Manisha Panchakam

An inspired translation of Adi Sankara’s Manisha Panchakam in English and Tamil.

குருவே சரணம்.

தத்துவமே மௌனமெனத் தந்தசிவ குருவடிவே
அத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே
நான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்
தான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே
பெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான
அரியனே காஞ்சி ஆச்சார்யப் பேரமுதே
இலகுவாய்ச் சிவாநந்த லஹரியெனும் சுகவெள்ளம்
பழகுவாய்த் தமிழாலே பரிமளிக்க வரம்வேண்டும்
உளறுயான் நின்னருளால் உயரறிவு பெறவேண்டும்
உண்மைக் கருத்துவளம் உம்மருளால் வரவேண்டும்
பரசிவத்துப் பரசுகத்துப் பரவசத்தைப் பெறவேண்டும்
பயில்வோர் உம்மருளாலே பரஞானம் பெறவேண்டும்

Read

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*