ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் துதிபொன்னார் திருமேனி -அருள்
பொலியும் குருவடிவம்!
மின்னார் விழிப்பூக்கள் – ஓளி
மிளிரும் திருவுருவம்!

என்னே அருள்நோக்கு! – எதிர்
எழிலாய் அமர்தலைவன்!
முன்னே பரமகுரு! – நமை
முற்றும் கவர்ந்தசிவன்!

காஞ்சிப் பெரியவராய் – வழி
காட்டும் நிறையுருவாய்
வாஞ்சி யமுதமழை – தர
வந்தப் புனல்முகிலாய்

சற்றே முகம்சாய்த்தாய் – அதன்
சக்தியினால் பூத்தோம்!
அற்றே இனிக்காய்த்து – கனி
ஆகிக் களிப்போமே!

நற்றே னேகுருவே – இது
நந்நாளே! சிவனே!
பெற்றோமே உனையே – எம்
பெரியோனே! சரணம்!

 

Related Posts

Share this Post