Guru – எங்கே என் குரு
எங்கே என் குரு – குருவடி தேடல்
எங்கே என் குரு – குருவடி தேடல்
ஹ்ரிஷிகேஷ் – ஒரு வாரம், ஒரு வரம் பசுமையும் உயரமும் கொண்ட மரங்கள் எல்லாம் விருட் விருட்டென காரின் கண்ணாடியில் விழுந்து மறைந்து கொண்டிருந்தன. பின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, இருபுறமும் ஓடிக்கொண்டிருக்கும் மரங்களையும் தூரத்தில் தெரியும் சிவாலிக் மலைகளையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி. வாடகைக் கார் என்னை, ஜாலி கிராண்ட் எனும் டேராடூன் விமான நிலையத்திலிருந்து ஹ்ரிஷிகேஷை நோக்கிச் சுமந்து கொண்டிருந்தது. அக்டோபர் மாதத்தில் டேராடூனில் 33 டிகிரி வெயிலை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், பளிச்சிடும் சூரியக் கதிர்களை எல்லாம், பச்சை மரங்கள் மறைத்தும், சித்திரமாய்ச்
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது
சுத்தாசுத்த தத்துவெனும்படி, சக்தியாகிய மாயை விளைக்கின்ற காலம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவமாகக் காட்டப்பட்டது
கருணையுன் விழிகள்வழியும் கலைகளுன் மொழியால்விரியும் வறுமையுன் வரவிலொழியும் வள்ளலேவழி நமஸ்காரம்! நின்றதோ சிவஸ்வரூபம் நீள்விழி அருட்பிரவாகம் குன்றதோ குணப்ரஹாஸம் குருபராபத நமஸ்காரம்!
சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.
குருவரம் ஒன்றே தருவது மனிதரின் – புருஷார்த் தமெனும் போதனை நான்கு
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -தத்துவம் நான்மறை தருவது கேட்க
பல கோயில்களுக்கும், மீண்டும் மீண்டும் சென்று, சித்திரங்களை வரைவது கண்டு, நண்பர்கள் ஏன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு வரையக்கூடாது என நல்லெண்ணத்தால் யோசனை கூறினர். கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்து, மனதில் தியானத்தால் யூகித்து, மதியால் தீவிர யோசித்து சித்திரங்களை வரையும் வாய்ப்பைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
முதற்பாடல் மாணவர்களாகிய நமக்கு உரித்தான கடமைகளையும், ஜகத்குருவாகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவுருவ அழகையும் விளக்குகிறது. அடுத்த 24 பாடல்களும், உயிர்களுக்கு ஆதாரமான தத்துவங்களில் ஞானசுத்தி அடையக்கோரி, ஜகத்குருவிடம் வேண்டுகின்றன.