ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் சேவடி போற்றி!
ஓம் குருப்யோ நம:
வரமருள் வழூரின் சித்தா போற்றி!
வடிவுமை எழிலருட் பித்தா போற்றி!
நரமுனி தயாள புத்தா போற்றி!
நலமருள் விழிமலர் முத்தா போற்றி!
சேஷாத் திரிகுரு சேவடி போற்றி!
ஜய ஜய சத்குரு சீரடி போற்றி!
மறைசிவ குமரனைக் கற்றாய் போற்றி!
மஹரிஷி ரமணரைப் பெற்றாய் போற்றி!
இறையுமை யாய்வடி வுற்றாய் போற்றி!
இஹபர சுகந்தரும் நற்றாய் போற்றி!
சேஷாத் திரிகுரு சேவடி போற்றி!
ஜய ஜய சத்குரு சீரடி போற்றி!
பொற்கை படவளம் பொழிவாய் போற்றி!
பொற்பதம் படவருள் மிகுவாய் போற்றி!
அற்புதச் சித்திகள் அருள்வாய் போற்றி!
அண்ணா மலைவலம் வருவாய் போற்றி!
சேஷாத் திரிகுரு சேவடி போற்றி!
ஜய ஜய சத்குரு சீரடி போற்றி!
ஸ்வஸ்திக ஆசனச் சுடரே போற்றி!
ஸ்வதந்திர மாகிய கலையே போற்றி!
சாஸ்திர சாதனத் தடமே போற்றி!
சத்குரு சேஷாத் திரியார் போற்றி!
சேஷாத் திரிகுரு சேவடி போற்றி!
ஜய ஜய சத்குரு சீரடி போற்றி!
மீ. ரா
9-2-2023