ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் துதி

ஓம் குருப்யோ நம:

ஜய ஜய சங்கர – ஹர ஹர சங்கர
மாமறை முடிவைக் காட்டி – மறைமுடி மகுடமும் சூட்டித்
தூமறை விளக்க விதானத் – தூரிகை யாலுரை தீட்டிப்
பாமரன் முதல்வே தியரின் – பவபயத் துயரிருள் ஓட்டித்
தாமரைக் காலடி பூத்த – தயையருட் குருவே போற்றி!

முரண்படு வாருரை மாற்றி – முறையளித் திட்டாய் போற்றி!
முக்தியின் பாதை காட்டும் – முதல்வனே போற்றி! போற்றி!
பிறழ்படு வாரிடர் மாற்றிப் – பேரருள் இட்டாய் போற்றி!
பிரிவினை வாதம் ஓட்டும் – பெரியனே போற்றி! போற்றி!

கவியரி மாவென நூல்கள் – கனிவுறப் பெய்தாய் போற்றி1
கயிலையின் சிவனவ தாரக் – கருணையே போற்றி! போற்றி!
புவிதனில் வேதமெஞ் ஞானம் – பொலிவுறச் செய்தாய் போற்றி!
பொன்மழை அருளிச் செய்த – பூரணா! போற்றி! போற்றி!

நாடெலாம் நடந்து ஞானம் – நாட்டிய குருவே போற்றி!
நலிவிருள் களைந்த ஜோதி! – நாதனே போற்றி! போற்றி!
பீடுடை ஞான பீடப் – பேரருட் தருவே போற்றி
பெரியனே! ஜயஜய சங்கர – பீடமே! போற்றி! போற்றி!

பரசிவத் திருஅவ தாரா! – பகுத்தறி வாளா! போற்றி!
பழுமறை தரும் பாடத்தைப் – பகிர்வனே போற்றி போற்றி!
நிரவிய அத்துவி தத்தை – நிறுவிடும் குருவே! போற்றி!
நித்திய சத்சுக ஞான – நேரியா! போற்றி! போற்றி!
மீ. ரா
26-2023

Related Posts

Share this Post