99 – ஓரளவும் கண்டறியா ஒப்பிலான் அடி போற்றி!

इदं ते युक्तं वा परमशिव कारुण्यजलधे
गतौ तिर्यग्रूपं तव पदशिरोदर्शनधिया |
हरिब्रह्माणौ तौ दिवि भुवि चरन्तौ श्रमयुतौ
कथं शंभो स्वामिन् कथय मम वेद्योऽसि पुरतः ||९९ ||
இத₃ம் தே யுக்தம் வா பரமஶிவ காருண்யஜலதே₄
க₃தௌ திர்யக்₃ரூபம் தவ பத₃ஶிரோத₃ர்ஶனதி₄யா |
ஹரிப்₃ரஹ்மாணௌ தௌ தி₃வி பு₄வி சரந்தௌ ஶ்ரமயுதௌ
கத₂ம் ஶம்போ₄ ஸ்வாமின் கத₂ய மம வேத்₃யோ(அ)ஸி புரத:||99||
அடியும் முடியாத முடியும் அளவாக
அரியும் அயனாரும் – வெகுதூரம்
அலையும் உருவாகி நிலமும் நெடுவானம்
உலவி அயர்வாக – வெகுகாலம்
விடியும் ஒளியாக விரையும் பொருளாக
விரியும் அருளாக – சிவனேமுன்
விளையும் பொருளான கருணைக் கடலேயிவ்
விவரம் சரிதானோ – விமலோனே
(99)

கருணைக் கடலான பரம்பொருளே, உமது அடியையும், முடியையும் அளக்க, அரியும் அயனும் உருவங்கள் எடுத்து, வானிலும், மண்ணிலும் வெகு தூரமும், காலமும் அலைந்து களைத்தனர். இறைவா, என் முன்னே வெகு எளிதில் எப்படிக் கண்டு களிக்கத் தக்கவராக எழுந்தருளினீர்கள்! இந்த உத்தி சரிதானா? (விந்தைதான்!)

98 – கவிதைஇளங் கன்னியெனக் கலந்தோன் அடி போற்றி!

100 – தெய்வத்துள் தெய்வத் திருவே அடி போற்றி!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*