த முப்பத்தாறு தத்துவ அறிவின் உண்மையை, அவித்யா எனும் மயக்கமாகிய அசுத்தமாயையில் அகப்பட்ட மனிதர்களாகிய நமக்கு அளிப்பதற்காகவே பரசிவமே தக்ஷிணாமூர்த்தி வடிவான ஆதி குருவாக அருள் பாலிக்கின்றார். ஆதலினால், அத்தத்துவ தாகத்தினைத் தீர்க்கும் அமிர்தத் தடாகமாகவே குருவின் திருப்பாதங்களைப் பணிவது நம் பயன்.

அத்தாகத்தின் உந்துதலாலேயே, சிவதத்துவ அருள் வேண்டலாக ஐந்து பாடல்களும், வித்யா தத்துவ அருள் வேண்டலாக ஏழு பாடல்களும் சேர்க்கப்பட்டு, இந்த இரண்டாம் பதிப்பு முப்பத்தாறு துதிப்பாடல்களுடன் வெளியிடப்படுகின்றது.

இதன் பயன், பயில்வோர் மனதில் பரநினைவைப் பதிப்பதாலேயே நிறையும்.

(புத்தக வடிவில் வேண்டுவோர், தொடர்பு கொள்க)

மீ. ராஜகோபாலன்

Introduction

By the divine instruction and guidenace from the Gurus of Sri Kanchi Mutt, the book Adi Guru Sri Dhaksinamurthi Prayer – was released in the year 1999. Dedicated to the reverce of the ‘Guru-Sisya’ relationship, the book is aimed to instil Bhakthi and Gyanam in the purusers’ minds. This book is a collection verses in Tamil by Mee. Rajagopalan, combined with the beautiful pictures of Lord Sri Dhaksinamurthy, drawn by Smt. Jaya Chandrasekaran.

By the grace of God, I met Smt Jaya Chandrasekaran who has been quitely doing valuable social work in service to the humanity. Smt Jaya Chandrasekaran is an inspired artist and at the divine instruction of Sri Maha Periva, visited many temples in South India in search of the rare forms of Lord Sri Dhaksinamurthy. She has drawn them out of her heart. When I had the fortune of releasing an inspired Tamil versification of Sri Bhgavad Geetha by the grace of Sri Periva, I saw the pictures of Sri Dakshinamurthy by Smt Jaya Chandrasekaran. So beautiful the pictures are, my humble verses only try in vain to add more beauty.

The verses seek the wisdom to see one’s one body as the temple of God. As if to support my thought, Smt. Jaya Chandrasekaran gave me exactly 24 pictures, and so the 24 verses seek the purification of the 24 constituents of our embodiments within which the Arman regins. The twenty-fifth picture is Sri Maha Periva – aptly the one who has the divine purity of all these 24 constituents to rise above into a divine being.

If you like to have a print version of the book, please contact me.

PS: The second version includes another 12 verses as commanded by Sri Omkaranatha Swamiji. These 36 verses signify the 36 principles of Shiva tatvam.

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*