Highgate Murugan

உயர்வாசற்குன்று ஸ்ரீ முருகப்பெருமான் துதி

ஸ்ரீவிநாயகர்துதி

கரியென உருவாகி கலிதனில் திருவாகி
கணபதி வடிவான பெருமாளே
களியொடு அடியார்கள் கணமுனைப் பணிவார்கள்
கனிவுடன் அருளாள வருவோனே
புரினட ராசனுமை வலமுறை யாகவந்து
பூதலம் ஈதென்ற புண்ணியனே
பூவறும் புல்லாலும் புனலால் இலையாலும்
பூசை ஏற்றாளும் கண்ணியனே
அரித்திரு மாலனுக்கு அயனொடு வேலனுக்கு
அடைக்கல மானதிரு வருளாளா
அறிவுரை தவறாமல் நெறிமுறை பிறழாமல்
அமைந்திடப் பெருவாழ்வு தருவாயே
தறிநுனி ஆடையிட்டுத் தமிழ்மணி மாலையிட்டு
திருநீர் மேனியிட்ட தெய்வீகா
தவறே புரியாமல் தரமே குறையாமல்
தவமே புரிந்தாள அருள்வாயே

In the image of elephant, as the head of Angels, You are the divine wealth in the age of Kali yug; Always in joy, the devotees adore You, In kindness, You are there to bless! By rightly going around the dancing Shiva and Uma, You showed thy divinity as the Universe within. In the simplicity of accepting flowers, grass,water or leaves as the gifts of worship,You are the ideal to adore! You are the abode to Sri Hari, Brahma and Velan! May You grant a great life, in which there is no deviation from truth, No failing from the righteousness; Clad in cotton with the garland of Tamil, and the holy ash on the body, You are divine! Without mistakes and uncompromising quality, guide me to perform the duties and reign, with Your grace?

ஓம்நமசிவாயம்

சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
அருமறை வேதம் சிவசிவ சிவசிவ
ஆனந்த ரூபம் சிவசிவ சிவசிவ
திருமறை ஞானம் சிவசிவ சிவசிவ
தீவினை போகும் சிவசிவ சிவசிவ
நரும்பொருள் நாமம் சிவசிவ சிவசிவ
நாரா யணீயம் சிவசிவ சிவசிவ
இருளிடை தீபம் சிவசிவ சிவசிவ
ஏகாந்த யோகம் சிவசிவ சிவசிவ
திருவுடை மோனம் சிவசிவ சிவசிவ
தினசரி தியானம் சிவசிவ சிவசிவ
நமச் சிவாயம் சிவசிவ சிவசிவ
நமனுக் கபயம் சிவசிவ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

ஸ்ரீ விசாலாட்சி துதி

அம்மா உனையன்றி யாருகதி தானெனக்கு
சும்மா இருப்பதென்ன சோதனையோ – பெம்மான்
மாலாட்சி வைகுந்த மாதவனின் சோதரிவி
சாலாட்சி நீயே துணை

(1)

கந்தனே எந்தையே கார்த்திகை பாலனே
கற்பனைக் கரிய வேலே
காருண்ய ரூபனே கேகய வாகனக்
காட்சிக் குரிய தேவே
செந்தமிழ்ச் சோதியே செந்திலாண் டவனே
சீலனே ஷண்முகா குஹா
சேவற் கொடியனே பாவந் தொலைவுறச்
செய்திடும் பழனி யப்பா
அந்தியே ஆதியே அறுமுகச் சோதியே
அக்னிப் பிரவாக மான
ஆதார மூலமே மேதா விலாசமே
அமரேச குமரே சனே
உந்திரு வடிகளே உய்வுரு வழியெனும்
உண்மை அறிந்து கொண்டேன்
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (1)

Kandha, my divine father, nursed by the Stars,
You are the power beyond all imagination,
With the most graceful form, seated on the Peacock,
You are the divinity is seen
In the sheen of radiance of the rich Tamil,
Ruler of Senthil, Pure, Six-faced, reigning in the hearts;
Holding the Rooster flag, annihilator of all sins,
You stand as the fruit of wisdom, Palaniappa;
You are the end, the beginning, the shining light of six faces
that pervades as the divine light in all directions
You are the basis of the basics,
the metaphysical grace of pure knowledge;
I have learnt the truth,
my salvation is at Your divine feet!
You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM,
beyond all comparison, the beautiful Lord!

(2)

அத்வைத மானதிரு சத்யப்ர மாணத்தை
ஆதிசிவன் அறிய நின்று
அமரேசனாய் வானோர் துயரோட்டச் சூரனை
ஆட்கொண் டருள வென்று
முத்தமிழ் வித்தகி மூதுரையாள் ஒளவைக்கு
மூலப் பொருள் உரைத்து
மூவினையும் ஒழிவுறப் பாபுனையும் மொழிபெற
முனைந்தருண கிரிக் களித்து
நித்யப் பிரம்மமாய் நிர்மல ஞானமாய்
நிமலனாய்க் குமரே சனாய்
நீயிருப்பாய் வினை நோயறுப் பாயென
நினைப்பதை மறுப்ப தழகோ
உத்தமர் தவத்திலே பக்தர்கள் மனத்திலே
சக்தி உருவான குருவே
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (2)

In reflecting Advaita, the eternal truth of no-duality to Lord Siva,
You stood as the head of all angels!
By conquering the demon Suran, You protected Devas;
You revealed the perfect knowledge to Avvaiyaar,
the maestro of Tamil, expansive trinity of prose, poetry and play;
You relieved Arunagiri of his sins, initiated his mastery of verse;
You are the eternal Brahmam, faultless wisdom,
Puritan and the son of Parameswaran!
How can you refute my trust that You are to unladen the chores of Karmas!
In the steadfast devotion of the saints and in the hearts of devotees,
You are manifested as the energy. You are my Guru.
You are the ruler of the Highgate, the manifestation of AUM,
beyond all comparison, the beautiful Lord!

(3)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியும்
தீராத பேராசை யும்
தினமொரு நினைப்பிலும் செயலிலும் வடிவிலும்
திரும்பி வாரா வயதிலும்
குறையிதே வாழ்வெனக் கொள்வதும் சஞ்சலம்
கூற்றுவன் வாரு மட்டும்
குணமெது நலமெது கூடவே வருவதருங்
குறிப்பறிய விட்டு விட்டும்
கறைபடிந் தென்னுயிர்த் திரைவிழச் செய்வதோ
கந்தனுக் கழகு சொல்வாய்
காத்தருள என்னிதயஞ் சேர்த்தணைய வருகவே
கருணைக் கடலான முதலே
உறைபவர் நெஞ்சிலே நிறைபெறும் ஷண்முகா
ஊழ்வினை தீர்க்கும் வேலே
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (3)

Even by crossing the oceans for seeking material wealth,
I continue to suffer from insatiable greed;
Daily haunted by varied thoughts and deeds,
I witness the irreversible age that passes by,
Yet I complain about life in anxiety!
Till the dawn of death,
Neither discriminate nor I know mine
What is right and what is beyond this birth!
Is it befitting to Your beauty that I fall dead with such folly?
Kanda, In order to save me and merge within my heart,
May You come, the sea of grace;
Residing in the hearts of the faithful devotees,
You are the spear that dissolve the sins.

You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM,
beyond all comparison

(4)

மரமாயும் கிழமாயும் மதயானை துணையாயும்
மாய்மாலம் செய்ய முடியும்
மாறாத தமிழ்கூற ஏறாத மரம் ஏறி
மாதிற்கு அருள முடியும்
திரமான வேலனாய் மரமான சூரனைத்
தீதற்ற தாக்க முடியும்
தீராத நோய்விட்டுப் பேராளன் பாடிய
திருப்புகழ் ஏற்க முடியும்
குறமாது மணக்கவும் பழமாக இனிக்கவும்
குன்றேறி நிற்க முடியும்
கூற்றுவன் நெற்றியில் தோற்றுவன் ஆயினும்
குருவாகிக் காட்ட முடியும்
உறவாடும் எந்துயர் ஓடோடச் செய்யவோ
உன்னால் முடிய வில்லை
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (4)

You could become a tree, Appear as oldman to free
Or climb the unclimbed tree
for the lady of eternal tamil to see
You could turn demon as tree
With grace, rid his sins and free
You could rescue the fallen and accept his Thirupugaz;
You could do deeds to marry the gypsy girl;
You could stand on the hill as the sweet fruit of wisdom;
You could become the guru even to the Lord Siva,
whose forehead was Your origin of manifestation!
So, why is it uneasy to rid of my agony, as I relate to you!

You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM,
beyond all comparison, the beautiful Lord!

(5)

தீராத வினைதீர்க்குந் திருத்தணிகை என்முகத்
தேயென்று காட்ட வேண்டும்
திருப்பரங் குன்றமென் உருப்பெலாம் என்றேகி
தீவினை ஓட்ட வேண்டும்
மாறாத ஞானமென் மலர்ச்செவி தான்ஸ்வாமி
மலையெனக் காட்ட வேண்டும்
மருதமலை என்றெனது மாறுதலை ஏற்றருளி
மயில்மீது அமர வேண்டும்
சீரான பழமுதிர்ச் சோலைஎன் நெஞ்சம்நற்
சிந்தையே செந்தூர் வண்ணம்
சிவப்பழனி மலைஎனது தவப்பயனே என்று
சீலம் உரைக்க வேண்டும்
ஊறாத ஞானமும் உருகாத நெஞ்சமும்
உடலும் என்னுயிரும் தஞ்சம்
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (5)

Treat my mind as Your Thiruthani that destroys all karams;
Let my organs be Thiruparangundram, thus rid of my sins;
Eternal wisdom to recur,
Let my blossoming ears that hear be the Swamimalai;
By seeing the changes within me as the Maruthamalai,
Be seated on the peacock!
Let the beautiful Pazhamuthirsolai be my heart,
Vivid colours of Thiruchendur be my thoughts;
And my steadfast devotion be Palani, the hill;
So declare the truth,
Still with no trace of wisdom and no grace in heart,
I surrender my body and soul to You, in tact.

You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM
beyond all comparison, the beautiful Lord!

(6)

ஆறறிவுத் திறமெலாம் நீயருளல் வேலாஉன்
அறுபடை வீடாக்கு வாய்
அஞ்சுதல் அழித்தெனது நெஞ்சினில் இனித்துனது
ஆசன மாக்கிமலர் வாய்
சீரறிவுஞ் செறிவும் சீராக்க என்மனச்
சிக்கல் சிங்கார வேலாய்ச்
சிந்தனயில் கந்தனையே வந்தனைகள் செய்திடுஞ்
சீலம் எடுத்துரைப் பாய்
சூரறியுங் காலனாய் வேலனாய் என்மனச்
சூனியம் அழித்தாளு வாய்
சுந்தரா கதிர்காமச் சந்திரா ஸ்வாமிமலைச்
சோதரா ஸ்வாமி நாதா
ஊரறிய நிலைக்கவும் ஊழ்வினை கலைக்கவும்
உனையன்றி கதியும் உண்டோ
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (6)

God of Spear, Let my six senses be Your six temples;
Destroy my fear; taking my heart as Your abode, sweetly be seated.
With clear intellect and grace, the web of mind be Your Sikkal;
Instill in my heart the knowledge of worship of Lord Kandan.
Destroyer of the demon Suran, Holder of the Spear,
Remove the void of my heart and reign.
You are beautiful as the Moon of Kadirkamam,
As my brother at Swamimalai.
For a noble life that is devoid of all sins,
Is there anyone for me other than You?

You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM,
beyond all comparison, the beautiful Lord!

(7)

விழியில்வரும் வெள்ளமோ வேதனையால் இல்லை
வியப்பினால் களிப்பால் உந்தன்
வேதாவி வாதத்தால் மேதாவி லாசத்தால்
வெட்டவெளித் திட்டமழ கால்
மொழியில்பெறு முயற்சியால் கவிபுனையு மயற்சியால்
மூடமதி ஓடமசை வால்
மோஹத்தால் உன்னழகு மேகத்தால் ஆடுமயில்
மோனப்ர காசநிலை யால்
வழியில்வரு வினைகள்தான் ஒழிவுபெறச் செய்வதால்
வள்ளிதேவ யானை யுடனே
வாராத பேரருளாய் வருவதால் நெஞ்சத்தில்
வந்தருளி ஆட்கொள்வ தால்
உழியில்வருங் காலனே உக்கிரவடி வேலனே
உன்னடிமை என்னையறி வாய்
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (7)

Flooding tears in my eyes, not in pain
But in ecstasy and joy;
For Your philosophy and the knowledge profound;
For the creation of Space, all its contents;
For my endeavours in words, poetic engagements
For the jitters of my ignorant mind, wavering like a sail;
For the love, the cloud of beauty enthralling the dancing peacock;
For Your serene silence, removing all obstacles in my way;
For the rarest vision of Yours in my heart with Valli and Deivayani ,
For quenching me in Your eternal bliss!
You are the Destroyer who comes at the End of the world!
Holder of the fierce Spear, please know me as Your slave!

You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM,
beyond all comparison, the beautiful Lord!

(8)

நல்லவர் பழக்கமும் நடத்தையில் இணக்கமும்
நயமான வாய்வார்த் தையும்
நாளைக்கு என்னாமல் நன்மைக்கே என்றின்று
நலிந்தோர்க்கு உபகா ரமும்
வல்லிய தேகமும் வாய்மையும் வீரமும்
வனப்பும் வரவுள் செலவும்
வாய்ப்பரிய வாய்ப்பும் வறியோர்க் குதவிடும்
வசதியும் பணிவும் செயலும்
சொல்லிய திருமறைச் சொற்பொருள் அறிவும்
சூது வாராத நினைவும்
சுற்றமும் மனையொடு சுமங்கலிச் செல்வமும்
சுடர்விடு சந்தான மும்
உள்ளமும் உருகிடும் உன்னருள் அறிந்திடும்
உயர்நிலை அடைய வைப்பாய்
உயர்வாசற் குன்றாளும் ஓங்கார தெய்வமே
ஒப்பிலாக் கந்த வேளே (8)

Association with good persons,
Affirming to norms good in conduct,
Sweet and soft words to mouth,
Not deterred for the morrow, good deeds to the needy today,
Strong body, truthfulness, courage, charm,
Prosperity and living within means
Opportune with rarest opportunities,
Heart and commitment to serve
Humility and timely action,
Contemplating the words of vedic wisdom
With thoughts pure, good kith and kin for sure
Cherished life with spouse and wise children,
Above all with the moving heart to realize You –
The highest of highest, please bless me to such state.!

You are the ruler of the Highgate,
the divine manifestation of AUM,
beyond all comparison, the beautiful Lord!

ஸ்ரீசத்யநாராயணர்துதி

மச்சமாய்க் கூர்மமாய் மண்மேவு வராஹமாய்
மாறுபடு நரஸிம்ஹ மாய்
மாபலி சிரமேவு வாமன ரூபனாய்
மறைதிரு பரசுரா மனாய்
மெச்சத் தகுந்த மனிதனாய் ராமனாய்
மேதகு பலரா மனாய்
மேதினியில் தீதகல கீதைபுகல் கண்ணனாய்
மெய்த்தவக் கல்கி யானாய்
அச்சுதா மாதவா கோவிந்த கோபாலா
அரிமால் அவதா ரனே
ஆனந்த சயனனே ஆதித்ய நயனனே
அருள்தரும் ஜய தேவனே
சச்சிதா நந்தனே சத்யநா ராயணச்
சதுர்மறை காட்டும் பொருளே
பக்தியால் நின்னையே நித்யபா ராயணப்
பக்குவம் தந்து காக்க

Fish, Tortoise, Boar that bore the earth,
Peculiar form of man and lion,
Vamanan whose feet touched the great King Bali,
The wise scholar Parasuraman,
The greatest human Sri Raman, noble Balaraman,
Kannan the Lord of Geetha to rid of evil
Kalki, the greatest – are all Your incarnations.
You are Achuthan, Madhavan, Govindan, Gopalan –
Holy manifestations of Lord Vishnu;
You perform the divine sleep, knowing all, with Your eyes like the Sun.
You are the Jayedeva, the blessing; You are the true eternal bliss;
You are Sathya Narayana, the essence of all four Vedas.
With devotion, let me worship You daily;
Give me such awakening and protection!,
May I perform the duties and reign, with Your grace?

ஸ்ரீவிஷ்ணுதுர்க்கைதுதி

கலைமகளே நிலவொளியே மாலக்ஷ்மி கலைவாணி
மாதரசி மோன வடிவே
மாசற்ற ஜோதியே மலையத்வஜன் மகளே
மங்கலக் குல விளக்கே
கலைமகளே கற்பகமே காமாக்ஷி மீனாக்ஷி
கற்பனைக் கரிய மாதே
கற்கண்டே கொற்றவையே கமலா சனத்தாளும்
கருணைக் கடலே தெளிவே
அழகுமலர் மாலையே பழகுதமிழ்ச் சோலையே
ஆனந்த கலா வல்லியே
ஆதார பந்தமே பாதார விந்தமே
அருமறை காட்டும் அருளே
உலகுவளர் பொருளெலாம் நலங்குவிய வைத்திடும்
உத்தமி துர்க்கை அம்மா
உயர்வாசற் குன்றாள வந்தனை நீஎந்தன்
உயிர்வாசல் நிற்ப தென்னாள்?

You are the daughter of the mountains,
the moon light, MahaLakshmi, Saraswathi, the majestic Queen mother,
You are the divine silence, flawless light, daughter of Malayathvajan,
The holiest lantern of the our clan, Lord of Art,
In the forms of all giving Karpagam, Kamatchi, Meenakshi,
And in forms innumerable beyond imaginations;
Sweet, Kali, ruling the lotus of my heart, the ocean of grace, lucidity,
Garland of beautiful flowers,
Garden of the conversational Tamil,
Blissful queen of all arts – You are the origin and the basis for everything;
Your feet show all Vedas; You make everything in the world to be well.
The purest, Durga, my mother,
You have come to rule the High Gate,
When are you going to be in my Soul Gate?

நவக்கிரஹ துதி

சூரியன் மதியங் காரகன் புதன்குரு
சுக்கிரன் சனி பாம்புகள்
சுடர்விடும் நவக்ரஹத் திருநெறி உலகினைச்
சோதிக்கும் எந்தன் வாழ்வில்
ஊறிய வினைபடவும் மாறியே பயன்தரவும்
உடலுளம் நலம்படைத் தும்
உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகளும்
ஒருமித்து உடன் இருந்தும்
சரியான நேரமுநற் குறியான நோக்கமும்
சந்தான சம்பாத்ய மும்
ஜாதகம் வைத்திடும் பாதகம் பொய்த்திடும்
சமய சஞ்சீவ அருளும்
காரிய சித்தியும் காருண்ய புத்தியும்
கைவல்ய ஞான நிலையும்
கைப்பட வைத்திடும் மெய்த்தவம் தருகவே
கருணைசீர் கிரஹ தேவே

In the form of Sun, Moon, Mars, Venue,
Jupitar, Mercury, Saturn, Raghu and Kethu,
You are the glorious nine Grahas
that influence the world; hence my life;
Let the long residual sins leave or be amended ;
For my body and mind to be sound!
My beloved, relatives, parents and children live together ever in harmony!
Let me have right timing and right focus in everything!
With prosperity, all impediments however sewn in the horoscope be void by timely blessing!
Successful in all endeavours and merciful in all thoughts,
Let me have the liberating bliss!
Please make all these to be available in hand!
Give me that promise, Merciful gods of the Grahas!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*