காசி பஞ்சகம்

 

குருவின் திருவடிகள் சரணம்

 

தத்துவமே மௌனமெனத் தந்தசிவ குருவடிவே
அத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே
நான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்
தான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே
பெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான
அரியனே காஞ்சி ஆச்சார்யப் பேறமுதே

காசீ பஞ்சகக் கருவூலம் மறைமொழியின்
வாசித்து அறியாத வழிமூலம் பெருவழியை
யோசித் தறிகவென ஓதுவித்த நற்குருவைப்
பூசித்து உணருமிப் பொழுதன்றோ பொற்காலம்!

நிறைமொழியில் மறையுண்மை நிற்குமிவ் வேதத்தை
முறைநழுவா தினியதமிழ் முகிழ்த்தமுதத் தேக்குடத்தில்
இறையருளால் நிரப்புமிவன் இயலாமை தீர்த்தருள்க!
கரைகளிலாக் கருணைக் கடலேயென் கற்பகமே!

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*