துதிப்பூக்கள்

 

ஸ்ரீ ரங்கநாதர்


மின்னுமணி நந்நகையும் மேலங்கி மாலையொளி
மிளிர்வைர வைடூ ரியம்
மெருகுமர கதம்முத்து மாலைகளும் செம்பவளம்
மிசையொளிர் நீல நிதியம்

பொன்னுமணி யாரமிடை புட்பரா கத்திரளும்
புலரும்அருட் கோலம் இதயம்
புகுந்தென்னை ஆட்டுமிது போலவிளை யாட்டிலருள்
போதிக்க வந்த ஹரியே!

இன்னலறு அண்ணலுன தின்னடியை என்னுளிடு
இரங்கபுரத் தங்க நிலவே!
இன்பவுரு வாலரங்க மெங்குபர மானந்தம்!
என்றைக்கும் உள்ள வடிவே!

என்னுயிரா யானவனே! கண்ணின்மணி மாதவனே
நின்னடிக ளெந்தன் வேதம்!
முன்னிலிரு! நாரணனே! முக்தியருட் காரணனே
முதலே! ஸ்ரீ ரங்க நாதா!

மீ. ரா
05/12/2021

 

கபாலீஸ்வரர் ஆலயம்

Kapaleeshawar“மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் முழுவதும் நிரம்பி கோயிலின் பிம்பம் குளத்தில் தெரியும் கண்கொள்ளாக் காட்சி. இப்படத்தில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. எது பிம்பம் என்று நினைக்கிறீர்களோ அது தான் நிஜம். படத்தை தலைகீழாக திருப்பிப் பார்க்கவும்.”

கற்பகத்தாய் அன்புருகிக் காதலினால் ஒன்றிவிடும்
அற்புதந்தான் இவ்வர்த்த நாரீசர்! – பொற்பதியும்
நல்மயிலை நின்றாள் நலமிணையும் காபாலீ
சொல்தலைகீ ழானதேன் சொல்!

Mother Karpagaambal, moved by immense love merged In this wonderful form of Ardhanaarisvara. – Endowed in Gold Prosperous Mylapore-standing Mother, blissfully uniting O, Kapileshwara Why showing this inverted form, Tell.

புரிகிறது! மாயவருள் பூத்தவுமை யாலே
விரியுலகு ஆனவிளை யாடல்! – தெரிகிறது
தோற்றப் பிழைகாட்டித் தொல்வினை நீக்கியருள்
ஆற்றலென் அம்மா! அருள்!

I understand! Mother Uma, with the grace of Maayaa Makes the ever expanding Universe as a play! – I realize! By weaving the illusory appearance, You rid our ancient burdens of Karma! You are that Power, My Mother, Please bestow Thine Grace! Rajja 01/12/2021

 

வாழ வைத்த அனுமன்

 
பூவாழ அருளவெனப் பூவாழை சாற்ற
புளகாங் கிதத்தாலே கனிவாழை சாற்ற
கஸ்தாரி வாழையிலுன் காலடிகள் பூக்க
கண்டைக்கால் தேன்வாழைக் காவலென ஆக்க
முழந்தாளில் மொந்தைநல் வாழைவள மாக்க
முதலான தொடையின்பச் சடைவாழை யாக்க
வல்லிடையில் ஏலக்கி வாழை உடையாக்க
வைரமணி வயிற்றில்ரஸ் தாளி படையாக்க
மலைவாழை மார்பகத்து மாலையெனப் பூக்க
மணி்க்கழுத்தில் கற்பூர மரவாழை நோற்க
முதுகினிலே பேயனொடு மொந்தன் வரவேற்க
முகக் காந்திச் செவ்வாழை முன்னிருந்து காக்க
நேத்திரத்தில் நேந்திரமும் நெற்றிவடி வாக
சாத்திரமும் பொன்வாழைச் சரளமணி யாக
முண்டாசில் பச்சையொடு மட்டியினி தான
கண்டாரும் இச்சைமிகக் கட்டிவிளை யாடக்
கொண்டாடும் அனுமந்தக் குருவுனையே கண்டோம்!
கண்டாளும் நின்கருணைக் காலமுதம் உண்டோம் !
மீ. ரா

 


 

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் – ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

தகித்து அருளொளியில்
தகதகக்கும் தாயாரை
வகித்துத் துணையடையும்
வசதிக்கோ என்அப்பா
சுகித்துநீர்க் குளிரூடிச்
சுடர்நாவல் நிழலூடி
உகுத்திருப் பாய்!இன்றோ
உற்சவத்தில் வெளிப்பட்டாய்!

அப்பாநீ வள்ளல்!
அருட்கடலின் பேராழம்!
எப்போவுன் சக்தி
எனதன்னை அகிலாண்டாள்
தப்போ டிருந்தாலும்
தனயனெனைத் தாலாட்டக்
கொப்போடு வருவாள்?
கூறாய்கரிக் காநாதா!

(For able to embrace my mother ‘Sri Akilandeshwari’, the ‘hot’ glittering grace of radiance, O Ishvara, my Father, You remain forever bathing in the cool-water under the luminous shades of Jambu Tree!

You are ever generous, O deep ocean of grace! May you reveal when is that Your Power, Sri Akilandeshwari, even though I am sinful, is due to come to me as my mother with the bouquet of flowers of grace and to sing me lullaby, Oh the Lord of Thiruvanikka?)

மீ. ரா

Related Posts

Share this Post