கீதையின் பெருமை – பயிலும் பலன்

Dharovaacha:

Bhagavan parameshaana bhaktiravyabhichaarinee;
Praarabdham bhujyamaanasya katham bhavati he prabho. 1

1 (1) குருட்சேத்திரத்தில் பகவான் விசயனுக்கு அளித்த ஞான உபதேசத்தை, வேத வியாசரும், அவரருளால் சஞ்சயனும் மெய்சிலிர்க்கக் கேட்டதைப் போலவே, பூமாதாவும் கூடவே கேட்டு, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்க்க இறைவனை வேண்டுகின்றார்.

பூமாதா வினா

தாரகா	உலகை ஆளும் தருமப் பிரபுவே தேவா
நேருரை அளித்து என்னை நிச்சயப் படுத்த வேண்டும்
பிராரப்த கருமத் தாலே பிடிபட்ட பிறவிக ளுன்னைத்
தேறுதல் அடைவது எப்படி தெரிவிக்கக் கேட்டது மண்ணே

2 (சஞ்சிதம், ஆகமி, பிராரப்தம் என மூன்று வகைக் கருமங்கள் உயிர்களுக்கு உண்டு.)

கருமங்கள் மூன்று வகையே கரப்பது வினையின் பயனாய்
வருகின்ற தொலை நாளிலே வடிப்பது சஞ்சித கருமம்
அருமையில் அமையும் நாளை ஆள்வது ஆகமி கருமம்
இருப்பது இன்றே நடப்பது இயற்பது பிராரப்த கருமம்

3 ( உண்மையான ஞானம் பெறுவதால் சஞ்சிதம், ஆகமி ஆகிய இரண்டு கருமத்தால் அடைய வேண்டிய விளைவுகளை அழித்து விடலாம். )

இருளினை அழித்துக் காலை எழுந்திடும் கதிரைப் போலே
நிரவிய ஆகமி கருமம் நீண்டதோர் சஞ்சிதமென்னும்
மருளிய பாவம் அழியும் மனதினில் பிரம்ம ஞானம்
அருளிய போதில் உள்ளம் ஆனந்தம் அமைந்த போதில்

4 (ஆனால், பிராரப்தம் எனப்படும் கருமவினை மட்டும், உலகில் உடலும், உயிரும் சேர்ந்து இருக்கும் வரை தொடர்ந்து வரும். இதனை யாரும் அனுபவித்தே ஆகவேண்டும். )

மேனியைத் தொட்டுச் சீவன் மேதினி இருக்கும் வரையில்
ஊனைினை ஒட்டிப் பாவம் உரைந்திடும் பிராரப் தமே
காணுதல் ஆகும் இதனைக் கழிப்பது ஆகா துடலைப்
பேணுதல் மறையச் சாயும் பிறவியை விட்டுப் போகும்

Sri Vishnuruvaacha:

Praarabdham bhujyamaano hi geetaabhyaasaratah sadaa;
Sa muktah sa sukhee loke karmanaa nopalipyate. 2

ஸ்ரீகிருஷ்ணர் உரை

5 (2) பகவத்கீதை பயிலுவதாலும், பயின்றபடி நடப்பதாலும் மட்டுமே (பிராரப்தம் என்கிற) பாவத்தைப் போக்க முடியும்.

பூமாதா கேட்க இவனும் புண்ணியன் ஆவான் கீதை
தாமாகப் பயிலத் தினமும் தன்கடன் ஆற்றிப் பாதை
போவானே ஆயின் முக்தன் போகன் பிராரப்த மெனும்
நோவாலே சாயும் நிலையை நோக்காது உயர்வான் காண்க
Mahaapaapaadipaapaani geetaadhyaanam karoti chet;
Kwachit sparsham na kurvanti nalineedalam ambuvat. 3

6 (3) தாமரை இலையில் தண்ணீர் பதியாதது போல, பகவத்கீதை படிப்பவரது பாவம், அவரைத் தொடாது.

ஆழப் பதிந்த போதும் அகன்ற தாமரை இலை
சூழப் பதியுமோ தண்ணீர் சுற்றிய செயலும் உலகில்
பாழப் படுத்துமோ கண்ணீர் பற்றுமோ பகவத் கீதை
வாழத் தெரிந்து வாழும் வலிமை உடைய வர்க்கே
Geetaayaah pustakam yatra yatra paathah pravartate;
Tatra sarvaani teerthaani prayaagaadeeni tatra vai. 4

7 (4) கீதை புத்தகம் எங்கு உள்ளதோ, அங்கே புனித ஆறுகளும் கடலும் ஓடும். அதுவே கோவிலாகும்.

எங்கே கீதை என்று எழுதிய ஏடு உண்டோ
அங்கே வேத மோதும் ஆறுகள் கடலும் ஓடும்
துங்கா தீர மாகும் துாய க்ஷேத்திர மாகும்
மங்காப் புனிதம் அருள் மந்திரக் கோவி லாகும்
Sarve devaashcha rishayo yoginahpannagaashcha ye;
Gopaalaa gopikaa vaapi naaradoddhava paarshadaih. 5

8 (5) கீதை பயின்ற இடத்தில், கோபியரும், முனிவரும், சத்வரும், நாரதருமான நல்லோர் வசிப்பர்.

புத்தகம் பகவத் கீதை புலரும் இடத்தில் எல்லாம்
சத்தியம் நிலவும் தேவ சம்பந்தம் வளரும் முனிவர்
வித்தகர் விமலர் யோகி வேதியர் கோபியர் சத்வர்
நத்தவர் நாரதர் என்று நல்லவர் அருளக் கூடும்
Sahaayo jaayate sheeghram yatra geetaa pravartate;
Yatra geetaavichaarashcha pathanam paathanam shrutam;
Tatraaham nishchitam prithvi nivasaami sadaiva hi. 6

9 (6) அன்பர்கள் பகவத்கீதையை விசாரித்து, ஆராயும் இடத்தில் நானே வந்து உபதேசிப்பேன். இது சத்தியம்.

மண்ணுலகே மதியில் கேட்க மரியாதை செய்த கீதை
தன்னுயிராய் ஏற்றித் தியானம் தர்க்க விசாரணை செய்ய
கண்ணுயிராய்க் காத்தும் கீதை கல்விஉப தேசம் செய்ய
அண்மையிலே நானே இருப்பே னறுதியிட் டுறதி செய்வேன்
Geetaashraye'ham tishthaami geetaa me chottamam griham;
Geetaajnaanam upaashritya treen Uokaan paalayaamyaham. 7

10 (7) வேதத்தின் சாரமே கீதை. கீதையே என்னுடைய கூடு.

வாதையே வடியும் பிறவி வாட்டுதல் அகலக் கருதி
நீதியே புகலப் புவனம் நிலைப்படும் எனக்கு உறுதி
கீதையே கூடு என்று கேட்பவர் தேடும் ஞானப்
பாதையே பகவத் கீதைப் பாடமே வேதம் சுருதி
Geetaa me paramaa vidyaa brahmaroopaa na samshayah;
Ardhamaatraaksharaa nityaa swaanirvaachyapadaatmikaa. 8

11 (8) ஞானமும், நாதமும், வேதனை அகற்றும் பாதையும் கீதை. என்னுடைய வடிவமே கீதை.

ஞானத்தின் ஞானம் கீதை நாதப் பிரம்மம் கீதை
மோனத் துயரும் பாதை மொழியும் வேதம் கீதை
வானத் தகன்ற கீதை வல்லமை புகன்ற கீதை
கானக் கண்ணன் அருட் காட்சி கலந்த கீதை
Chidaanandena krishnena proktaa swamukhato'rjuna;
Vedatrayee paraanandaa tatwaarthajnaanasamyutaa. 9

12 (9) அர்ச்சுனன் மூலம் உலகிற்கு ஸ்ரீகிருஷணர் உபதேசித்த மும்மறைச்சாரமே கீதை.

வேதங்கள் மூன்றும் கீதை விளக்கிடும் விலங்கிய தான
பூதங்கள் போக்கும் கீதை புலர்த்திடும் அறிவா லயத்தின்
நாதனை நானே என்று நயத்திடும் கீதை விசயன்
போதனை பெறவே கிருஷ்ணன் பொழிந்த மறையே கீதை
Yoashtaadasha japen nityam naro nishchalamaanasah;
Jnaanasiddhim sa labhate tato yaati param padam. 10

13 (10) தினமும் கீதையின் பதினெட்டுப் பருவங்களையும் உறுதியாகப் படிப்பவன், மிக உயரிய நிலையே அடைவான்.

பதினெட்டுப் பருவங் களையும் படிப்பவன் தினமும் மனதில்
கதிகெட்ட தாகும் பிறவி களைந்திட அறிவால் அறியும்
பதியெட்டப் பாயும் ஞானப் பயிராக்கி ஓயும் ஆசை
மதிவிட்ட தாலே மனதில் மட்டிலா அமைதி  காண்பான்
Paathe'asamarthah sampoornam tato'rdham paathamaacharet;
Tadaa godaanajam punyam labhate naatra samshayah. 11

14 (11) தினமும் கீதையை முழுதும் படிக்க முடியாவிடினும், பாதியாவது படிப்பவன் காமதேனுவைப் பெற்ற பலனைப் பெறுவான்.

முற்றிலும் தினமும் பயில முடியாது எனினும் பாதி
கற்றவன் காம தேனு கண்டவன் போலே நீதி
உற்றவன் ஆவான் இதுவும் உறுதியே போகப் போக
மற்றவன் போலே ஞானம் மலரந்திடப் பெறுவான் பேறு
Tribhaagam pathamaanastu gangaasnaanaphalam labhet;
Shadamsham japamaanastu somayaagaphalam labhet. 12

15 (12) தினமும் கீதையின் மூன்றில் ஒரு பங்கான ஆறு பருவங்களைப் படிப்பவன், கங்கையில் குளித்தும், ஸோமயாகம் நடத்திய பலனையும் பெறுவான்.

காண்டம் ஆறு மட்டும் கற்பவன் கங்கை யாற்றில்
வேண்டுவ தான மட்டும் வெல்லுவன் குளித்துப் பேறு
ஈண்டவன் சோம யாகம் இருத்திய பலனைப் பெற்று
மீண்டவன் ஆவான் உலகில் மிளிர்பவன் சந்தோ ஷத்தால்
Ekaadhyaayam tu yo nityam pathate bhaktisamyutah;
Rudralokam avaapnoti gano bhootwaa vasecchiram. 13

16 (13) பக்தியுடன் தினம் கீதையின் ஒரே ஒரு பகுதியை மட்டுமாவது படிப்பவன், சிவலோகப் பதவி அடைந்து, சிவகணங்களுள் ஒன்றாய் ஆவான்.

ஒருபகுதி என்றால் என்ன ஒவ்வொரு நாளும் சிரத்தை
தருமிகுதி யாகக் கற்கும் தன்மையன் ருத்ர லோகம்
பெறுந்தகுதி பெறுவா னுறுதி பெரியதோர் சிவ கணத்துள்
உருந்தகுதி உடையவ னாகி உயருவான் உண்மை யாகும்
Adhyaayam shlokapaadam vaa nityam yah pathate narah;
Sa yaati narataam yaavanmanwantaram vasundhare. 14

17 (14) கீதையின் கால் பகுதியையோ, ஒரே ஒரு பாடலையோ மட்டும், பக்தியுடன் தினமும் படிப்பவன், பிறவிகளுள் உயர்ந்த மனிதப் பிறவியை எடுத்து உயருவான்.

கால்பங்கு தினமும் கீதை கற்பவன் மனித னாக
வாழ்வாங்கு வாழும் பிறவி வகைத்திட லாவது உறுதி
சூல்தங்கும் உயிரின் கதியே சுற்றிய பிறவிகள் இதிலே
மேல்தங்கும் மனிதப் பிறவி மேவுதல் அரிதின் அரிதே
Geetaayaah shloka dashakam sapta pancha chatushtayam;
  Dwautreenekam tadardhamvaa shlokaanaam yah pathennarah. 15

Chandralokam avaapnoti varshaanaam ayutam dhruvam;
  Geetaapaathasamaayukto mrito maanushataam vrajet. 16

18 (15-16) முடிந்த அளவு, கீதையைத் தினம் படிப்பவன், சந்திர லோகம் என்ற ஆனந்தப் பதவி அடைவான். சொர்க்கம் என்ற சுகானுபவத்தைப் பெறுவான்.

பத்தோ ஏழைந்தோ நாலோ பக்தியுடன் மூவிரண்டு ஒன்றோ
கற்போன் கதியடைவ துண்டு கவினுலகுச் சந்திரனின் வடிவம்
நிற்போன் பலகாலம் உயிரை நிலத்திலே விடுகையிலே கீதை
சொற்றேன் சொல்லாலே போவான் சொர்க்கத்து விருந்தாக ஆவான்
Geetaabhyaasam punah kritwaa labhate muktim uttamaam;
Geetetyucchaarasamyukto mriyamaano gatim labhet. 17

19 (17) ஒருபோதும் கீதையைப் படிக்காமல் இருந்தாலும், உயிர் போகும் போது, மனதால் உருகி, கீதை என்ற ஒரு சொல்லைச் சொல்பவன் உறுதியாக முக்தி அடைவான்.

படிக்கா மலிருந்தா லென்ன பாவிக்க மறந்தா லென்ன
நடிக்கா மலுலகம் வைத்த நாடகம் முடியப் பிராணன்
முடிக்கா மலுயிரும் போக முனையும் போதேனு முள்ளம்
வடிப்பா னேயாயின் கீதை வாக்கினால் மோட்சம் போவான்
Geetaarthashravanaasakto mahaapaapayuto'pi vaa;
Vaikuntham samavaapnoti vishnunaa saha modate. 18

20 (18) ஒருபோதும் கீதையைப் படிக்கா விட்டாலும், பல கொடிய செயலைச் செய்திருந்தாலும், கீதையை சிரத்தையுடன் நல்லோர் வழியாகக் கேட்டறிவானேயானால், அவனும், வைகுந்தப்பதவி அடைவான். இது உறுதி.

வெந்துயர் செயலைச் செய்தும் வேதியர் வழி மறந்தும்
வந்துயிர் அடையும் பிறவி வழியினை இருளச் செய்தும்
உந்துதல் இருந்தால் கீதை உரையினைக் கற்கும் ஆவல்
வந்தது என்றால் அவனும் வைகுந்தம் போவது உறுதி
Geetaartham dhyaayate nityam kritwaa karmaani bhoorishah;
Jeevanmuktah sa vijneyo dehaante paramam padam. 19

21 (19) படிக்காவிட்டாலும், பிறர் வாய் வழி கேட்காவிட்டாலும், தன் கடமையைப் பெரிதாய் மதித்து, மனதால் கீதையை நினைத்துத் தர்மம் ஆற்றி வருபவன், உண்மையிலேயே சீவன் முக்தன். உடலை விட்டபோது, என்னுடன் கலப்பவன் அவனே.

தன்னுடை தர்மத் தினையே தவம்எனச் செய்து கொண்டு
மண்ணுடை கர்ம யோகி மனதிலே பகவத் கீதை
பன்னுவன் ஆகின் அவனே பாரிலே சீவன் முக்தன்
எண்ணுவன் என்னை அதனால் என்னுளே கலப்பன் ஓர்நாள்
Geetaam aashritya bahavo bhoobhujo janakaadayah;
Nirdhootakalmashaa loke geetaa yaataah param padam. 20

22 (20) சனகன் முதலிய நல்லோர் கீதை பயின்று பெருமை அடைந்ததே இதற்குச் சான்று.

சரித்திரம் கேட்க நல்லோன் சனகன் முதலான பேரும்
தரித்திரம் விடுத்து ஆன்ம தரிசனம் பெறுவ தற்கு
மரித்திடும் முன்னே மாயா மயக்கம் அழியப் பெற்று
விரித்திடும் தோப தேச விளக்கமே ஏற்றது உண்மை
Geetaayaah pathanam kritwaa maahaatmyam naiva yah pathet;
Vrithaa paatho bhavet tasya shrama eva hyudaahritah. 21

Etanmaahaatmyasamyuktam geetaabhyaasam karoti yah;
Sa tatphalamavaapnoti durlabhaam gatim aapnuyaat. 22

23 (21-22) பகவத்கீதையைப் பயிலும் போது, கூடவே இந்த மஹாத்மியம் ஆகிய கீதையின் பெருமையைக் கற்பது அவசியம். அதனால் எல்லாப் பயனும் விளையும்.

இறைவனின் கீதை பயின்று இருத்திடும் மனத்தின் ஊடே
நிறைபெறும் மஹாத் மியமும் நிறைப்பது கடமை அதனால்
உறைபெறும் பலனை அடைந்து உத்தம நிலையைப் பெறுதல்
இறைவனின் கருணை வாக்கு இன்பத்தை அருளும் வாக்கு

Suta Uvaacha:

Maahaatmyam etad geetaayaah mayaa proktam sanaatanam;
Geetaante cha pathedyastu yaduktam tatphalam labhet. 23

ஸூதர் உரை

24 (23) கலியுகத்துக் கலங்கரை விளக்காக ஸ்ரீபகவத்கீதையை ஏற்று, இம்மை, மறுமை ஆகிய துயரத்தைத் தவிர்த்து, நல்லகதி அடைவோமாக.

அருமை யான கீதை ஆதர வாகும் கீதை
பெருமை யான கீதை பேரள வாகும் கீதை
தரும மான கீதை தக்கது காட்டும் கீதை
இருமை மாறும் பாதை ஏற்று வாழு வோமே
Iti srivaraahapuraane srigeetaamaahaatmyam sampoornam.
Thus ends the "Glory of the Gita" contained in the Varaha Purana.
Om Shanti, Shanti, Shanti!

Related Posts

Share this Post