திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புநாதாஷ்டகம்

ஸ்ம்ஸ்கிருத மூலம் – ஸ்ரீதர வெங்கடேசுவர அய்யாவாள்)

கஸ்சந ஜகதாம் ஹேது: கபர்த3 கந்தலித குமுத3 ஜீவாது:
ஜயதி ஞானமஹீந்து3: துர்ஜன்ம ம்ருத் க்லாந்திஹர த3யாபிந்து: || 1 ||

ச்ரிதப்4ருதி-ப3த்43பதாக: கலிதோத்பலன மதோ3த்3ரேக:
அகி2லாண்ட3மாதுரேக: ஸுக2யத் வஸ்மாம்ஸ் தப: பரீபாக: || 2 ||

கஸ்கன காருண்யஜ4ர: கமலாகுச கலசக்க்ஷண நிசிதசர:
ஸ்ரீமான் த3மித த்ரிபுர:ச்ரித ஜம்பூ3 பரிஸரஸ் சகாஸ்து புர:  || 3 ||

சமித ஸ்மர த3வவிஸரச் சக்ராத்3யாசாஸ்ய ஸேவனாவஸர:
கரிவன க4னபா4க்யப4ரோ கி3ரது மலம் மம மனஸ்ஸரச்சப2ர: || 4 ||

கி3ருஹிணீ க்ருத வைகுண்ட2ம் கே3ஹித ஜம்பூ3மஹீ ருபகண்டம்
தி3வ்யம் கிமப்யகுண்டம் தேஜ: ஸ்தாத3 ஸ்மத3வனஸோத் கண்டம் || 5 ||

க்ருதசமன த3ர்பஹரணம் க்ருதகேதர பணிதி சாரித ரத2சரணம்
சக்ராதி3  ச்ரித சரணம் சரணம் ஜம்பூ3  த்3ருமாந்திகாப4ரணம் || 6 ||

கருணாரஸ வாரித4யே கரவாணி நம: ப்ரணம்ரஸூரவித4யே
ஜகதா3நந்த3 து4னிநித4யே ஜம்பூதருமூல நிலய சந்நித4யே || 7 ||

கஸ்சன சசிசூடா3லம் கண்டேகாலம் த3யைகமுத்கூலம்
ச்ரித ஜம்பூ3தருமூலம் சிக்ஷிதகாலம் ப4ஜே ஜகன்மூலம் || 8 ||

அகிலவுலகக் காரணம் அரைமதிமுடி வாரணம்
ஜனனமரண நிவாரணம் ஜயந்தருகரு ணாகரம்! (1)

அடியரபயக் கொடிவரம் அருட்குளிர் மதிசிரபுரம்
அகிலஅரசி தவமயம் அருளவேண்டும் சிவமயம்! (2)

அரியுமுனது திரிபுரன் அசுரனழித்த ஆயுதம்
விரியுங்கருணைச் சாகரம் வீற்றநாவல் என்மனம்! (3)

வனத்தீயாசை அறுத்தனை வானரானை வனத்துதி
மனத்தீயாசை குளத்தினில் மாசகற்றும் மச்சமே! (4)

அரியின்சக்தி நின்சதி அமருநாவ லதிபதி
எரியுஞான ஒளிஎமை ஏற்குமாசை ஏற்கவே! (5)

காலன்மமதை வெட்கிடும் கதிருன்ரதத்துச் சக்கரம்
பாதமமரர் சிரம்படும் பரமனேகும் நவமரம்! (6)

அருட்கடற் சுகவாரியே அமரரய னதிகாரியே
நருட்புனல் வடிவாகிய ஜம்புநாதனே நமஸ்காரம்! (7)

மதிமுடியரே விடகண்டரே மாகருணை யுருபோற்றி!
விதிமுடியரே கதியருள்வரே விரிநாவற் கருபோற்றி! ( 8)

Related Posts

Share this Post