தேவி மாஹாத்ம்யம் – கவச ஸ்தோத்திரம்

[printfriendly current=’yes’]

ஓம் ஐம் ஹ்ரீம்

ōṃ namaśchaṇḍikāyai

ஓம் சண்டிகாயை நம:
mārkaṇḍēya uvācha ।
ōṃ yadguhyaṃ paramaṃ lōkē sarvarakṣākaraṃ nṛṇām ।
yanna kasyachidākhyātaṃ tanmē brūhi pitāmaha ॥ 1 ॥

மார்க்கண்டேயர் வேண்டல்

மனிதரின் துயரம் யாவும்
மடித்தருள் புரிவ தாகும்
புனிதமிவ் வுலகில் யாரும்
புகன்றிடா அரிய ஞானம்

இனிதெதோ அதனைத் தாரும்!
எந்தையே பிரம்ம தேவே!
கனிவுசெய் வீரே! ஞாலம்
கடுந்துயர் மீட்கும் மாறே! (1)

brahmōvācha ।
asti guhyatamaṃ vipra sarvabhūtōpakārakam ।
dēvyāstu kavachaṃ puṇyaṃ tachChṛṇuṣva mahāmunē ॥ 2 ॥
பிரம்மதேவர் அருளல்

அறிவனே! அறிவாய் தேவி
அணிமணிக் கவசப் பேறு
பெரியது இரகசிய ஞானப்
பெருநலம் விளைக்குஞ் சாறு

அரியது அதைப்பெறு மாறு
அளிப்பதை அறிவினி லூடு!
திரிபறத் தெளியப் பாரு!
தீரனே! நன்முனி யோனே! (2)

prathamaṃ śailaputrī cha dvitīyaṃ brahmachāriṇī ।
tṛtīyaṃ chandraghaṇṭēti kūṣmāṇḍēti chaturthakam ॥ 3 ॥
முன்னவள் ஷைல புத்ரீ
முதலருட் பரம சக்தி!
பின்னவள் பிரம்மச் சரிணீ
பெயருடை அரிய சக்தி!

இன்னருட் சந்திர காந்தா
எனமூன்று வடிவ சக்தி!
கன்னலென் றருளும் நான்கு
கலைமலர் குஶ்மாந்தா சக்தி! (3)

pañchamaṃ skandamātēti ṣaṣṭhaṃ kātyāyanīti cha ।
saptamaṃ kālarātrīti mahāgaurīti chāṣṭamam ॥ 4 ॥
ஐந்தென ஸ்கந்த மாதா!
ஆறுகாத் யாயனீ ஏழாய்
வந்தவள் கால ராத்ரீ
வருமெட்டு மஹா கௌரீ! (4),
navamaṃ siddhidātrī cha navadurgāḥ prakīrtitāḥ ।
uktānyētāni nāmāni brahmaṇaiva mahātmanā ॥ 5 ॥
ஒன்பதாய் சிந்தி தாத்ரீ!
உருவென வந்தாள் துர்க்கா!
அன்பினாற் சிந்தித் தோதி
அயன்தொழும் அரிய நாமம்! (5)
agninā dahyamānastu śatrumadhyē gatō raṇē ।
viṣamē durgamē chaiva bhayārtāḥ śaraṇaṃ gatāḥ ॥ 6 ॥
அஞ்சுவர்க் கடைக்கல னாக
அனற்றுயர் துடைப்பது வாக
வெஞ்சிடும் படைக்கெதி ராக
வினையிடர் உடைப்பது வாக (6)
na tēṣāṃ jāyatē kiñchidaśubhaṃ raṇasaṅkaṭē ।
nāpadaṃ tasya paśyāmi śōkaduḥkhabhayaṃ na hi ॥ 7 ॥

yaistu bhaktyā smṛtā nūnaṃ tēṣāṃ vṛddhiḥ prajāyatē ।
yē tvāṃ smaranti dēvēśi rakṣasē tānnasaṃśayaḥ ॥ 8 ॥
prētasaṃsthā tu chāmuṇḍā vārāhī mahiṣāsanā ।

மருந்தென வருமிந் நாம
மகிமையை அறிவார் யாரும்
இருளடைந் துழலார் துன்ப
இடரவிந் துயர்வார் கண்ட

பெருமெதிர்ப் படைகள் தாண்டிப்
பெருநலம் அடைவார் எந்த
ஒருபெயர் சூட்டி னாலும்
உயர்வருள் கூட்ட வென்றார்!

சாமுண்டீ எனும்பேர் கொண்டு
வரக்கரு எருமையி லேறி
வாராஹி வருவது கண்டு
அடைக்கலம் கண்டார்க் குண்டு
அருஞ்சுகம் முக்திப் பேறு!
சடத்துடல் அமருஞ் செண்டு (7-8)

aindrī gajasamārūḍhā vaiṣṇavī garuḍāsanā
māhēśvarī vṛṣārūḍhā kaumārī śikhivāhanā ॥ 9 ॥
கரியமர் ஐந்திரீ வடிவாய்
கருடனில் வைஷ்ணவி எனவாய்
விடையமர் மாஹேஷ் வரியாய்
விரிமயிற் கௌமாரி உருவாய் (9)
lakṣmīḥ padmāsanā dēvī padmahastā haripriyā ॥
śvētarūpadharā dēvī īśvarī vṛṣavāhanā ।
brāhmī haṃsasamārūḍhā sarvābharaṇabhūṣitā ॥
ityētā mātaraḥ sarvāḥ sarvayōgasamanvitāḥ ।
nānābharaṇāśōbhāḍhyā nānāratnōpaśōbhitāḥ ॥ 10 ॥
ப்ரம்மிஎன் றன்னம் பயில்வாள்!
பெருநகை ஒளிமணி அணிவாள்!
அம்மணி அம்புயம் அமர்வாள்!
அம்புயக் கரத்துணை திருமால்!

செங்கொடி மாஹேஷ் வரியாய்
சிவனருட் துணையென அருள்வாள்!
இங்ஙனம் பலவித எழிலாய்
எழுந்தருள் புரிந்திடு கின்றாள்! (10)

dṛśyantē rathamārūḍhā dēvyaḥ krōdhasamākulāḥ ।
śaṅkhaṃ chakraṃ gadāṃ śaktiṃ halaṃ cha musalāyudham ॥ 11 ॥
தேரமர் அருட்திரு தேவி
திருவடி புகலெனத் தேடி
சீர்தரும் சினவடி வூடிச்
செகமிகுந் தேவரும் கூடி

பாரதி பதமலர் தொழுவார்!
பயனருட் சங்கொடு சக்ரம்
கூரரி வேலுடன் கொம்பு
கொடுஅரி வாளுடன் கம்பு (11)

khēṭakaṃ tōmaraṃ chaiva paraśuṃ pāśamēva cha ।
kuntāyudhaṃ triśūlaṃ cha śārṅgamāyudhamuttamam ॥ 12 ॥
அம்புடன் தோமரம் கயிறு
அருட்கோ டரிஎரி வேலும்
தும்பொடு சூலமும் கொண்டு
துணைதரும் கணைவிடு செண்டு
கொம்பினி லாகிய வில்லும்
கொண்டிணை யிலாதவ ளென்று (12)
daityānāṃ dēhanāśāya bhaktānāmabhayāya cha ।
dhārayantyāyudhānītthaṃ dēvānāṃ cha hitāya vai ॥ 13 ॥
அம்பிகை நின்றனள் நன்று
அடியவர் துயரினைக் கொன்று
வெம்பகை என்பன வென்று
விடிவருட் சுடரென நின்றாள்! (13)
namastē’stu mahāraudrē mahāghōraparākramē ।
mahābalē mahōtsāhē mahābhayavināśini ॥
trāhi māṃ dēvi duṣprēkṣyē śatrūṇāṃ bhayavardhini ॥ 14 ॥
பேரருள் வலிமையிற் பூக்கும்
பெருவுல கத்தினைக் காக்கும்
சீரருள் ஆசைகள் கொண்டாள்!
செகத்துய ராவையும் விண்டாள்!

கோருவர் சுகமளிக் கின்றாள்!
கொடியவர் நடுங்கிடு கின்றார்!
வாரமு தேவுயிர்த் தாயே!
வரமருள்! மறைமறை மாயே! (14)

prāchyāṃ rakṣatu māmaindrī āgnēyyāmagnidēvatā ।
dakṣiṇē’vatu vārāhī nairṛtyāṃ khaḍgadhāriṇī ॥ 15 ॥

ஐந்தரீ கிழக்கினிற் காக்க
அருட்தீ வடிவுடை யாளாய்
வந்துதென் கீழ்த்திசை காக்க
வாராஹீ தெற்கினிற் காக்க
கந்தறக் கடகதா ரண்யை
கருணைதென் மேற்கினிற் காக்க (15)

வந்துநல் மேற்கினில் அருளி
வாருணீ யாதினி தாக்க
நந்தினி ம்ருகவா ரிணியாய்
நலவட மேற்திசை காக்க

pratīchyāṃ vāruṇī rakṣēdvāyavyāṃ mṛgavāhinī
udīchyāṃ pātu kaumārī aiśānyāṃ śūladhāriṇī ॥ 16 ॥

சுந்தரி அருட் கௌமாரி
சுகமுற வடதிசை காக்க
அந்தரி அருளிட மேற்கில்
அருட்சூல தாரணி யாக
சந்ததம் அருள்விளக் காகும்
சக்தியின் அடிமலர் காக்க (16)

ūrdhvaṃ brahmāṇī mē rakṣēdadhastādvaiṣṇavī tathā ।
ēvaṃ daśa diśō rakṣēchchāmuṇḍā śavavāhanā ॥ 17 ॥

பிரம்மணி மேலிருந் தென்னை
பெருநலம் அடைவுறக் காக்க
அம்மணி வைணவித் தாயும்
அடியிருந் தடியனைக் காக்க

சம்மண மிட்டுடல் மேலே
சாமுண்டீ எனவுல. காளும்
செம்மணி செய்திசை எல்லாம்
சீரடை வித்தெனைக் காக்க! (17)

jayā mē chāgrataḥ pātu vijayā pātu pṛṣṭhataḥ
ajitā vāmapārśvē tu dakṣiṇē chāparājitā ॥ 18 ॥

ஜயா வெனஎன் முன்னால்
ஜயமருள் தந்துடன் காக்க
விஜயா எனவென் பின்னால்
வெற்றியும் புகழுடன் ஆக்க

அஜிதா எனயிடப் புறத்தின்
அருகிருந் துதவிடக் காக்க
அபரா ஜிதாவலப் புறத்தின்
அண்மை இருந்தெனைக் காக்க (18)

śikhāmudyōtinī rakṣēdumā mūrdhni vyavasthitā
mālādharī lalāṭē cha bhruvau rakṣēdyaśasvinī ॥ 19 ॥

மண்டை ஓடுடை ஆரம்
மாலா தாரீஎன் நெற்றி
கண்டனள் இனித்துக் காக்க
கவின்மிக யஷ்வினீ எந்தாய்
செண்டென புருவத்தைக் காக்க
சீர்தரச் செய்தினி தாக்க (19)

trinētrā cha bhruvōrmadhyē yamaghaṇṭā cha nāsikē
śaṅkhinī chakṣuṣōrmadhyē śrōtrayōrdvāravāsinī ॥ 20 ॥

பூஷணி முக்கண் ணாள்என்
புருவ இடைவெளி காக்க
நாசியின் துளையைத் தெய்வ
நாயகி யமகந்தா காக்க

வீசருள் சங்கிணி எந்தன்
விழிமலர் நடுவினைக் காக்க
வாசினி செவிகளைக் காக்க
வளமிகச் செய்தினி தாக்க (20)

kapōlau kālikā rakṣētkarṇamūlē tu śāṅkarī
nāsikāyāṃ sugandhā cha uttarōṣṭhē cha charchikā ॥ 21 ॥

காளிகா கன்னமும் காக்க
கடைநடுச் செவியிணைப் பாலம்
ஆளுவள் சங்கரி யாக
அருட்சுகந் தந்தினி தாக்க

சுகந்தா எனவந் தென்னிற்
சுகமணம் நுகர்வுணர் வாக்க
உகந்தாய் சர்ச்சிகா என்மே
லுதட்டினை அருளிக் காக்க (21)

adharē chāmṛtakalā jihvāyāṃ cha sarasvatī
dantān rakṣatu kaumārī kaṇṭhadēśē tu chaṇḍikā ॥ 22 ॥

அமிர்தகலா நின் சக்தி
அடிஉதட் டழகைக் காக்க
குமுதம் என்றென் நாவில்
கொலுவிரு சரஸ்வதி காக்க

பல்வளம் பலமுறச் செய்து
பயனிடு கௌமாரி் காக்க
நல்லருட் சண்டிகா எந்தன்
நடுத்தொண் டையினைக் காக்க (22)

ghaṇṭikāṃ chitraghaṇṭā cha mahāmāyā cha tālukē
kāmākṣī chibukaṃ rakṣēdvāchaṃ mē sarvamaṅgaḻā ॥ 23 ॥

மணியெனச் சித்திர கந்தா
மகிழவுள் நாக்கைக் காக்க
கனிந்தருள் மஹா மாயா
கவின்மேல் வாயையும் காக்க

தாடையைத் தாய்கா மாட்சி
தயவுடன் அருளிக் காக்க
பீடுடை ஸர்வ மங்களா
பேச்சினை நீச்சறக் காக்க (23)

grīvāyāṃ bhadrakāḻī cha pṛṣṭhavaṃśē dhanurdharī
nīlagrīvā bahiḥ kaṇṭhē nalikāṃ nalakūbarī ॥ 24 ॥

கழுத்தினைப் பத்ர காளி
கசடறக் கட்டிக் காக்க
கொழுத்தவிற் கொண்ட தேவி
கோமதி தனுர் தாரீஎன்

நடுத்தடம் நயமுறக் காக்க
நலமுற நீலக் ரீவா
வெளிக்கழுத் தருளிக் காக்க
வளிநலம் குபேரீ காக்க (24)

skandhayōḥ khaḍginī rakṣēdbāhū mē vajradhāriṇī
hastayōrdaṇḍinī rakṣēdambikā chāṅgulīṣu cha ॥ 25 ॥

வாளுடைக் கடகா தாரணீ
வல்லிய தோளினைக் காக்க
ஆளுமை கொண்டிடி தாங்கும்
அன்னை வஜ்ர தாரணீ

மேலிரு புயத்தைக் காக்க
மென்கரம் தந்திணீ காக்க
சீலமாய் விரல்களு மாகச்
செய்தருள் அம்பிகா காக்க (25)

nakhāñChūlēśvarī rakṣētkukṣau rakṣētkulēśvarī
stanau rakṣēnmahādēvī manaḥśōkavināśinī ॥ 26 ॥

சூலேஷ் வரிஎன் விரலின்
சுடரொளி எழிலைக் காக்க
குல ஈஸ்வரிநல மருளி
குறையற வயிறைக் காக்க

மனக்குறை களைபவ ளான
மாதேவி பரம சக்தி
எனக்கருள் தரவே நெஞ்சுள்
எழுந்தருள் தந்தினி தாக்க (26)

hṛdayē lalitā dēvī udarē śūladhāriṇī
nābhau cha kāminī rakṣēdguhyaṃ guhyēśvarī tathā ॥ 27 ॥

ஶ்ரீ லலி தாவென வந்து
சிறந்தென் னிதயமும் காக்க
சூலதா ரணியென உந்திச்
சுடர்வயிற் றிருந்தினி தாக்க

காமினி எனவென் நாபி
கருவள நலநிதி காக்க
ஈஶ்வரீ குஹ்யேஶ் வரியாய்
இனக்குறி நலனைக் காக்க (27)

pūtanā kāmikā mēḍhraṃ gudē mahiṣavāhinī
kaṭyāṃ bhagavatī rakṣējjānunī vindhyavāsinī ॥ 28 ॥

பூவளர் காமினி யாகப்
புருடப் பெண்குறி காக்க
மஹிஷ வாஹினி யாக
மலத்துளை நலனைக் காக்க

அறுகலை பகவதி அம்மா
அடியிணை நலமுறக் காக்க
இருமுனைக் கால்களை விந்ய
வாசினி தேசுறக் காக்க (28)

jaṅghē mahābalā rakṣētsarvakāmapradāyinī
gulphayōrnārasiṃhī cha pādapṛṣṭhē tu taijasī ॥ 29 ॥

தொடைகளை மாபலா காக்க
துணை விநாயகி முழந்தாள்
கடைப்புறம் நலமுறக் காக்க
காற்கணு நரஸிம்ஹீ காக்க

மிதுஜலா பாதமுற் பக்கம்
மெத்தெனச் சத்துறக் காக்கத்
தௌஜலீ யானவள் எந்தன்
தாளினை மேலுறக் காக்க (29)

pādāṅgulīṣu śrī rakṣētpādādhastalavāsinī
nakhān daṃṣṭrakarālī cha kēśāṃśchaivōrdhvakēśinī ॥ 30 ॥

அந்தரி ஶ்ரீ அருள் தந்து
அடிவிர லானவை காக்க
சுந்தரி தம்ஷ்த்ர கரலீ
சுடரடி நகங்களைக் காக்க
உர்த்தவ கேசினித் தாயென்
உருமுடி வளமுறக் காக்க (30)

rōmakūpēṣu kaubērī tvachaṃ vāgīśvarī tathā
raktamajjāvasāmāṃsānyasthimēdāṃsi pārvatī ॥ 31 ॥

தோற்துளை யாவையும் ஒளிரத்
துணைநலம் தரும் கௌமாரீ
வார்த்துடற் தோலினை நாளும்
வாகீஸ் வரியருள் காக்க

இரத்தமும் மஞ்சையும் எலும்பும்
திசுதசை கொழுப்பொடு வடிவும்
சுத்தமும் நலமினி தடைய
சோபனை பார்வதி காக்க (31)

antrāṇi kālarātriścha pittaṃ cha mukuṭēśvarī
padmāvatī padmakōśē kaphē chūḍāmaṇistathā ॥ 32 ॥

(வேறு)
குடலைக் கால ராத்ரீ காக்க
பித்தப் பாதை முத்தேஸ்வரீ காக்க
வாதம் ஈரல் வழிகளை எல்லாம்
பாதக மறபத் மேஸ்வரீ காக்க
சீதளப் பாதை சீருறச் செய்து
சூதகி சூடா மணியருள் காக்க (32)

jvālāmukhī nakhajvālāmabhēdyā sarvasandhiṣu
śukraṃ brahmāṇi! mē rakṣēchChāyāṃ Chatrēśvarī tathā ॥ 33 ॥

ஜ்வாலாமுகீ நக ஜ்வாலையைக் காக்க
அபேதா மூட்டிணைப் பானவை காக்க
சுக்கில சுரோணிதம் தக்குயர் வாக்கி
முக்கிய ப்ரம்மணீ முனிந்தருள் காக்க
சத்ரேஷ்வரீ என் சரிநிழல் காக்க
சமநிலை எனவரம் சமைந்தருள் காக்க (33)

ahaṅkāraṃ manō buddhiṃ rakṣēnmē dharmadhāriṇī
vajrahastā cha mē rakṣētprāṇaṃ kalyāṇaśōbhanā
rasē rūpē cha gandhē cha śabdē sparśē cha yōginī ।
sattvaṃ rajastamaśchaiva rakṣēnnārāyaṇī sadā
āyū rakṣatu vārāhī dharmaṃ rakṣatu vaiṣṇavī ।
prāṇāpānau tathā vyānamudānaṃ cha samānakam ॥ 34 ॥

சித்தம் புத்தி மனம் அகங்காரம்
மொத்தம் அந்தக் கரணமும் காக்க
பத்து விதவளிப் பயனுடல் காக்க
நித்தமும் தர்ம தாரணீ காக்க (34 )

yaśaḥ kīrtiṃ cha lakṣmīṃ cha dhanaṃ vidyāṃ cha chakriṇī
gōtramindrāṇi! mē rakṣētpaśūnmē rakṣa chaṇḍikē ॥ 35 ॥
putrān rakṣēnmahālakṣmīrbhāryāṃ rakṣatu bhairavī
சக்ரிணீ நற்பெயர் மிக்குறக் காக்க

சகத்தினில் புகழிசை தக்குறக் காக்க
நற்குலப் பரம்பரை நலமுறக் காக்க
நாயகி இந்திரா நலமரு ளாக்க
சண்டிகை எந்தன் சந்ததி காக்க
கொண்டுயர் ஆநிரை குலநிதி காக்க (35)

panthānaṃ supathā rakṣēnmārgaṃ kṣēmakarī tathā
rājadvārē mahālakṣmīrvijayā sarvataḥ sthitā ॥ 36 ॥

மக்களை மஹா லக்குமி காக்க
மனைத்துணை பைரவி மகிழ்வுறக் காக்க
ஷேமக்ரீயா யான் செல்வழி காக்க
யாவையும் விஜய லக்குமி காக்க (36)

rakṣāhīnaṃ tu yat-sthānaṃ varjitaṃ kavachēna tu ।
tatsarvaṃ rakṣa mē dēvi! jayantī pāpanāśinī ॥ 37 ॥

யாவும் அளிக்கும் திருவருள் அமுதே
பாவம் அழிக்கும் பரிவருள் ஜயந்தீ
பாடிய கவசப் பாட்டிதில் மறந்த
தாவையும் அளித்து தயையருள் செய்ய

இடம்பொருள் ஏவல் எதுமறந் தாலும்
தடம்பிற ழாதவை தகையக் காட்டிக்
கேளாச் சுகமும் தேனாய்த் தரவும்
மீளாச் சுகமாய் மேவித் தருளி (37)

padamēkaṃ na gachChēttu yadīchChēchChubhamātmanaḥ ।
kavachēnāvṛtō nityaṃ yatra yatraiva gachChati ॥ 38 ॥

தன்னுயர் வடையத் தன்னை அறிந்து
நந்நலம் விழையும் நல்லவர் எவரும்
இன்னருட் கவசம் இதை அணியாமல்
முன்னொரு காலை முனிந்தெடுப் பாரோ! (38)

tatra tatrārthalābhaścha vijayaḥ sārvakāmikaḥ ।
yaṃ yaṃ chintayatē kāmaṃ taṃ taṃ prāpnōti niśchitam ॥ 39 ॥

கவசம் பயில்வார் பலன்

தேவியின் கவசத் திருவணி வார்க்கு
மேவிடம் எல்லாம் மேன்மைக ளாகும்!
ஆவன யாவும் அருள்நல மாகும்!
அறவழி ஆசைகள் வரமென வாகும்! (39)

paramaiśvaryamatulaṃ prāpsyatē bhūtalē pumān ।
nirbhayō jāyatē martyaḥ saṅgrāmēṣvaparājitaḥ ॥ 40 ॥

பூமியில் பேர்புகழ் புதுவளம் சேரும்!
போரெனில் வெற்றிகள் புகழுடன் கூடும்!
சீர்மிகும்! அச்சம் சென்றிடும்! மாறும்!
செல்வமும் நலனும் சேர்ந்து கொண்டாடும்! (40)

trailōkyē tu bhavētpūjyaḥ kavachēnāvṛtaḥ pumān ।
idaṃ tu dēvyāḥ kavachaṃ dēvānāmapi durlabham ॥ 41 ॥

கவர்ந்திக் கவசக் கலையணி வாரே
புவனம் மூன்றிலும் புகழடை வாரே!
தேவியின் கவசத் திருவளம் அடைதல்
பூமியில் அரிதிது புண்ணியர் அமுது! (41)

yaḥ paṭhētprayatō nityaṃ trisandhyaṃ śraddhayānvitaḥ ।
daivīkalā bhavēttasya trailōkyēṣvaparājitaḥ । 42 ॥

நித்தியம் மும்முறை நியமம் விடாது
இத்தல வெளியிவ் வெழிலணி வாரே
மெத்தகு புண்ணியர் மேன்மையி லவரை
மொத்த முவ்வுலகும் முன்தொழு திடுமே!
வான்நிதிகிட்டும்! வளமையும் கொட்டும்!
(தேன்புகழ் எட்டுத் திசைபறை கொட்டும்!) (42)

jīvēdvarṣaśataṃ sāgramapamṛtyuvivarjitaḥ ।
naśyanti vyādhayaḥ sarvē lūtāvisphōṭakādayaḥ ॥ 43 ॥

நூற்றி இருபது நூற்றவர் வாழ்வார்!
நோய் நொடி ஏதற ஆற்றலுள் ளாராய்
சேற்றிடு கிருமிகள் செய்வினைத் தாக்கம்
ஆற்றி அழித்து அருநலம் காண்பார்! (43)

sthāvaraṃ jaṅgamaṃ chaiva kṛtrimaṃ chaiva yadviṣam ।
abhichārāṇi sarvāṇi mantrayantrāṇi bhūtalē ॥ 44 ॥

மாசும் தூசும் மருளிடும் கிருமிகள்
பூசும் விடத்தால் பொதியும் துயரும்
நாசமும் கேடும் நலிவுறத் தீயோர்
ஏசி விடுத்த ஏவலும் இடரும்

தந்திர யந்திரத் தடையென எதுவும்
வந்தினும் வதங்கும் வலிவற் றோடும்!
கேடெதும் இன்றிக் கேளா தோடும்!
பீடுடன் நல்வழிப் பேறாய் மாறும்! (44)

bhūcharāḥ khēcharāśchaiva julajāśchōpadēśikāḥ ।
sahajā kulajā mālā ḍākinī śākinī tathā ॥ 45 ॥

நீர்நிலம் வான்வெளி நிலவிட ஓடும்
தேவதை யாய்ச்சில துயரிடும் மாயை
பூர்வ பரம்பரை யோர்சிலர் ஆவி
போற்பல தாகிணீ சாகிணீ ஆகி

தாக்கவந் தாலவை தானே அடங்கிப்
போக்கில தாயவை போய்விட லாகும்!
காத்திடும் தேவியின் கவசம் அணிந்து
பூத்திடு வோர்க்கது பொழுதும் மருந்து! (45)

antarikṣacharā ghōrā ḍākinyaścha mahābalāḥ ।
grahabhūtapiśāchāścha yakṣagandharvarākṣasāḥ ॥ 46 ॥

brahmarākṣasavētālāḥ kūṣmāṇḍā bhairavādayaḥ ।
naśyanti darśanāttasya kavachē hṛdi saṃsthitē ॥ 47 ॥

இருள்வெளி உலவிடும் கருஞ்சக் திகளும்
மருள்தரும் பிரம்ம ராட்சஸர் வடிவும்
பேயுடன் பூதமும் பெருவாய் கொள்ளி
வாயுடன் பிசாச வகையவ் வாறும்
தேவியின் கவசத் திருவொளி பணியும்!
ஏவியர் இடமே எழுந்திட முனியும்! (46 -47)

mānōnnatirbhavēdrājñastējōvṛddhikaraṃ param ।
yaśasā vardhatē sō’pi kīrtimaṇḍitabhūtalē ॥ 48 ॥

சாதகர் அரசின் சாதகம் அடைவார்!
சாத்திர ஞான சம்போதமும் பெறுவார்!
பூதலம் எங்கிலும் புகழுரு அடைவார்!
(ஆதவன் எனவொளி ஆகியும் விடுவார்!) (48)

japētsaptaśatīṃ chaṇḍīṃ kṛtvā tu kavachaṃ purā ।
yāvadbhūmaṇḍalaṃ dhattē saśailavanakānanam ॥ 49 ॥

சப்தஷதி எனும் சதுர்மறை அறிவை
நித்தம் பயிலும் நியமம் இருக்கக்
கவசம் இதனைக் கருத்தில் ஒன்றி
எவர் படிப்பாரோ அவர்க்கிது பயனே!

வாரிசு வழிமுறை வளம்நலம் மிகுந்து
ஆயுசு நிறைந்து அவரிங் கிருந்து
மலையும் வனமும் மரமும் போல
நிலையுற வாழ்ந்து நிறைவடை வாரே! (49)

tāvattiṣṭhati mēdinyāṃ santatiḥ putrapautrikī ।
dēhāntē paramaṃ sthānaṃ yatsurairapi durlabham ॥
prāpnōti puruṣō nityaṃ mahāmāyāprasādataḥ ।
labhatē paramaṃ rūpaṃ śivēna saha mōdatē ॥ 50 ॥

ஒப்பற விளங்கும் ஒளிமணி மாயை
அற்புத விளக்கு அருட்சுடர் தீபம்
தந்திடும் ஒளியில் தவநிலை உடையார்
அந்தமி லாத அருநிலை அடைவார்!

தேவரும் வான்வெளித் தெய்வங்கள் அடையா
மேவகை ஞானம் மெய்யறி வடைவார்!
சீரடைவார்! உடற் சேறு விடுத்துப்
பேரடை வார்சிவப் பேறடை வாரே! (50)

இப்படி வராஹ புராணத்தில் ஶ்ரீதேவி கவசம் நிறைவு
(தமிழில் மீ. ராஜகோபாலன், 5-8-2022)

Related Posts

Share this Post