74 – மனப்பேழை வனப்பேற மாற்றுவான் அடி போற்றி!

आशापाशक्लेशदुर्वासनादि-
भेदोद्युक्तैर्दिव्यगन्धैरमन्दैः |
आशाशाटीकस्य पादारविन्दं
चेतःपेटीं वासितां मे तनोतु ||७४ ||
ஆஸா₂பாஸ₂க்லேஸ₂து₃ர்வாஸனாதி₃-
பே₄தோ₃த்₃யுக்தைர்தி₃வ்யக₃ந்தை₄ரமந்தை₃: |
ஆஸா₂ஸா₂டீகஸ்ய பாதா₃ரவிந்த₃ம்
சேத:பேடீம் வாஸிதாம் மே தனோது || 74 ||

ஆசை, பற்று, குழப்பம் ஆகிய தீய வாசனைகளால் (தீய நினைவுப் பதிவங்களால்) விளங்கும் எனது சிந்தையாகிய பேழையில், அத் தீய வாசனைகளை நீக்குகின்ற நிறைவான தெய்வ வாசனைகளாக (தூய நினைவுப் பதிவங்கள்), திசைகளை உடையாகத் தரித்த பரசிவனின் பாத மலர்களை நிறைத்து, நல்ல மணமுடையதாக மாற்றட்டும்.

குறிப்பு:
தர்மப்படி வாழ்ந்தாலும், ஆசை, பற்று, குழப்பம் ஆகிய குணக் குறைகள் நம்மைத் துயரில் ஆழ்த்தி விடும். சித்த சுத்தி எனும் தெளிய மனமும், திட புத்தி எனும் உறுதியான அறிவும் இருந்தால்தான், இத்தகைய இடையூறுகளைத் தவிர்க்க முடியும். அதற்கான வழிதான் முறையே கர்ம யோகம், மற்றும் பக்தி யோகம் என்பன. இவை இரண்டுக்கும் அடிப்படை, சிந்தனையில் எப்போதும் இறைவனை மட்டுமே இருத்தி, எல்லாச் செயல்களையும் இறைவனுக்காகச் செய்வதாக வாழ்தல் ஆகும். அதனையே இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.

இப்பாடலில், ‘ஆசா சாடீகஸ்ய’ – என்பதைத் திசைகளை உடையாகப் பூசிக்கொண்டவன் எனவும், ‘துர்வாஸனாதி பேத உத்யுக்தை:’ என்பதற்கு ‘நீச நினைவே அகல, அறியாமையால் சூடும் வேடங்கள் அகல, எப்பொழுதும் சிவா, சிவா எனும் வாசனையால் இருக்கும்’ முயற்சி எனவும், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. (74)

73 – மதி விதையப் பதியநில மானசிவன் அடி போற்றி!

75 – புரவிமனம் ஓட்டிப் புகல்தருவான் அடி போற்றி!

Share this Post

Related Posts