ஸ்வாமிசரணம்ஐயப்பசரணம் – ஸ்வாமியேசரணம்

ஸ்ரீ ஐயப்பன் திருவெம்பாவை

(1)
மாலரன் மைந்தனை மன்னுயிர்க் கைந்தொழிற்
கோலனை நாம்தொழக் கூப்பிடும் வைகறைக்
காலமிப் போதினுள் கண்மலர் பூட்டினை
பாழுமித் தீத்துயிற் பட்டனை தோழீநீ
நீலநற் கண்டனின் நீளர வந்துயிற்
சீலமுட் கொண்டிடும் செல்வனைக் கண்டருட்
காலடி சேராயோ கண்ணுறப் பாராயோ
ஆளுநல் லின்பம் அடையேலோ ரெம்பாவாய்!

(2)
கல்லும் கனிந்தனவாய்க் கள்ளமிலா தன்பரருட்
சொல்லும் சரணமொழிச் சோர்வுமழிப் பாமாலை
நல்லாய் நினதுள்ளம் நன்றறியக் கேட்டிலையோ
உள்ளான் சபரிகிரி உற்றகதிர் பெற்றுயர
பொல்லாத் துயிற்மாயப் போர்வை களையாயோ
வல்லான் வகுத்தநல் வாழ்வை விழையாயோ
பிள்ளாய் மனமிளகிப் பெய்யுமணி கண்டனடி
சொல்வாய் சரணவொலிச் சொல்லேலோர் எம்பாவாய்!

(3)
வாக்கும் மனமும்மெய் வல்லமையிற் செய்கருமம்
ஆக்கும் செயலும்நன் றாகுமெனக் கேட்பீரே!
கேட்கும் நமதாசைச் கேள்விக்கு நல்விடையாய்
நோற்கும் அடியாரின் நுண்ணுணர்வுத் தன்மயமாய்க்
காக்கும் குருவாகிக் கண்மலரும் பொன்மணியை
யார்க்கும் துணையான அய்யன்ஐ யப்பனருள்
சேர்க்கும் இதுநேரம்! செய்வீரோ நன்றாவார்
நூற்கும் துதிமாலை நூலேலோர் எம்பாவாய்!

(4)
கண்ணிற் பெருவுறக்கம் இன்னும் கலைந்திலையோ
முன்னிற் பழவினைகள் முற்றும் கரைந்திலையோ
மண்ணிற் பிறந்து மடிவதோ நம்வாழ்வு!
எண்ணித் துடித்தெழுவீர்! எத்தனை இப்போது!
அண்ணல் திருவினுலா! அற்புதப் பைம்பூதபதி!
கன்னல் கருணைநிலா கற்பகப் பொற்பதங்காண்
சென்னி யடிமலர்த்திச் சித்சுகத்தைக் காணாயோ!
புண்ணி யரெனுமினிப் போதேலோர் எம்பாவாய்!

(5)
தேவாய்த் திரளாய்த் திருப்பேர் அருள்நாதன்
கோவாய் அனந்தன் குருபரன் ஐயப்பன்
நாவாய் நமக்கே நமனார்ப் பிறவாழிக்
காவாய் கடக்கும் கதியெனக் காணாயோ!
பாவாய் வெளியிற் பலர்பால் அமுதமொழி
நாவாய்த் துதிமாலை நன்று தொடுக்கின்றார்!
நோவாய்த் துயின்று நொடியால் மெலிகின்றாய்
மேவாய் சுரம்பாடல் மேலேலோர் எம்பாவாய்!

(6)
வேடனாய் முன்வந்தான்! வெம்புலிப் பாலுகந்து
காடதாய்ச் சென்றான்! கடுவனம் ஆட்கொண்டான்!
தேடியேன் சென்றான் தெரியானோ நம்மனந்தான்
மூடமாய் வெம்புலியாய் முட்புதர்த் தீகுணமாய்
வாடலாய் இம்மை வனமாய்க் கிடக்குதென்று
சீடராய்ச் செல்வோம்! செபத்தமிழ்ப் பூமாலை
பாடலாய்ச் செய்வோம்! பரிவாய் அருளாவார்!
கூடவா ரின்பமினிக் கொள்ளேலோ ரெம்பாவாய்!

(7)
வான்வெளி உள்வளி வல்வளி உள்ளொளி
காணொளி உள்துளித் தண்ணீர்ப் பெருவழி
நீர்வெளி உட்புலம் நின்றுரை மட்களம்
பேரொலி தந்தருள் பெய்மறைத் தத்துவம்
தானொளி தர்மந் தரும்நிதி அன்பினில்
ஊனொளி ஆர்ந்து உணர்வொளி சார்ந்திட
நானொளிந் துய்யா நலமிடக் காட்டிடும்
நாளொலி செய்வீர்! நலமேலோர் எம்பாவாய்!

(8)
பொன்னம் பலமமரும் பூரணனைக் காந்தமலை
மின்னற் சுடரருளும் மாமணியை ஆகமங்கள்
முன்னற் கடந்தமறை மூலவனைத் தேர்ந்தகலை
வண்ணத் திலகமயில் வாகனின் சோதரனை
எண்ணத் தெளியாயோ இன்னல் களையாயோ
கன்னற் தமிழ்மாலை கண்ணிற் புனையாயோ
அண்ணல் சபரிகிரி அத்தனருள் ஐயப்பன்
சொன்ன மொழிகேட்டீர்! சொல்லேலோர் எம்பாவாய்!

(9)
பொங்குமருட் பாற்கடையப் பொற்சீர் அமுதத்துச்
செங்கணவன் கூடச் சிவநேயம் சேரத்தான்
எங்குமறம் நாட்டி எமக்காய்ச் திருச்சாத்தான்
இங்குவரம் தந்தான்! இனியார்க் கருள்கின்றான்!
பங்கயமே காண்பாய் பனிமார் கழிகாலை
அங்கமகம் தோய்ந்து அடியார் பலரிறைந்து
சங்கமித் துள்ளார் சரணமணி ஐயப்பன்
எங்குமொலித் தின்பம் எழுப்பேலோ ரெம்பாவாய்!

(10)
ஓருருவாய் ஆலரனும் மால்மயனும் சேரருளாய்க்
காரிருளாய் ஆகுமிடர்க் காலமெழுந் தீங்கதிரே
பேரழகாய் ஆனமணிப் பெட்டகமே கத்தவிழும்
சீரருளாய் ஆகமறைச் செய்பயனே தத்துவமே
மாறொருகால் ஆடுமிறை மைந்தாயென் மாதவமே
நேருருகால் காட்டியருள் நித்திலமே அய்யப்பா
வாருமிவண் தேன்மொழியார் வாழ்த்துமொலி கேட்டின்று
பேறுறுவோம் என்றுள்ளம் பெய்யேலோர் எம்பவாய்!

(11)
நேர்த்த நியமம் நிதமிதவாய் ஈர்த்தாளும்
சாத்தன் சபரீசன் சாந்தனருள் நந்நீலம்
போர்த்த புரவி பொலிவன் புலிமேற்காண்
ஆர்த்த அரசன் அரியரன் செல்வமகன்
பார்த்த உடனுள்ளே பாவிக்கும் நல்விளக்கு
காத்த பெருமான் கலியுகத் தெய்வநிதி
வார்த்த மொழிகேட்டும்் வாராயோ எந்தோழி!
சேர்த்த பொருளென்ன சேரேலோர் எம்பாவாய்!

(12)
வைகறை யானது! வாய்மொழிந் தோதுவர்
மெய்மறை யாளரும் மேவினர் பாடினர்!
பெய்பனிச் சாரலிற் பேசினப் புள்ளினம்!
நெய்தவிழ்ப் பூமலர் நேர்த்தன சோலைகள்!
அய்யனைப் பார்த்திடும் ஆன்மனுக்் கோதனுள்
மெய்யுரச் சேர்த்திடும் மேலருட் போதிது!
பொய்யுரைத் தாய்துயிற் போய்ப் படுத்தாயே!
கைவிடக் கேடதைக் காணேலோர் எம்பாவாய்!

(13)
எல்லாம் அறிந்தாற்போல் என்னிடம் ஏன்சொன்னாய்?
நல்லாய் தினமினிமேல் நன்நெறியால் முன்னெழுந்து
உள்ளான் மறைமுதற்கு முன்னிருக்கும் தன்னுணர்வைச்
செல்லாச் சுகமறிவுச் சீதனத்தைச் சாத்தமுதைப்
பொல்லாப் பிறவியினூழ்ப் போக்கும் பெருமருந்தை
வல்லான் சபரிமலை வாழ்த்தும் திருவிருந்தை
நில்லாய் உடனருகில் நிற்பேன் எனவுரைத்து
கல்லாய்த் துயில்கின்றாய் காணேலோர் எம்பாவாய்!

(14)
பற்றுஅரவு கொத்திப் பலநாள் நிலமுழன்று
சுற்றுறவு செல்வச் சுகமாய்ப் பலமுயன்று
உற்றவையும் பார்த்தாய் உதவா தவைநிலையா
அற்றகலும் என்றால் அதிலேது ஆனந்தம்?
கற்றறிவாய் நின்னுள் கலந்தொளிரும் ஜோதியினை
சற்றுணரின் இன்பம் சபரிமலைப் போதனறி!
மற்றரெலாம் இங்கவர்க்கு மாலை அணிகின்றார்!
நற்றாய் நமதய்யன் நாடேலோர் எம்பாவாய்!

(15)
முனித்தவரும் வானவரும் முன்தொழுவர் சித்தம்
இனித்தருளும் ஞானவரம் தந்துதவக் கேட்பர்!
பிணித்தவினைக் கோளகலப் பெம்மானே பாதை!
சனிப்பெருமன் அந்தகனின் சத்குருயென் நாதன்!
கனித்தருளும் அய்யனருட் காலில்நீ ஏகின்
பனித்திவலை போலுனது பாவமினிப் போகும் !
தனித்தவனை மாலனருட் பாலகனைப் பாராய்!
இனித்தவளே பூரணனை இன்றேலோர் எம்பாவாய்!

(16)
பதியெனவே பத்தெட்டுப் பூம்படியின் ராஜன்
கதியெனவே கைதொழுவார் கல்வினையும் போகும்!
விதியென்ன செய்துவிடும் வெம்புலியில் காணும்
கதிரண்ணல் பெய்தருளும் காட்சியுரு வாகும்!
நிதியெனவே நித்திலப்பூ நெய்தமணித் தாளில்
பதியநலம் பெற்றுயரும் பண்புமுரு வாகும்!
மதியணிவன் மைந்தனருள் மாமணியைக் காண
வதியுதுயில் விட்டுவுயர் வாயேலோர் எம்பாவாய்!

(17)
காணவில்லை என்பதனால் காக்குமிறை ஏதென்றோ
ஊனுடலும் உட்புலனும் உள்ளறிவும் வாதன்றோ!
வானவெளி சென்றாலும் வாக்குமிழந் தோமன்றோ!
ஏனவைகள் யாதுமெவர்க் கென்றவினா சூக்குமமாய்த்
தானுணரத் தந்தவழித் தத்துவங்கள் கேட்குதன்றோ!
வீணறிவால் என்னபயன் வெற்றியுறப் பொன்னடியிற்
கோனவனை அய்யன் குருவடியைச் சேர்வதனால்
ஞானவுணர் வொன்றியினி நாடேலோர் எம்பாவாய்!

(18)
பூசனை செய்யேன்! பொருளறியேன் வேதனெறி
பேசுவர் அண்மை பெயருக்கும் யானிலேன்!
வாசனை யோநினது வல்லமை யோயறியேன்!
ஊசியை ஈர்த்து உயிர்ப்பித்த காந்தம்போல்
நேசனாய்ச் செய்தாய்! நெடுகாலம் ஏதோயான்
தாசனாய் நின்பாதம் தங்கினாற் போலாகி
ஈசனே என்னாசான் இன்பப் பெருவெள்ளம்
பூசினாய்! என்னாசைப் பொன்னேலோ ரெம்பாவாய்!

(19)
மூன்று குணமாகி முன்வினைப் பூடாகித்
தூண்டும் அடவான துன்பமுட் காடாகித்
தோன்றி மறையும் துயரப் பிறவாழி
தாண்டும் படகாகி தந்தருட் தீயாகி
வேண்டும் வரமாகி விந்தைப் பரிசாகி
தூண்டும் உணர்வாகித் துல்லிய மாய்க்கருணை
ஆண்டும் அருட்போதன் அய்யன் மலைநாதன்
வேண்டும் துணையாய் விளம்பேலோ ரெம்பாவாய்!

(20)
பாராய் பெருநாதன் பம்பை நதிதீரன்
தீராத நோய்களையும் தீர்க்கும் உபகாரன்
நாரா யணன்பிள்ளை நல்லார் சிவபாலன்
மாறா மறையுள் மறையா வுருவானன்
நேராய் அமர்ந்து நிறைவாய் எதிர்பார்த்துச்
சீராய்த் தெரியுமருட் செல்வன் அடிசாய்ந்து
கூறாய் சரணம் குருவே சரணமென
வாராயோ தோழீ! வளமேலோர் எம்பாவாய்!

(21)
பெற்று விடத்தான் பெறாதன பெற்றுழன்று
சுற்றுப் புறத்தான் சுகந்தான் எனநினைந்து
முற்றும் நிறைவை முழுதுணர மாட்டாமல்
அற்றுப் பிரளும் அறிவின்மை யோவாழ்வு!
கற்றும் பயனேது கண்டுணர வேண்டாமோ
உற்றறி வாயுந்தன் உள்ளத்துள் நல்லொளியாய்ச்
சற்றும் விலகாத சாட்சிநம் அய்யப்பன்
பற்றிடு வாயவரைப் பாடேலோர் எம்பாவாய்!

(22)
நல்லுடலும் நாளும் நலியாப் புலனறிவும்
சொல்லும் நயந்துள்ளஞ் சோர்வுறாத் தெள்ளறிவும்
அல்லும் பகலும்நல் லன்புளார் நல்லுறவும்
செல்வப் பெருஞ்சீரும் செய்தருளும் கற்பகமே|
வல்லவனே நற்சோதி வண்ணனே அய்யப்பா!
கள்ளத் துயில்மாயை கண்மயக்கம் இல்லாமல்
உள்ளதெல்லாம் காட்டு ! உனதருளை யாம்பாடி
வெல்லும் வரமென்றே வேண்டுவீர் எம்பாவாய்!

(23)
கீழைக் கதிர்பாயக் கீற்றுமதி நாணுமதி
காலைச் சுகவேளை காக்கும் எரிமேலி
வேளை சிவபாலன் வேந்தன் நமதண்ணல்
ஏழைக் கிரங்கும் எனதப்பன் அய்யப்பன்
தாளைப் பணிவார் தனையுணர் வாருண்ட
ஊழைக் களைவார்! உயர்வார் திருநாமம்
மாலை தொடுப்பார்! மகிழ்வார் நலமாவார்!
நாளை எனாதின்றே நன்றேலோர் எம்பாவாய்!

(24)
அன்புருவே! கோவே! அருள்மணி கண்டமுதே!
இன்புறுவோ ரென்றடியார் ஈர்க்குந் திருவடிவே!
முன்பறியாச் செய்கருமம் மோய்க்கும் பெருவாளே!
நின்றழகாய் நன்றருள நேர்ந்த திருவேளே!
என்புருகப் பாடிமனம் ஏற்ற நலப்பொருளே!
ஒன்பதிரு வார்ப்படிகள் ஓங்கும் வளர்தருவே!
துன்பமறு! சீர்சபரித் தூமணியே பேரமுதே!
கண்புலர் வாயின்பம் காணேலோர் எம்பாவாய்!

(25)
மந்திரம் என்றுநீ! மாமறை உட்பொருள்
தந்திரம் என்றுநீ! தாயெனக் காத்திட
வந்திரங் கின்றுநீ! வாவெனப் பார்த்திட
யந்திரம் என்றுநீ யாவிலும் பூத்தனை!
இந்திரன் நின்னடி ஏற்றுவன் சாத்தனுன்
கண்திறந் தென்னைநீ காத்திடக் கேட்டிடும்
சிந்தனை தந்தருள் சீர்மலி என்றுனை
வந்தனை செய்யும் வரமேலோ ரெம்பாவாய்!

(26)
நற்றா யுருவே நமனார்க் கருள்குருவே!
பொற்றாள் தரும்பரி பூரண நற்சுகமே!
அற்றாயோ என்ன அடியார்க் கருள்நேரம்
பற்றாதோ நின்புகழைப் பாடுமடி யார்பாடல்!
கற்றேன்நீ அன்புமழை! காருண்யப் பால்நிலவு!
உற்றபசி என்றாலங் கோடிவரும் நல்லுணவு!
சற்றேனோ என்னையும் சாஸ்தா மறந்தீரோ!
பற்றவிழேன் நின்னைப் படர்ந்தேலோர் எம்பாவாய்!

(27)
எத்தனை புண்ணியம் செய்திருந்தால் இன்றெனக்கு
அத்தனை அண்ணல் அருட்திரள் ஐயப்பனைச்
சித்தம் இருத்திச் செயுமுடற் சொல்மனத்தால்
அத்தா யெனப்பா அருட்பரஞ் சோதிஎன்றே
தித்திக்கப் பாடித் தினமுனைச் சேவிக்கும்
பத்திக்கு யானும்நின் பார்வை பெறுவேனோ
வித்தாய் விழுந்துவிளை வேரான தத்துவத்தை
முத்தாய்க் குளித்து முயலேலோர் எம்பாவாய்!

(28)
ஏழை யிவன்செய் பெரும்பேறு ஏதோயிப்
பேழை நிரம்பப் பெருந்தமிழ்ச் செம்பூக்குள்
மாலை தொடுத்தாய்! மறைந்திருந் தாயென்னுள்!
ஓலை கொடுத்தாய்! ஒருதுயர் இல்லாதினியென்
வேலை எனவுனது வேதம் உரைத்தலெனச்
சோலை அமர்த்திச் சுகமருள் வீசவைத்துப்
பாலைக் கொடுத்துப் பசிநீத்தீர் எம்ஐயா!
காலைப் பிடித்ததைக் காணேலோர் எம்பாவாய்!

(29)
அத்துவிதச் சித்சுகமே அய்யா அடிபோற்றி!
சுத்தமறைத் தத்துவமே அய்யா அடிபோற்றி!
பித்தனருள் ரத்தினமே அய்யா அடிபோற்றி!
சித்தர்பதி னெட்டுடனே அய்யா அடிபோற்றி!
நித்திலமே நற்பொருளே அய்யா அடிபோற்றி!
தத்துகடற் தண்ணமுதே அய்யா அடிபோற்றி!
பத்தரருட் பொன்னடியே அய்யா அடிபோற்றி!
முத்தமிழிற் சொன்ன மொழியேலோர் எம்பாவாய்!

(30)
வாழ்த்துவாம் அய்யப்பன் வாழுமலை வாழியவே!
வாழ்த்துவாம் பம்பைநதி வாகையருள் வாழியவே!
வாழ்த்துவாம் நல்லடியார் வாய்மொழிகள் வாழியவே!
வாழ்த்துவாம் நல்மறைகள் வைத்தநெறி வாழியவே!
வாழ்த்துவாம் நெல்வயல்கள் வான்வளமை வாழியவே!
வாழ்த்துவாம் புள்ளினங்கள் வாழுமுயிர் வாழியவே!
வாழ்த்துவாம் நல்லோரின் வையகமும் வாழியவே!
வாழ்த்துவாம் என்றேதான் வாழ்த்துவீர் எம்பாவாய்!

Meaning

1

(1) The Son of Thirumal and Haran, Nurturing all-lives through His Five divine actions; (2) Whose divine form we call at this dawn; (3) Yet, Lo, You are, with your flowery eye-lids locked in the sleep of nescience; (4) Chocked within the fiery grief (of Samsara), O Friend! (5) Who swallowed the blue (Siva) and Who sleeps on the long snake-bed; (6) Ingesting Their potency is Their Son, (Lord Ayyappan)! Won’t you see and mellow; (7) at His divine feet! Won’t you fill your eyes with His divine vision,; (8) and thus attain the most empowering goodness and joy? Rise up, O my dear Maiden!

2

(1) Even the stones are melting at the loving voice of the blemish less devotees; (2) Those garland of words, ‘Saranam Ayyappa’ cut sunder the despair and dormant inertia; (3) O the Virtuous one, won’t you hear these good words that cleanses your heart; (4) Won’t you, to be blessed by the indwelling effulgence, manifesting as the radiant Sun at Sabarimalai; (5) Discard the deluding blanket of ignorance and; (6) Follow the virtuous path shown by the Seers! (7) O Child, shower is the benign grace of Lord Manikantan; (8) Say the holy names of the Lord, Won’t you say, Rise up, O my dear Maiden!

3

(1) May the instruments of actions, the Speech, Mind and Body, be perfect and powerful; (2) so that, our actions are virtuous! Let us plea; (3) for the fitting good answer to our questions for the virtuous faculties of embodiment; (4) may His benign grace, reveal as the subtlest of joy, the realization within the hearts of the steadfast devotees; (5) He is the Guru, His blossoming eyes the succor, the supremely precious golden jewel,
(6) Saviour of All, for the grace of Lord Ayyappan; (7) this IS the time! May you do, the penance for perfection; (8) weaving the wondrous garland of prayer, Rise up, O my dear Maiden!

4

(1) Is the deep slumber still folding the eye in its hold (of delusion); (2) Do the clutches of the past deeds still hold? (3) Is our life just to be born and dead on earth? (Is there not a greater ideal for human life?)
(4) Recoup and Reconcile! There is so much now! (5) The Supreme Lord is here in procession, He is the Lord of the Five primordial elements; (6) The Sweetest, the gracious Moon, the All-giving-Karpaga-Tree is Sri Ayyappan; His golden feet; (7) Upon Which, rest your head for soaking in the effulgent and bliss, don’t you see; (8) this is the time for the virtuous, Rise up O my dear Maiden!

5
(1) As the elixir of divinity, the Holy-name, the Lord of benign grace; (2) the Emperor and the Eternal Teacher, Sri Ayyappan; (3) Is our SAIL to transcend the grip of death and the ocean of samsara; (4) as the means to freedom (the liberation), don’t you see! (5) O Maiden, Look! There are many out there, who with their milky and sweet language; (6) compose the garland of songs, so nicely with their tongue and mouth (singing); (7) Alas, you are waning in vain by each moment of your sick slumber; (8) By singing His praise, May you prosper, O Rise up O my dear Maiden!

6

(1) Came as a Hunter,in search of milking a wild tiger; (2)(Lord Ayyappan) wandered in the woods, now reigning the wild forest; (3) Why was such a search, didn’t He know that our minds; (4) (right here) as the ever aroused and vacillating wild tiger, filled with evil qualities as wild bushes;
(5) lay barren and arid (without the rain of His benign grace); (6) May we go as devotees (seeking His arrival) with the garland of meditative Tamil;
(7) singing His glory; The compassionate Lord shall bless; (8) By joining, May we get the supreme happiness, Rise up O my dear Maiden!

7

(1) Space, within it, the Air, within the power of Air, the Light; (2) Within Light, the dews of Water that expands to grand oceans; (3) Within water the Land of universes, the earth; (4) These primordial powers are the expression of the Pranava, the sound of AUM; (5) The effulgence of AUM, giving the divine order to all is Lord Ayyappan, Who out of compassion;
(6) shows, by transcending the apparent sentience of the inert body, the effulgence of the true Self; (7) so that the forever eluding answer to the question ‘who am I’ is known, bringing goodness; (8) This day, May you sing the glory for the grace, Rise up O my dear Maiden!

8

(1) The Lord, Who is on the golden-seat and remains forever-fulfilled, (next to) Kanta Hills; (2) on which as luminous lightning His infinite lustre, the Precious Jewel Which the Scriptures; (3) reveal as the all-transcending, unknowable cause-of-all-causes and the Supreme art; (4) brother of Murugan Who rides on ornate Peacock; (5) Won’t you resolve to contemplate upon Him and (thus) be free of all despair? (6) Won’t you open your eyes and sing His glory with the garland of songs in sweet Tamil? (7) The revered father at Sabarimalai, Sri Ayyappan; (8) Having heard, sing the glory, Rise up O my dear Maiden!

9

(1) In the ebullience of churning the milky ocean, yielding the golden pot with the nectar of immortality; (2) the red-eyed Hari (in the form of enchanting Mohini) united with the potency of Lord Siva; (3) thereby, to establish and sustain dharma, Shri Dharma Sasta; (4) is here , blessing us all and being benevolent to every virtuous; (5) O Lotus, see, in this dew wrapped dawn of Margazi month; (6) with their body and mind deeply united, many devotees are worshiping; (7) together, they all say, ‘Saranam Ayyappa’; (8) Hail His glory so that the sound of reverence reverberate joy everywhere, Rise up O my dear Maiden!

10

(1) By the union of Haran, meditating under the Banyan tree and Hari, the Weaver of Maya, is the wonderful One form; (2) as the Radiant Sun tearing the delusion of darkness; (3) O the most enchanting treasure! To cut asunder the nescience; (4) Is Your solemn grace, You are the succor, the essence of Veda, its elucidation; (5) O the Son of Siva Who alternates the legs in His (cosmic) dance, O my great penance; (6) O Ayyappa, the eternal effulgence, May You reveal Your form and Thine divine feet; (7) Come hither, thus resonate sweet voices today, having heard; (8) Won’t you be inspired and mellow your hearts, Rise up O my dear Maiden!

11

(1) The sustainer of Dharma, the daily touching-grace, Who is immensely attracting; (2) Dharma Sasta, the Lord of Sabarimalai, the all-peaceful Lord; (3) riding on the blue-horse (the space), is now on the tiger, behold! (4) He is the celebrated Emperor, the dear son of Hari and Haran;
(5) At the instance of witnessing His enthralling form, His lustre fulfills our hearts; (6) He is our Saviour! Great God and in this Kaliyug, the divine treasure; (7) Having heard these soothing words, won’t you join us, my friend? (8) You have no true appraisal of your merits. (Time now to ) Earn by offering prayers, Rise up O my dear Maiden!

12

(1) It is dawn, those who sing the glory (of the Lord); (2) the followers of scriptures, have assembled singing! (3) In the drizzle of sizzling dews, the birds sing; (4) The (plants in the) gardens that have woven the flowers shed them in joy; (5) Within the hearts of those who pray to the Lord and witness His divine form; (6) is the transformation through the realization of supreme truth; this is such a good time; (7) But, Lo, You have lied and still lying in a bogus slumber; (8) Give up this delusion. Don’t’ you see the evil of such sleep, Rise up O my dear Maiden!

13
(1) Why did you say, as if you know all! (2) “O Virtuous, hereinafter everyday, by the good deeds, I will be up early at dawn; (3) for singing the glory of the Lord, the Eternal, Who is before the beginning less Veda, Who is the indwelling witness in all; (4) Who goes nowhere (as He is everywhere), Who is the gift of effulgence and bliss, Dharma Sasta, the nectar of immortality; (5) the cure to samsara; (6) the Omnipotent Ayyappan, reigning in Sabarimala, is the grandest feast; (7) Hold on, I will be by your side” – thus you spoke; (8) yet like a stone, now you are in deep slumber, don’t’ you see?, Rise up O my dear Maiden!

14
(1) Bitten by the snake of desire, loitering so long on the land; (2) for the sake of kith and kin and the pleasures of material wealth, many a toil;
(3) yet, don’ you see the futility and the impermanence of all gains, in vain? (4) The temporal pleasures that are persistently sought simply fade away; then where is true fulfillment? (5) Be learned to cognize the bliss in the indwelling effulgence; (6) as even a moment of being the true-self is blissful and this supreme gnosis is the boon of Sabarimalai; (7) Others are here taking the garland of vow; (8) Won’t you seek our Lord, the loving Mother, Rise up O my dear Maiden!

15

(1) The Sages and the Demi gods worship (at the divine feet) seeking; (2) the sweetness of the supreme truth as the boon for emancipation; (3) To recover from the clutches of the Karma (the results of our past deeds), the Supreme Lord is the true means; (4) May the Dharma Sasta, the virtuous Guru of Lord Sani and Lord Yaman, be my guide; (5) By falling at the divine feet of the mellowing Lord; (6) May all your sins evaporate at once like a dew drop; (7) Won’t you see the supremely unique, the One and Only, the Son of Lord Hari! (8) Enthralled by the vision of the bliss-eternal today, Rise up, O my dear Maiden!

16

(1) To Lord Ayyappan, Who transcends the divine 18 steps and reigns; (2) when one offers total surrender, one’s stony karmic effects dissolve! (3) (To such devotees), there is nothing to fear of their destiny! The Lord seated on the wild Tiger; (4) Offers (to such devotees) the vision with His radiance of showering grace; (5) The treasure of eternal bliss flowers at His precious divine; (6) Where we surrender, to be bestowed with the boon of happiness and prosperity; (7) To see the precious Son of Siva, the Lord wearing the crescent; (8) Escape the eluding slumber, Rise up, O my dear Maiden!

17

(1) As He is imperceptible, should we question the existence of God? (2) Are not our embodiments limited and full of contradictions? (3) Even the space-exploration (and such scientific pursuits) end in a stunned response when the first-cause is questioned! (4) “For Whom, all these are?” Should there be our quest, the secret pursuit, (5) For the Realization of the Self, are there not the scriptural revelations? (6) Lo, In vain indeed is our material knowledge and to be successful, reach the golden feet, (7) of the Lord Ayyapan, by surrendering to feet of the Guru, (8) May you realize and be one with the Lord, Rise up, O my dear Maiden!

18

(1) I know neither any Puja nor any meaning of the Scriptures; (2) even for name-sake, I have never sought the company of the learned; (3) Perhaps it is due to some virtues acts in the past or just the power of Your benevolence; (4) like a magnet attracting and animating a needle; (5) You have made me as Your steadfast devotee, as if I have been alike for many births; (6) staying at Thine divine feet; (7) O God, You have thus adopted me! O my Guru, in the exuberance of your supreme bliss; (8) You soak me; (To sing the glory of) my beloved golden-treasure, Rise up, O my dear Maiden!

19

(1) Driven by the three guna (the inherent traits) is the accumulated karma that had seeded; (2) a dense forest of dues for which misery of embodied life persists; (3) binding in the cycle of birth and death – the ocean of samsara; (4) The sail that helps to cross the ocean of samsara and the fire of grace that set ablaze the forest of karma; (5) giving the boon and forever being the mysterious gift; (6) as the indwelling consciousness, the subtlest of all; (7) is the Ruler, Benevolent Teacher, Reigning from the Sabarimalai, Lord Ayyappan; (8) Be the succor and to sing (His glory), Rise up, O my dear Maiden!

20

(1) O Friend, Don’t you see the Supreme Lord, Reigning at the banks of Pamba river; (2) Who is the cure for all ailments; (3) the Son of Sri Narayanan, the darling of Supreme Siva; (4) The true import of eternal Veda; (5) Who is seated in front, as the absolute bliss, and in loving anticipation of His devotees; (6) (Won’t you) See the divine form of the Lord and surrender at His divine feet; (7) hailing in reverence ‘Saranam Guruve Saranam’; (8) Won’t you come my friend, All prosperity are hither, Rise up, O my dear Maiden!

21

(1) We endeavour to get the objects of joy only to see those go; having thus toiled; (2) for long, thinking that happiness is only in external objects; (3) we see true fulfillment is found to be forever elusive; (4) Is life just this kind of loitering in utter ignorance? (5) What is the point of knowledge if it cannot lead to fulfillment? (6) By focusing on the indwelling effulgence; (7) The Eternal Witness, our Lord Ayyappan; (8) Get hold of His Divine Feet, Sing His Glory, O Rise up, O my dear Maiden!

22

(1) Forever being endowed with healthy body and unwearied organs of perceptions; (2) with words sweet and truthful, mind steadfast and intellect sharp; (3) surrounded day and night, by the virtuous and loving family and friends; (4) and the abundance of wealths, we are by your grace, O Lord, the all-granting celestial Karpaga Tree! (5) O Omnipotent! Luminous Light! The cause of all diversity, O Ayyappa! (6) May I be free from this sleep of nescience, blinding the true vision! (7) May You show me the Infinite! May we sing Your glory; (8) for the boon of success, pray, Rise up, O my dear Maiden!

23

(1) The crescent moon is bashful (and dims) at the sight of the rising Sun in the East; (2) It is the dawn, Time of happiness that pervades by the Lord of Erumeli Who protects. (3) Our Lord, the darling Son of Siva, the king of Kings; (4) Lord Ayyappan, Who is always compassionate to the poor and helpless; (5) Whoever surrenders to His divine feet, will know the truth, the true-self; (6) By which all the accumulated karmic-impacts are rid and they excel! With the divine names; (7) They weave the garland for worship and attain happiness! (8) Don’t defer to another day! Prosper today, Rise up, O my dear Maiden!

24

(1) O Lord in the most enchanting form, O grace filled precious elixir, King Manikanta! (2) Joyful are the devotees who You attract to fall at Your divine feet. (3) You are the long sword that cut asunder all laden weight of karma, accumulated by ignorance; (4) You are the gracious beauty to heed all and bless all; (5) You mercifully accept, the bone-melting songs of the devotees that sing your glory! (6) O the all-giving celestial tree atop the 18-divine steps; (7) May You remove my delusion, O the grace-auspicious, the elixir at Sabarimalai! (8) To be soaked in this joy, Awake! Rise up, O my dear Maiden!

25

(1) You are the sacred Mantra, the esoteric of essence of Veda; (2) You are the Tantra, the occult import of rituals; To save us, as Mother; (3) May You come at once and show mercy! As we seek Your presence; (4) You blossom in every forms, the instrumental omnipresence in all! (5) At Thine feet is Lord Indra worshipping – O Dharma Sasta; (6) May Your gracious eyes bestow upon me and protect – thus I seek; (7) May You grant the purity in mind that forever dwells in Your glory! (8) Pray for the great boon,O Rise up, O my dear Maiden!

26

(1) You are the glorious Mother, great Guru Who bestowed grace upon Yama, the Lord of Death; (2) Your golden feet grants the boundless joy, the fulfillment! (3) Alas, what is now, don’t You have enough time to extend mercy on the devotees? (4) Are these prayers not enough to redeem Your grace? (5) You are the shower of pure love, Milky Moon of compassion, Thus I have learnt! (6) To the devotees in hunger, at once You are as their sumptuous food! (7) Yet, O Dharma Sasta, have You slightly forgotten me? (8) Never will I leave You, forever relying on Thine divine grace! To sing, Rise up, O my dear Maiden!

27

(1) How much of good deeds must I have done, in order for this engagement today; (2) praising the Dearest, the ocean of compassion, Lord Ayyappan;
(3) with my mind, body and words all steadfast at His glory; (4) O Dear, O my Father, O Graceful Omniscience and thus in wonder; (5) singing sweetly in joy of ecstasy and daily worship; (6) May the tips of Your graceful eyes bestow upon me, granting such pure devotion! (7) Fallen as the seed deep in my heart and rooted to grow, You are the Supreme Truth to be unravelled! (8) To seize the pearl of the true-Self, dive and try, Rise up, O my dear Maiden!

28

(1) Impoverished I am, yet what pious acts of mine for now to be blessed;
(2) filling the cup (of my heart) to overflow with the richly scented flowers of regal Tamil; (3) this garland of verses You have composed hiding right inside my heart! (4) You gave the chit of divine order, freeing me from the delusion; (5) my task hereinafter is to speak Thine truth and glory; saying thus; (6) You let me in the garden (of Bhakti) where Your benign grace is fanning the cool breeze; (7) Your gracious milk feeding, O Lord, I am eternally fulfilled! (8) Holding Your feet, won’t you see the surrender, Rise up, O my dear Maiden!

29

(1) Victory to the divine feet of the Lord, The subtlest and boundless bliss of non-duality; (2) Victory to the divine feet of the Lord, The salient truth of pure Veda; (3) Victory to the divine feet of the Lord, the precious Son of the incomprehensible Siva; (4) Victory to the divine feet of the Lord, seated atop the 18-steps of great Sages; (5) Victory to the divine feet of the Lord, the Greatness-eternal; (6) Victory to the divine feet of the Lord, the cool sweetness-overflowing ocean of grace; (7) Victory to the divine feet of the Lord, The Golden saviour of devotees; (8) May this virtuous Tamil be heard, Rise up, O my dear Maiden!

30

(1) Pray, May the divine hill, the abode of Lord Ayyappan be prosperous; (2) Pray, May the holy river of Pampa, flowing the grace of Lord be prosperous; (3) Pray, May the virtuous devotees who speak the true words be prosperous; (4) Pray, May Dharma, the righteous ways of great Veda, be prosperous; (5) Pray, May the fields of grains and the nurturing forces of nature be prosperous; (6) Pray, May the birds, animals and all living beings be prosperous; (7) Pray, May the World as a place of divinity and for the good, be prosperous; (8) Pray, forever to be prosperous, Rise up, O my dear Maiden!

Related Posts

Share this Post