|| ஸ்ரீ விநாயகர் துணை ||

Sri Vinayaka

க₃ஜானனம் பூ₄தக₃ணாதி₃ ஸேவிதம்
கபித்த₂ ஜம்பூ₃ ப₂லசாருப₄க்ஷனம் |
உமாஸுதம் ஶோகவினாஶ காரகம்
நமாமி விக்₄னேஶ்வர பாத₃பங்கஜம் ||
ஆனை முகனை அருவடியார் பணிகோனை
நாவற் கனியடவி நற்கனியா லினியோனை
ஊனத் தழிவை உமையாள் தனயோனை
ஈனத் துயரை இலாதாக்குந் தூயோனை
ஞானத் தருவை நற்றாள் தாமரையை
நானத் திருவை நயந்தே பணிவேனே!

பொருள்:

யானை முகமும் (க₃ஜானனம்), பூதங்கள் முதலான அடியார்களால் (பூ₄தக₃ணாதி₃) வணங்கப்படுபவனும் (ஸேவிதம்), நாவற்கனி முதலான வனப் பழங்களைச் (கபித்த₂ ஜம்பூ₃ ப₂ல) சுகமாய்ப் (சாரு) புசிப்பவனும் (ப₄க்ஷனம்), உமையின் புதல்வனும் (உமாஸுதம்), (ஊனப் பிறவியைக் கொடுக்கின்ற) எல்லாத் துயரங்களையும் (ஶோக) அழிப்பதற்கு (வினாஶ) (ஞானமாகிய வளர்ச்சி என்னும்) காரணமானவனும் (காரகம்), இன்னல் நீக்கும் இறையவனும் (விக்₄னேஶ்வர) ஆகிய விநாயகப் பெருமானின் திருவடித் தாமரைகளில் (நான்) (பாத₃பங்கஜம்) பணிகின்றேன் (நமாமி).

குறிப்பு:

ஊனப் பிறவித் துயரமே பெரிய துன்பம் என்பதால், ஶோக வினாஶ: என்பதற்கு ஊனமாகிய பிறவியின் அழிவினைத் தருபவர் எனும் பொருளில் “ஊனத்தழிவே” என்ற புகழ்ச் சொல்லும், பிறவித்துயரை அறுப்பதற்கு ஞானமாகிய பயிரே வளர வேண்டும் என்பதால், ஊனப் பிறவியை அழிக்கின்ற ஞானத்தருவாக நம்முள் விளைகின்ற அருள் எனும் பொருளில், “ஞானத் தருவே” எனும் புகழ்ச் சொல்லும் தமிழ் வார்ப்பில் சேர்க்கப்பட்டன

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*