Sivapuranam by Manickavasagar (91-95)

91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 92. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 94. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 95. பல்லோரும் ஏத்தப் பணிந்து. ‘ஓ, துன்பங்களை அறுப்பவனே’ என்றெல்லாம் சொற்களால் சொல்லி விளக்க முடியாதவனை (சொல்லற்கு அரியானை), சொல்லினால் சுட்டிக் காட்டி (சொல்லி),  இறைவனின் திருவடிகளில் பணிந்து (திருவடிக் கீழ்), இங்கே சொல்லிய  சிவபுராணம் எனும் திருவாசகப் பாடலின் பொருளை (சொல்லிய பாட்டின் பொருளை), ஏற்ற வகையில் சரியாக உணர்ந்து  (உணர்ந்து) சொல்லுகின்ற மெய்யடியார்கள் (சொல்லுவார்), உண்மையின் (சிவபுரத்தின்)  மையத்தில் எப்பொழுதும் உள்ளவரான (உள்ளார்)

Read More

Sivapuranam by Manickavasagar (84-88)

84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப 85. ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 86. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் தந்நிலை அறியும் இறையுணர்வு, உள்ளே வெள்ளமாய் சுகம் தந்து கொண்டிருக்கையில்,  வேறுபாடுகளையும் மாற்றங்களையும் (வேற்று விகார) கொள்வதான,  நஞ்சாகிய உடலினுள் கிடந்து (விடக்குடம்பின் உள் கிடப்ப), யான் தவித்திட வேண்டுமோ?   முடியாது  (ஆற்றேன்). மாணிக்கவாசகர் காட்டும் இந்நிலை, வைராக்கியம் எனும் பற்றின்மையில் முற்றியநிலை. முதலில் உலகப் பொருட்களில், உலக விவாகரங்களில் பற்றின்மையை வளர்த்து வந்த பெரியோர்கள்,  இறையுணர்வினைப் பெற்ற கணமே,   இதுவரை கருவிகளாக உதவிய தமது உடல், புலன், மனம், புத்தி

Read More

Sivapuranam by Manickavasagar

Sivapuranam by Manickavasagar

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் – பொருள் விளக்கம்.